Powered By Blogger

Saturday, 2 January 2016

ALL TRSTN: தொடக்கக் கல்வித்துறை :கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவு

தொடக்கக் கல்வித்துறை :கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவு
கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011 ஜன.,1 க்குப்பின், தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும்.ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது.



             இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது. இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு: இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ALL TRS TN :- பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு பின், பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு பின், பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில், 2002ம் ஆண்டு வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு, பணிநியமன ஆணையிலேயே, அதுமுறையான நியமனம் எனக்குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. கடந்த, 2002-04 வரை, அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணிநியமனம்செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும், 2006ம் ஆண்டுக்கு பின் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அப்போது, அதற்கான பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையைஎடுத்துக்காட்டாக வைத்து, ஒவ்வொரு பணிநியமனத்துக்கும் துறை சார்ந்த அதிகாரிகள் பணிவரன்முறை ஆணை வெளியிட வேண்டும் என வலியுறுத்த தொடங்கினர்.


இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் நிலுவையில் வைக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு பின், தற்போதுதான், 2009-10, 2010-11 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்ற, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள்கூறியதாவது: தகுதித்தேர்வின் மூலம் நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு, பணிநியமனத்தின் போதே, பணிவரன்முறை குறித்தும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யாததால், ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தலைமை ஆசிரியர்கள் வழங்குவதில்லை. பல ஆண்டு கழித்து, இப்போதாவது பணி வரன்முறை ஆணை வந்துள்ளதே என, ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ALL TRS TN . SIVA

ALL TRSTN: கருவூல சேவையைப் பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண் வழங்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

கருவூல சேவையைப் பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண் வழங்க வேண்டும்: ஆட்சியர் தகவல்
இணையதளம் மூலமாக கருவூல சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

 தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஒவ்வோர்  ஆண்டும்  மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் நேர்காணலுக்கு வர வேண்டும்.   மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம், நிலுவைகள் போன்றவற்றை கருவூலங்கள் மூலமாகப் பெற்று வருகின்றனர்.


 குடும்ப ஓய்வூதியதாரர்களும் தங்களது வாழ்வுக் கால நிலுவைத் தொகை, குடும்ப நலநிதி, ஓய்வூதிய நிலுவைகளை மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மூலமாகப் பெற்று வருகின்றனர். இதுதவிர ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெறுவதும் கருவூலங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது.

 நேர்காணல் மூலமாக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் நிலுவைத் தொகை, இறந்த அரசு ஊழியர்களின் குடும்ப நலநிதி பெறுதல், ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 ஓய்வூதியதாரர்கள் தங்களின் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு அரசு இணையதளம் மூலமாக ஏற்பாடுகளை செய்யவுள்ளது. அற்காக ஆதார் எண்கள் பெறப்பட்டு ஓய்வூதியர்களின் விவரங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

 இனிவரும் காலங்களில் நேர்காணல், இதர ஓய்வூதியர் தொடர்பான பயன்களுக்கு சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு வருவதற்குப் பதிலாக இணையதளம் மூலமாக வசதிகளைப் பெறுவதற்கு தங்களது ஆதார் அட்டை எண் விவரங்கள் ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கொடுப்பாணை எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகிறது.  

 இதுவரை தங்களது ஆதார் எண்களை மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் வழங்காத மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் மாவட்டக் கருவூலம், சார் கருவூலங்களுக்கு விவரங்களை நேரிடையாகவோ, (கருவூல அலுவலர், மாவட்டக் கருவூலம், ஈரோடு) தபால் வழியாகவோ, ஓய்வூதியர் பெயர், ஓய்வூதியக் கொடுப்பாணை எண், ஓய்வூதியம் பெறும் கருவூலம், சார்நிலை கருவூலம், ஆதார் அட்டை எண் ஆகிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

 மேலும், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்கள் பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்கள், ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகம், ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 இதைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்கள் பெற்று ஈரோடு மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலத்தில் இருந்து வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ALL TRS TN :- விண்ணப்பித்துவிட்டீர்களா..? கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உதவியாளர் பணி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உதவியாளர் பணி

 இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:


பணி: Scientific Assistant (Health Physics)
காலியிடங்கள்:04 (PWD-HH).
பயிற்சி கால அளவு:18 மாதங்கள
்சம்பளம்:பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Grade I (Finance & Accounts)
காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).
பணி: Assistant Grade I (Human Resources)
காலியிடங்கள்: 02 (HH)
சம்பளம்:மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயதுவரம்பு:19.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ. 20-க்கு உணவு வகைகள்

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ. 20-க்கு உணவு வகைகள்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்' என்ற பெயரில் உணவகங்களை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கி உள்ளது. இந்த உணவகத்தில் அனைத்து உணவு வகைகளும்ரூ.20-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.



இந்த உணவகம் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் இயங்கும். அத்துடன்,அனைத்து மாநில உணவு வகைகளும் ரூ. 20-க்கும் குறைவான விலையில் கிடைக்கும்.இதுதவிர, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவையும் இந்த உணவகங்களில் கிடைக்கும்.சுத்தமான குடிநீரும் இந்த உணவகங்களில் இலவசமாக வழங்கப்படும். 

ALL TRS TN..SIVA

All Trs Tn:- அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்
கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை கல்வித்தர அடைவு சோதனை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வ.மல்லிகா தெரிவித்ததாவது:


தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வித்தர அடைவு சோதனை வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இச்சோதனை நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வோர் ஒன்றியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு 10 பள்ளிகளும் 15 மாணவர்களுக்கு 6 பள்ளிகளிலும், 1 ஆங்கில வழிப் பள்ளியிலும் மொத்தம் 16 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் இச்சோதனையை நடத்த வேண்டும். இதேபோல், 8-ஆம் வகுப்புக்கு 10 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடைவுச் சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALL TRS TN:- புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


ஒருவேளை புத்தாண்டு அன்று பணிக்கு வர ஊழியர்கள் தவறும் பட்சத்தில் அன்றிலிருந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் தள்ளிப்போகலாம்.முன்னதாக, துணை ராணுவப் படையும் தங்களது அதிகாரிகளிடம், புத்தாண்டு தினத்தில்விடுப்பு எடுத்தால், மீண்டும் பணியில் சேரும் நாளில் இருந்தே ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்திருந்தது. 

TET TRB TNPSC Study Materials -Free Online Tests Available Here. SLAS - Periodic Te

TRB TNPSC
TET TRB TNPSC Study Materials -Free Online Tests Available Here.
SLAS - Periodic Test Study Materials, Questions & Answers.

ALL TRS TN.. Siva

Friday, 1 January 2016

வெள்ள நிவாரணப் பணிகள் : எஸ்எம்எஸ்-சில் விவரங்கள்

வெள்ள நிவாரணப் பணிகள் : எஸ்எம்எஸ்-சில் விவரங்கள்





வெள்ள நிவாரணப் பணிகளை கணக்கெடுத்த குழுவினர், பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ்-ஐ அனுப்பியுள்ளனர்.



பெயர், முகவரியுடன் வங்கிக் கணக்கு பொருந்தாத நபர்களுக்கு இது குறித்து முழு விவரங்களை அனுப்புமாறு கேட்டு வெள்ள நிவாரணப் பணிகளைக் கணக்கெடுத்த குழுவினர் அனுப்பியுள்ளது.



அந்த குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவர்கள் உடனடியாக 9840131067 என்ற எண்ணுக்கு முழு விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், நிவாரணப் பணி கணக்கெடுப்பின் போது வங்கிக் கணக்கை அளிக்காத நபர்களும், இந்த எண்ணுக்கு முழு விவரத்துடன் வங்கிக் கணக்கு எண்ணையும் அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

PRIMARY CLASS.. SLAS BLOCK/ DISTRICT WISE SCHOOL LIST AND INVIGILATORS NAME LIST


PRIMARY CLASS.. SLAS BLOCK/ DISTRICT WISE SCHOOL LIST AND
 INVIGILATORS NAME LIST


CLICK HERE PRIMARY SCHOOLS SLAS TEST


SLAS - INSTRUCTIONS TO BE FOLLOWED WHILE CONDUCTING SLAS EXAM 2016 - PROC


SLAS - INSTRUCTIONS TO BE FOLLOWED WHILE CONDUCTING SLAS
 EXAM 2016 - PROC

SLAS TEST INSTRUCTION PRIMARY- UPPER PRIMARY.



Thursday, 31 December 2015

தமிழகத்தில. உள்ள அனைத்து உயர் தொடக்க பள்ளிகள் LIST SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்படட்டுள்ளது.

தமிழகத்தில. உள்ள அனைத்து உயர் தொடக்க பள்ளிகள் LIST
 SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்படட்டுள்ளது. அதன் விவர


Upper primary schools.. SLAS TEST..TN

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் (திருத்தப்பட்டது) திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது திருத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு... (இது இறுதியான பட்டியல்)

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் (திருத்தப்பட்டது)
திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது திருத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு... (இது இறுதியான பட்டியல்)

By..SSA TIRUPATTUR., DT.31-12-15.


3 மற்றும் 5 வகுப்புகள் தேர்வு நடைபெறும் பள்ளிகள்:மற்றும் பார்வையாளர்கள் 
1. PUMS PUDHUR MARIMANIKUPPAM - 3rd ENGLISH Medium and 5th TAMIL Medium...SARALA..BRT
2. PUPS ANDIYAPPANUR - 3rd ENGLISH.. Medium and 5th TAMIL Medium...SEEMA..BRT
3. ADWPS KARUPPANUR - 3, 5...PARTHIBAN..BRT
4. PUPS BOMMIKUPPAM -3, 5..JEEVITHA..BRT
5. APS PALLAVALLI - 3, 5...NAGARAJ..SPL TRS
6. PUMS KATHIRIMANGALAM - 3, 5...SUMATHI..SPL TRS
7. PUPS VENKATESAPURAM - 3, 5..MEGANATHAN..BRT
8. PUPS SAMUTHIRAM - 3, 5...ARUNKUMAR..BRT
9. PUPS ACHAMANGALAM - 3, 5...SARKKI..BRT
10. PUMS KAVARAIYUR - 3, 5..SRINEEVASAN..BRT
11. PUMS VINAYAGAPURAM, 3'5...MALAIYAN..BRT
12. PUMS LALAPET - 3, 5...PIRABAKARAN..BRT.
13. APS DOMINIC SAVIO - 3, 5... RAMU..SPL TRS.
14. APS GOVT GARDEN - 3, 5 ...BUVANA ROHINI..SPL TRS
15. PUPS NM KOVIL -3,5... KUMAR..BRT.


8 -ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகள்: இறுதி பட்டியல் இன்று மாலைக்கள் உறுதி செய்யப்படும்.
ஒரு பள்ளி மாற வாய்ப்புண்டு.
பார்வையாளர்கள் பட்டியலும் இன்று மாலை தெரியவரும்.

1. GHS ACHAMANGALAM
2. PUMS VELAN NAGAR
3. AMS RCM KOVILUR
4. PUMS KAVARAIYUR
5. PUMS VINAYAKAPURAM
6. GHSS VADUGAMUTHAMPATTI
7. MMS OLD MUSLIM GIRLS
8. AHSS DOMINIC SAVIO
9. GGHSS MEENAKSHI
10. AHSS OSMANIYA
அன்புடன். SSA TIRUPATTUR.
NEWS.  ALL TRS TN.. SIVA


திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி


















மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்,  DIET முதல்வர்,விரிவுரையாளர்கள, ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்,SSA மேற்ப்பார்வையாளர், கல்வியாளர்கள் பர்வையிட்டு இப்பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும்  விடுமுறை நாட்களில் தன்னார்வத்தோடு சிறப்பாக  நடத்திகொண்டு இருக்கும் அனைவரையும் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.

   இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்கள்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம். மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கிய மகளீர் அமைப்புக்கும் நன்றியினை உரித்தாக்குகிறோம். இப்பயிற்சியில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.

மீண்டும் அனைவருக்கும் நன்றியினை கூறும்
ALL TRS TN.. Siva.
www.alltrstnsiva.blogspot.in

மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவு

மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவு!
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.


மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, மேனகா, நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம், பால் புகட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு, 26 வார காலம், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை, தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென, தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறையை, எட்டு மாதங்களாக அதிகரிக்க வேண்டுமென கருதுகிறோம். இதுபற்றி, அமைச்சரவை செயலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்; விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்

Tuesday, 29 December 2015

ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு

ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு
பெங்களூரு:'கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,
யூ.ஜி.சி., அறிக்கை அனுப்பிஉள்ளது.ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடப்பது, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் மூலம், மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தி வரும் பல்கலைக்கழகங்கள், அதற்கு பயன்படுத்தப்படும், 'சாப்ட்வேர்' நடைமுறை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டும், ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்த்து வரும் பல்கலைக்கழகங்கள், 2016 -- 17ம் கல்வியாண்டில், எல்லா படிப்புகளுக்கும், ஆன்லைன் மூலமே, மாணவர்களை சேர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கூற வேண்டும்.
இதுதொடர்பாக, அடுத்த மாதம், பல்கலைக்கழகங்களுடன், ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு வேத் பிரகாஷ் கூறினார்.

NMMS SAT MODEL

SAT தேசிய திறன் அறிவு தேர்வு மாதிரி வினாவிடை

http://sivapattu.blogspot.in/2015/12/nmms-sat-question-for-viii-std.html?m=1

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்..திருப்பத்தூர்

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்
திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதிகள்;
 3 மற்றும் 5-ஆம்  வகுப்புகள்  :
5.1.2016 - காலை - தமிழ் ; மதியம் - கணக்கு
6.1.2016 - ஆங்கிலம்
8-ஆம்  வகுப்பு ;
7.1.2016 - காலை - தமிழ் ; மதியம் - கணக்கு
8.1.2016 - காலை - ஆங்கிலம் ; மதியம் - அறிவியல்


தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர் மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் - விவரம்:
1. APS- GOVT GARDEN - 3,5
2. APS- PALLAVALLI - 3,5
3.PUPS- KODUMAMPALLI - 3,5
4.GGHSS-MEENAKSHI - 8
5.PUPS-BOMMIKUPPAM - 3,5
6.MMS-OLD MUSLIM GIRLS  - 3,5,8
7.GHSS-VADUGAMUTHAMPATTI - 8
8.PUMS-VELAN NAGAR - 3,5,8
9.PUPS-ACHAMANGALAM  -3,5
10.GHS-ACHAMANGALAM - 8
11.MPS-NEW MUSLIM BOYS - 3,5
12.PUMS-PUDHUR MARIMANIKUPPAM -3 ENGLISH ONLY
13.APS-OSMANIYA -3,5
14.PUMS-KAVARAIYUR -3,5,8
15.AMS-RCM KOVILUR -8
16.PUMS-LALAPET -3,5
17.MMS-OLD MUSLIM BOYS -3,5,8
18.AHSS- DOMINIC SAVIO -8
19.APS- DOMINIC SAVIO -3,5
20.PUMS- VINAYAKAPURAM -3,5,8
21.AHSS-OSMANIYA - 8

ALL TRS TN.Siva

All Trs Tn: ஜனவரி 1 முதல் எந்தெந்த துறைகளுக்கு "பான் கார்டு" கட்டாயமாகிறது; வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு

ஜனவரி 1 முதல் எந்தெந்த துறைகளுக்கு "பான் கார்டு" கட்டாயமாகிறது; வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு





: NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY

NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER
 2015 - TENTATIVE SCORING KEY