Sunday, 17 January 2016
நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை
நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை
வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25 ஆயிரம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஏற்கனவே, 12,441 தபால் நிலையங்களில் சி.பி.எஸ். முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தபால்துறை. இந்த முறையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் எந்த தபால் நிலையத்தில் வேண்டுமானாலும், தங்களது கணக்குகளை இயக்க முடியும். வங்கி தொடர்பான சேவைகளையும் பெற முடியும். இந்நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம். மையங்களை திறக்க இந்திய தபால்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், கிராமப்புற தபால் நிலையங்களில் வரும் 2017-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தியுடன் இயங்கும்
பயோமெட்ரிக் கருவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 300 ஏ.டி.எம். மையங்கள் தபால்துறை சார்பில் இயங்கி வருகின்றன. 25 ஆயிரம் டிபார்ட்மண்டல் தபால் நிலையங்கள் தவிர நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராமப்புற தபால் நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?
தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?
பருவத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் ஆதார்
எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமைப் பதிவு தலைமைப்பதிவாளர் அலுவலகம் செய்து வருகிறது. இப்பணிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணிகளை பள்ளி வேலை நேரம் முடிந்து மாலையில்தான் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஜன.18ல் துவங்கி பிப்.5க்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிக்காக ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை வெள்ளத்தால், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் தற்போது பள்ளிகளில் நடந்து வருகின்றன. இச்சூழலில் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தொகுப்பூதியம் ரூ.33,250 ஆகும்.
கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலம், குழந்தைகள் நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 1.1.2016-ஆம் தேதியன்று 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
18-ஆம் தேதிக்குள்..: குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலன், குழந்தை நலம் ஆகிய துறைகளில் கள ஆய்வில் புதிய திட்டங்களை வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் நிலையில் பணிபுரிந்த அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in/department/30 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செயயலாம். புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10, தொலைபேசி: 044-26421358.
சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம் அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.
சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்
அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.
பிரிட்டோ 800 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் எடுத்து 74.38 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றார்.
திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினேஷ் சான்செட்டி 566 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்திய பட்டய கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் ஒன்று பிரிவில் நவம்பர் மாதம் தேர்வு எழுதிய 77,442 பேரில் 9,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல குரூப் 2 பிரிவில் தேர்வு எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரு தேர்வுகளையும் எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் ஏதாவது ஒரு குரூப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்தியஅரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களில் பெரும் பாலானோருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப் பட்டுவிட்டது. எஞ்சியவர் களுக்கு மிக விரைவில் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். இந்த பெரு மழை வெள் ளத்தால் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த மாநில மாக அறிவித்து ஏற்கெனவே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன. வங்கிகளுடன் கலந் தாய்வு கூட்டங்கள் நடத்தி இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக் கைகளை எடுக்கும்படி நான் தலைமை செயலாளருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளேன்.
வேலையற்ற பட்ட தாரிகளின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 5,000 இளைஞர் களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத் தின்படி 25 சதவீத மூலதன மானியத்துடன்ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கிட நான் உத்தர விட்டுள்ளேன். இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி பெறப்படவேண்டும் என்ற நிபந்தனையிலிருந்தும் விலக்கு அளித்து உடனடியாக கடன் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http://218.248.44.30/ecsstatus/) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CLICK HERE CPS ACCOUNT
இணையதளத்தில் தங்களது பிபிஓ எண், கருவூல விவரங்களை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் பிற்பகல் 3மணி முதல் 5 மணி வர நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். கருவூல அலகில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மருத்துவக் காப்பீடுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம்.
அவ்வாறு இருந்தால் ஒரு சந்தாவை நிறுத்தம் செய்தும், செலுத்திய சந்தா தொகையை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் அதற்கு மேலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், தங்களது வருமான வரி கணக்குத் தாளை மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களில் ஜனவரி மாத இறுதிக்குள் இரட்டைப் பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Friday, 15 January 2016
அனைவருக்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்
அனைத்து ஆசிரிய சகோதர,சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
எல்லா வளமும் பெற்றிட இந்த நன்நாளில்,
தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா அனைத்து
ஆசிரிய பெருமக்கள்
அனைவருக்கும் எங்கள்
பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
🙏🙏ALL TRS TN🙏🙏
Monday, 11 January 2016
ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு
ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு
ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.
12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.
12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.
சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது
: மாவட்டத்தில் உள்ள, 21 ஒன்றியங்களில் குழுக்கள் அமைத்து, 12 ஆயிரம் ஆசிரியர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள், சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களிடம், அதற்குரிய காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை குழு குறைகள் கண்டறிந்தால், மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்கிறுக்கல்களுடன் கசக்கி தூக்கி வீசப்படும் காகிதங்களை கலைப் பொருட்களாகவும், பாரம்பரியம் உணர்த்தும் படைப்புகளாகவும் மாற்றி வருகின்றனர் கோவை தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்.
செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்கிறுக்கல்களுடன் கசக்கி தூக்கி வீசப்படும் காகிதங்களை கலைப் பொருட்களாகவும், பாரம்பரியம் உணர்த்தும் படைப்புகளாகவும் மாற்றி வருகின்றனர் கோவை தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்.
கோவை மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் தொண்டாமுத்தூரை ஒட்டியுள்ள கிராமம் தேவராயபுரம். சுற்றியுள்ள கிராம மக்களின் குழந்தைகளின் கல்வி வசதிக்காக தேவராயபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 360 மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர்.
மாணவர்களால் நோட்டு புத்தகங்களிலிருந்து கிழிக் கப்படும் காகிதங்கள் குப்பை யாகச் சேருகின்றன. அவை எளிதில் மட்கக் கூடியதாக இருந்தாலும், மறுசுழற்சிக்கோ, வேறு பயன்பாட் டுக்கோ உபயோகிக்கப்படுவ தில்லை. ஆனால் தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் சேகரமாகும் காகிதக் குப்பைகளை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இப்பள்ளியில் ஓவிய ஆசிரிய ராக பணியாற்றும் வி.ராஜகோபால், எளிமையான முறையில் மாணவர் களுக்கு ஓவியப் பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, குப்பையாக ஒதுக்கும் காகிதங்களை வைத்து புதுமையான வடிவங்களைத் தயாரிக்கும் பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.
கசக்கி எறியப்படும் காகிதங் களை நூலால் சுற்றி மனித, விலங்கு உருவங்களுக்கு ஏற்ப மாணவர்கள் வடிவங்களை உருவாக்கி வரு கின்றனர். இதனால் குப்பையாகச் சேரும் காகிதங்கள் குறைந்து, அதை பயனுள்ள கலைப் பொரு ளாக மாற்றும் ஆர்வம் மாணவ, மாணவிகளிடையே அதிகரித் துள்ளது.
துல்லிய உருவம் கொடுக்கப் படாத வடிவங்களாக கலைப் பொருட்கள் உருவாக்குவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து இதுபோன்ற பொருட்களை செய்து காட்டுபவர்கள் மத்தியில், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறிதும் செலவில்லாமல் அநாயசமாக பல உருவங்களை செய்து பிரமிப்பில் ஆழ்த்துகின்றனர்.
குறிப்பாக பாரம்பரிய பறை இசைக் கருவிகளை வாசிக்கும் மனிதர்கள், கூடுகளில் தங்கும் பறவை, காரமடை அரங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற பந்தசேவை, மரத்தடி விநாயகர் என அன்றாடம் பார்த்து பழக்கப்பட்ட, மண்ணின் பெருமையைக் கூறும் படைப்புகளை இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஓவிய ஆசிரியர் ராஜகோபால் கூறும்போது, ‘பள்ளி மாணவர்களை யும், காகிதங்களையும் பிரிக்க முடியாது. அவர்களுக்கும் காகிதத் துக்குமான நெருக்கம் மிக அதிகம். ஏதாவதொன்றை அவர்களே செய்து காட்டுவார்கள். அதன் அடுத்தகட்டமாக எளிய முறையில் வீணான காகிதம், நூல், பசை மூலம் அரூப (abstract) உருவம் உருவாக்கப் பயிற்சி கொடுத்தேன்.
இன்று ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பல படைப்புகளை மாணவர்கள் உருவாக்கிவிட்டனர். வீணாகும் பொருளும் பயனளிக் கும் என்பதற்கு இது உதாரணம். அதைத் தாண்டி மாணவர்களுக்கு பொறுமை, நினைவாற்றல் அதிக மாவதை பார்க்க முடிகிறது. காகிதத்தில் உருவாகும் வடிவங் களில் அழகுணர்ச்சி குறைவாக இருந்தாலும், திறமையை வெளிப் படுத்த ஒருவாய்ப்பாக இருக்கிறது.
அந்த வகையில், நமது பாரம் பரிய, கலாச்சார மாண்புகளை காகித உருவங்களில் மாணவர் கள் உருவாக்குகின்றனர். இதில் பெரிய செலவுகள் ஏதுமில்லை. காகிதக் குப்பை குறைகிறது. பெற் றோரும் ஊக்குவிக்கிறார்கள். மாணவர்களுக்கு கலை உணர்வு மேலோங்குகிறது. இப்படி பல நன்மைகள் இதில் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனுக்கும் எண் ணமும், அழகுணர்ச்சியும் மாறு படும், ஆச்சரியப்படுத்தும். 2 டி உருவ அமைப்புகளை கையா லேயே எளிய முறையில் உரு வாக்கும் அளவுக்கு அவர்களது திறமை மேம்பட்டுள்ளது’ என்றார்.
ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு
TNTET: 4 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு
நிபந்தனையின் அடிப்படையில் நிரந்தர பணியிடத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2 ஆசிரியர்கள் வீதம் 50 பேர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இய்ககுனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில், “பணி நியமனம் பெற்ற நாளில் இருந்து ஆசிரியர் தகுதி காண் பருவமான 2 ஆண்டுகளையும் முறையாக நிறைவு செய்து விட்டோம். எங்களிடம் படித்த மாணவர்கள் 10ம் வகுப்பு அரசுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றும், சிலர் மாநில,மாவட்ட அளவில் தரம் பெற்றும் உள்ளனர். அங்கீகாரம் பெற்ற பள்ளி குழுவின் நேர்முகத்தேர்வு, இனச்சுழற்சி முறை கடைப்பிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முறையாக தேர்வு பெற்று, பள்ளி கல்வித்துறையின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது நிரந்தர பணியிடத்தில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம். ஆனால் அவரது ஆட்சிக்காலத்திலேயே எங்களது பணிக்கு ஆபத்து உருவாகி உள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும், மனஉளைச்சலும் அடைகிறோம்.
மொத்தத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் வாழ்வா, சாவா என்ற வாழ்க்கை போராட்டத்துடன் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம்.நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைபேரிடர் மற்றும் குடும்ப சூழல் என தற்போதைய ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாங்கள் தேர்வு எழுதக்கூடிய மனநிலையில் தற்போது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
எனவே, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுதித்தேர்வை எழுதுவதில் இருந்து ஓர் தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து உதவ வேண்டும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட, பள்ளி கல்வித்துறை மூலம் தக்க பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
Sunday, 10 January 2016
வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு
முக்கியச் செய்தி :-
வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கும் திட்டத்தை அண்மையில் முதல்வர் தொடங்கிவைத்தார்...பலர் அவற்றைப் பெற்றுத்தரும்படி கோரினார்கள்..தற்போது அவை www.tnscert.com என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன..
Honourable CM Released Learning Materials for 10th and 12th Standard - Click Here
http://www.tnscert.org/cmrelmat.html
Saturday, 9 January 2016
பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி
பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி
உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
தேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த
அறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்
இளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும்
அறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா?- பெற்றோர்
எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்
எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. "எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது.
எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார்.
இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி
தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி
''சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.
தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':
நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்;
விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்
தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)



