Powered By Blogger

Friday, 25 December 2015

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.

வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல்,     தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source:தினகரன் நாளிதழ்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு 26-12-15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   26-12-15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி 

📚அன்பான வேண்டுகோள்📚

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே திருப்பத்தூர் ஒன்றியத்தில் உதவி தொடக்க அலுவலர்கள் ஆலோசனையின்படி சில ஆசிரியர்கள் இணைந்து நடைபெற இருக்கும் NMMS தேர்வுக்கு  நாளை 26-12-15 முதல்  31-12-15 வரையில்  VSV நகராட்சி பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 3.30  வரை சிறப்பு பயிற்சி வழங்க உள்ளனர். எனவே இந்த பயிற்சிக்கு திருப்பத்தூர் ஒன்றிய அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்களது மாணவர்களை  அழைத்து வந்து பயன்பெற வேண்டுகிறோம். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைவார்கள் என தெரிகிறது.
அன்புடன்.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்.
செய்தி: ALL TRS TN.. Siva.
கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்
www.alltrstnsiva.blogspot.in
உடன்:- மு.சிவக்குமார், ப.ஆ.
திருப்பத்தூர்.

Thursday, 24 December 2015

3 ஆம் பருவத்திற்குரிய பாட புத்தகங்களையும் , பாட ஏடுகளையும் பெற்று பள்ளியில் தயார் நிலையில் வைக்கவும் , பள்ளி வளாகத்தை 2/1/2016 அன்று தூய்மையுடன் பேணவும் தொ.க.இ அவர்களின் செயல்முறைகள்

3 ஆம் பருவத்திற்குரிய பாட புத்தகங்களையும் , பாட ஏடுகளையும் பெற்று பள்ளியில் தயார் நிலையில் வைக்கவும் , பள்ளி வளாகத்தை 2/1/2016 அன்று தூய்மையுடன் பேணவும் தொ.க.இ அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:


குரூப்-1 பதவிகளுக்கு காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி நடத்தியது.நவீன இயந்திரங்களைக் கொண்டு லட்சக்கணக்கான வினாத்தாள்களை விரைவாகதிருத்தம் செய்து, ஒரு மாதத்தில் முடிவுகளை வெளியிட முடியும். ஆனால், தேர்வு முடிவு தள்ளிப் போவதால், 30 வயதைக் கடந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.


எனவே, கடந்த நவம்பரில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை ஒரு மாதத்துக்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி}க்கு என கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு

அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான,எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது;


இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா, அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.இந்தஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது. மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம்,எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்.

முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை இரண்டாம்பருவத் தேர்வுகளுக்கானப் பாடங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. 


மழைவெள்ளம் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட வேண்டிய அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்துக்கானப் பாடங்கள் ஜனவரி முதல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லாப் பாடப் புத்தகங்களும், நோட்டுகளும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து டிசம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். அவற்றை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு ஜனவரி 1-ஆம் தேதியே அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மீலாது நபி, கிறிஸ்துமஸ் விடுமுறை நிறைவடைந்து, ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவியரிடம் மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப் புத்தகம், நோட்டுகள் இருக்க வேண்டும் என மாநிலக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

:பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சியரிடம் வலியுறுத்தல்

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சியரிடம் வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் சங்கத்தினர் ஆட்சியர் இ.வல்லவனை சந்தித்து வலியுறுத்தினர்.காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர்தலைமையில் சங்கத்தின் இணைச் செயலர் ஆர்.சி.வேல்முருகன், காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் காளிதாசன் உள்ளிட்டோர் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்த கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 


தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2-க்கான அரையாண்டுத் தேர்வுநடைபெறுகிறது. மாவட்டத்தில் திருநள்ளாறு, தேனூர், அம்பகரத்தூர் ஆகிய அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பொருளாதாரம், கணக்கு பாடத்துக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிகழ் கல்வியாண்டு தொடங்கியது முதல் காலியாக உள்ளன.காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரஸா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பிரெஞ்ச் பாடத்துக்கும், ஹோம் சயின்ஸ் பாடத்துக்கும் ஆசிரியர்கள் இல்லை. பிளஸ் 1-ல் கோட்டுச்சேரிவ.உ.சி. பள்ளி, தலத்தெரு என்.எஸ்.சி. போஸ் பள்ளி, நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு மேல்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, அம்பகரத்தூர், திருநள்ளாறு, தேனூர் அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாதநிலை உள்ளது என ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.கோரிக்கை தொடர்பாக ஆட்சியரை சந்தித்து திரும்பிய சங்க நிர்வாகிகள்,"மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதுச்சேரி கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும்,10-ஆம் வகுப்பில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக எடுக்கப்படும் எனவும்' ஆட்சியர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்
ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 


''தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான்ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர்.அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழக அரசு, நியமனநடைமுறையிலும் மாற்றம் செய்தது.


அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது.தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியானவினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது.15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது.அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர்.தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் வெயிட்டேஜ் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது.இதற்கெல்லாம் மேலாக வெயிட்டேஜ் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை.


வெயிட்டேஜ் மதிப்பெண்முறை காரணமாக தகுதித்

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. அதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போது மாத சம்பளம் ரூ.50 ஆயிரமாக உள்ளது. 


இதனை ரூ.1 லட்சமாக உயர்த்தவும், தொகுதி அலவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ90 ஆயிரமாக உயர்த்தவும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது. இதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

SLAS Test மாதிரி வினாத்தாள்..வகுப்பு 5

SLAS Test  மாதிரி வினாத்தாள்..வகுப்பு 5


 அடைவு திறன் தேர்வு, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு,
ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக இந்த தேர்வு நடைபெறும்.


SLAS Test என்றால் என்ன?

SLAS Test என்றால் என்ன?
மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடுஅரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம்நிர்ணயம் செய்யப்படுகிறது.


தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா,அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது.மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இணைப்பு நகல்.!

கல்விச் செய்தி: RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


NMMS MAT QUESTION

DEAR TRS NMMS MAT QUESTION HERE
 PLS DOWNLOAD
 FOR VIII STUDENTS NMMS EXAM 


Tuesday, 22 December 2015

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது
தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.மத்திய அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழு மிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. 


டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வதுசனிக்கிழமை என்பதால் விடுமுறை.தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. மேலும் கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.நீண்ட நாட்கள் விடுமுறைக்கு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தான்பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்வங்கிகளும் 4 நாட்கள் செயல்படாது என்பதால் பொதுமக்களுக்கு சற்றுசிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்

பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்
பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இவர்கள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 8 வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நாளுக்குப் பின்னர் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெறலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SLAS TEST DATE ANNOUNCED!!!

SLAS TEST DATE ANNOUNCED!!!

SLAS TEST DATE ANNOUNCED

5.1.16-Tamil, maths-3 & 5 th std
6.1.16-English -3 & 5 th std

7.1.16-Tamil. Maths-8 th std
8.1.16-Eng.-8 th std

TNPSC DEPARTMENTAL EXAM PREPONED (மீலாது நபி )துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

TNPSC DEPARTMENTAL EXAM PREPONED (மீலாது நபி )துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
மீலாது நபி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் புதன்கிழமை (டிச. 23) நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது.தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. 
மீலாது நபியையொட்டி, வியாழக்கிழமை காலை-மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுறைத் தேர்வுகள், ஒரு நாளைக்கு முன்பாக புதன்கிழமையே (டிச. 23) நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை. இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:

*.பதிலில் தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

*.விண்ணப்பதாரர் கோரிய தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றால், அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

*.மற்றொரு தகவல் அளிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பம் மாற்றப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

*.பதிலை முடிப்பதற்கு முன்பாக, தகவல் கோரி முதல் முறையாக விண்ணப்பித்திருந்தாரா, மேல்முறையீடா என்பதை தெரிவிக்க வேண்டும்.

*.ஆவணங்களில் சான்றொப்பம்: ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இவை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்து அதில் தேதி, அவற்றை அளிக்கும் தகவல் அதிகாரியின் பெயருடன் அடங்கிய முத்திரை, பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடு சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்

ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்
ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்

ஆதார்' அட்டை கணக்கெடுப்புக்கு 'பெல்' நிறுவனத்தின் கீழ் 640 மையங்களில், ஒப்பந்த நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6.23 கோடி பேருக்கு புகைப்படம், கைரேகை, கருவிழி விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதில் 5.63 கோடி பேருக்கு 'ஆதார்' அட்டை வழங்கப் பட்டுள்ளது. 2016 மார்ச்சுக்குள் 100 சதவீத பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சேவை மையங்கள் மூலம் 'ஆதார்' அட்டை பெற, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஜன., 18 முதல் பிப்., 5 வரை தமிழகத்தில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரித்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு 'ஆதார்' அட்டை வழங்குவது உறுதி செய்யப்படும்.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.1 கோடி. கடந்த 2001ல் இது, 102.2 கோடியாக இருந்தது, என்றார்.

ட்ரோல், டீசல் விலை குறைவு எதிரொலி: கிலோ மீட்டருக்கு 39 காசு என்ற அளவில் ஆட்டோ கட்டணத்தை குறைக்க ஐகோர்ட்டு உத்தரவு; 1–ந் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை

பெட்ரோல், டீசல் விலை குறைவு எதிரொலி: கிலோ மீட்டருக்கு 39 காசு என்ற அளவில் ஆட்டோ கட்டணத்தை குறைக்க ஐகோர்ட்டு உத்தரவு; 1–ந் தேதி முதல் அமல்படுத்த நடவடிக்கை
பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், 1-ந் தேதி முதல் கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ‘கோயம்புத்தூர் நுகர்வோர் குரல்’ என்ற அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘சென்னை மாநகருக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்தது போல, கோவை மாநகருக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. ஐகோர்ட்டு உத்தரவு

இந்த வழக்கு விசாரணையின்போது, கோவையில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி 8 நிபந்தனைகளுடன் ஒரு உத்தரவுகளை பிறப்பித்தனர்.நிபந்தனைகள்

அதில், பெட்ரோலிய எரிப்பொருட்களின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்யவேண்டும். அந்த கட்டண விவரங்கள் பயணிகளுக்கு நன்கு தெரியும்படி, ஆட்டோவில் எழுதி வைக்கவேண்டும் என்பது உள்பட 8 நிபந்தனைகள் விதித்து இருந்தனர்.

ஆனால், இந்த 8 நிபந்தனைகளை அமல்படுத்தவில்லை என்று கூறி அரசு போக்குவரத்து ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மனுதாரர் சங்கம் தாக்கல் செய்தது. மறு ஆய்வு மனு

அதேபோல, அரசு போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் மறுஆய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஐகோர்ட்டு விதித்துள்ள 8 நிபந்தனைகளில் 7 நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. அந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த 2 மனுக்களையும் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து தமிழக அரசில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தனர். பதில் மனு

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை ஆணையர் சத்தியபிரதா சாகு பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆட்டோ கட்டணத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அப்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.27 ஆக இருந்தது. அதனால், முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 என்றும் அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 37 முறை விலை மாற்றம்

அதாவது ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல 35 சதவீத எரிபொருள் செலவாகும். ஆனால், அதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை 37 முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.60.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையில் பார்க்கும்போது, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு தோராயமாக 24 ரூபாயும், அதன்பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.11.50 என்றும் நிர்ணயம் செய்யவேண்டும்.

ஆனால், இப்போது மாதந்தோறும் எரிப்பொருட்களின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. விலை நிர்ணயத்தில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் நிலவுகிறது. 39 பைசா

தற்போதுள்ள எரிப்பொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் இல்லை. சரியாக சொன்னால், ஒரு கிலோ மீட்டருக்கான கட்டணத்தில் 39 பைசாவை மட்டுமே குறைக்கவேண்டும். இந்த சிறு தொகை மாற்றத்துக்காக, கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டால், ஆட்டோ மீட்டரில் பொருத்தப்பட்டுள்ள கட்டணத்தை மாற்றியமைக்கவேண்டும். அவ்வாறு மாற்றியமைக்க காலஅவகாசம் வழங்கவேண்டும். அந்த காலக்கட்டத்தில் பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணத்தை சிலர் வசூலிக்க வாய்ப்புள்ளது. தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.12 என்று வசூலிக்கப்படுகிறது. எரிப்பொருள் விலைக்கு ஏற்ப ரூ.11.61 என்று குறைத்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். பழைய கட்டணம்

மேலும், ஆட்டோவின் விலை, பராமரிப்பு செலவு ஆகியவை அதிகரித்துள்ளதையும் கணக்கில் கொள்ளவேண்டியதுள்ளது. எனவே, ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்காமல், தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தையே தொடர்ந்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த ஐகோர்ட்டு விதித்துள்ள 8 நிபந்தனைகளில், 3 மாதங்களுக்கு ஒருமுறை எரிப்பொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை த