Powered By Blogger

Thursday, 12 September 2019

முறைகேடுகளை தடுக்க ஆதாரில் முகப்பதிவு அடையாளம் இனி... கட்டாயம்! செப்., 15ல் இருந்து அமல்!

ஆதார் அட்டை மூலம், உண்மை தகவல்கள் சரி பார்க்கப்படும் போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், முகப்பதிவு அடையாள முறையை கட்டாயமாக்க, ஆதார் அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது.

 இது, செப்., 15 முதல் அமலுக்கு வருகிறது. 'இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறுவது, தண்டனைக்குரிய குற்றம்' என, அரசு அறிவித்துள்ளது.யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை ஆணையம், இந்திய குடிமக்கள் அனைவருக்கும், 12 இலக்கங்கள் உடைய, 'ஆதார்' அடையாள அட்டையை வழங்கி வருகிறது.

குற்றச்சாட்டுகள்

வங்கி கணக்குகள், பான் அட்டை, ஓய்வூதியம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், மொபைல் போன் சேவைகள், சமையல் காஸ் மானியம் உட்பட, பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த சேவைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட ஆதார் அட்டையின் உண்மை தன்மையை அறிய, அட்டை வைத்திருப்பவரின் விரல் ரேகை அல்லது கண்ணின் கருவிழிப் படலம் பரிசோதிக்கப்படுகிறது.இதில் உள்ள பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், ஆதார் அட்டை பயனாளரின் முகத்தை, புகைப்படம் மூலம் பதிவு செய்து சரி பார்க்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, அடையாள அட்டை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, செய்தியாளர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான சேவைகளை பயன்படுத்தும்போது, ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகையுடன் அவர்களது விரல் ரேகை, ஒத்துப்போவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.வயோதிகம் காரணமாகவும், விவசாயம் போன்ற வேலைகளில் ஈடுபடுவோரின் கைரேகைகளில் மாற்றம் ஏற்படுவதன் மூலமும், இந்த தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது.இது போன்ற நேரங்களில், சம்பந்தப்பட்டோர் முகப்பதிவு அடையாளத்தை சரி பார்ப்பதன் மூலம், தவறுகள் நடப்பதை தவிர்க்க முடியும்.

உத்தரவு

இந்த முகப்பதிவு அடையாளத்தை, முதல்கட்டமாக, மொபைல் போன், 'சிம்' கார்டுகள் வாங்குவோரிடம் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும், செப்., 15 முதல், புதிய சிம் கார்டுகள் வாங்க வருவோரிடம், கை ரேகை, கரு விழிப்படலம் பதிவு செய்யப்படுவதோடு, அவரது முகமும் பதிவு செய்து கொள்ளப்படும். பின், மூன்று தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, சிம் கார்டுகள் வழங்கப்படும்.ஒரு மாதத்தில் வழங்கப்படும் சிம் கார்டுகளில், குறைந்தபட்சம், 10 சதவீத சிம் கார்டுகள், முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு மூலம் வழங்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.முதலில், 10 சதவீதத்தில் தொடங்கி, குறைகள் சரி செய்யப்பட்ட பின், படிப்படியாக அதிகரிக்கப்படும். பின், மற்ற சேவைகளிலும் இந்த முகப்பதிவு அடையாள சரிபார்ப்பு நடைமுறைபடுத்தப்படும்.இதை கடைபிடிக்க தவறுவது, தண்டனைக்குரிய குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், ஏற்கனவே ஆதார் அட்டை வழங்கும் நிறுவனத்திடம் உள்ளது. எனவே, அவர்களின் முக அடையாளத்தை ஒப்பிட்டு சரி பார்ப்பது, சுலபமாக இருக்கும்.மடிக்கணினி மற்றும் மொபைல் போன்களில், புகைப்படம் எடுக்கும் வசதி இருப்பதால், சேவை நிறுவனங்களுக்கு புதிதாக உபகரணங்கள் வாங்கி தரவேண்டிய அவசியமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

எங்கெங்கு பயன்படும்?

புதிய சிம் கார்டுகள் வாங்க, வங்கி, ரேஷன் கடை, அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரின் வருகை பதிவேடு பணிகள்* பல்வேறு சேவைகளுக்காக, ஆதார் அட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், முகப்பதிவு அடையாளம் சோதிக்கப்படும்* ஆதார் அட்டை வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர், பின், தாடி வளர்த்திருந்தாலோ, முடி நரைத்திருந்தாலோ, வழுக்கை விழுந்திருந்தாலோ கூட, சம்பந்தப்பட்ட நபரை, சரியாக அடையாளம் காணும் தொழில்நுட்பம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, 11 September 2019

EMIS New Update- தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

தற்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் Main Subjects Taught பகுதியில் 6பாடங்களை பதிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றுக்கு மேற்பட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு TIME TABLE உருவாக்குவதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளது. மேலும் மாற்றுப்பணியில் (deputation) உள்ள ஆசிரியர்களுக்கும் தற்போது TIME TABLE உருவாக்க முடியும்.

Siva tams Ldr Tpt

Tuesday, 10 September 2019

EMIS 2019-2020- SCHOOL PROFILE AND ADDITIONAL PROFILE & TEACHER PART III UPDATE REG.

மிக மிக அவசரம் – EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவரம் (School Profile) மற்றும் Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile பகுதி – III) விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

September 10, 2019 by ceo
அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile, UDISE + Declaration மற்றும் ஆசிரியரின் சுயவிவர (Staff Profile) பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி – III (Part – III) இல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக  உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

*மு.சிவக்குமார்,tams Ldr Tpt*

பள்ளிக்கு கொடுக்கப்பட்ட Laptap இல் தேவையின்றி Data வீணாவதை தடுக்க வழிகள்

அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.

 அனைத்து பள்ளிகளுக்குமே Laptop வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வழங்கப்பட்டுள்ள Laptop-ல் Windows 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயங்குதளம் மற்ற இயங்குதளங்களை விட அதிக வசதிகள் கொண்டது.

ஆனால் இதில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு எதுவென்றால் இந்த இயங்குதளம் அதிகப்படியான டேட்டாவை எடுத்துக் கொள்ளும் என்பது தான். நாம் பெரும்பாலும் தினமும்1.5 GB என்ற அளவிலேயே டேட்டாவை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் இந்த இயங்குதளமானது 15 நிமிடங்களிலேயை 1.5GB டேட்டாவைத் தீர்த்து விடும். நாம் internet connection கொடுத்துவிட்டாலே போதும் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நமது டேட்டா தீர்ந்து விடும்.

இதற்கு காரணம் இந்த விண்டோஸ்10 தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. இவ்வாறு நமது டேட்டா வீணாவதை பின்வரும் வழிமுறைகளைக் கையாண்டு தவிர்த்து கொள்ளலாம்.

உங்கள் லேப்டாப்பில் Windows+R பட்டனைக் கிளிக் செய்யவும்.

கீழே தோன்றுகின்ற Search box ல் services.msc என்று டைப் செய்து enter செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும்dialog box ல் windows update என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து double click செய்வும்.
தற்போது திரையில் தோன்றும் புதிய box ல் start up type என்ற ஆப்ஷனுக்கு எதிரில் இருக்கும் கட்டத்தில் automatic அல்லது manual என்று இருக்கும்.

அதை கிளிக் செய்தால்
Automatic (start delay)
Automatic
Manual
Disabled
என்று 4 ஆப்ஷன்கள் தோன்றும்.

அதில் disabled என்பதனைத் தேர்வு செய்து அதன் கீழிருக்கும் கட்டத்தில் stop என்பதனைத் தேர்வு செய்து OK கொடுக்கவும்.

பின்னர் மீண்டும் windows update ல் Double click செய்து service status stopped என உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது டேட்டா தேவையின்றி வீணாவதை தடுக்கலாம்.
Siva tams Ldr Tpt.

Sunday, 8 September 2019

EMIS school additional profile details and Teacher part III filled

 https://youtu.be/Sm71nyT5G7s

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

EMIS DETAILS

📲 How to complete school additional profile details.

📲 How to complete staff profile part - III

Siva tams Ldr Tpt

Thanks to Thenarasu, RK pet.




Saturday, 7 September 2019

திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது

*திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது*



*24-09-2019,  உண்ணணாவிரதம்


*நெஞ்சில் கொஞ்சமும் அச்சமின்றி  24-9-19 அன்று நடைபெறும் உண்ணாாாவிரதம்  அனைவரும் கலந்து கொள்வோம். நம்முடன் களத்தில் இருந்த நண்பர்களின் 17பியை எண்ணி அணி வகுப்போம். கூடிய கூட்டம் கண்டு  உளவுத்துறை அதிகாரிகள் மேலே  அனுப்பும் செய்தியே நமக்கு நல்ல முடிவைத் தீர்மானிக்கும்.. நாம் போராடி இதுவரை தோற்றதில்லை என்பதே வரலாறு.. என்ன.. நமக்கான வெற்றி கொஞ்சம் தள்ளிப் போகிறது. அவ்வளவுதான்....*



போராட்டம் என்றால் சிறு சிறு இழப்பு இருக்கத்தான் செய்யும் இவையெல்லாம் தற்காலிகமே...

இன்று போராட வில்லை எனில் வருங்காலத்தில் நித்தம் நித்தம் வாழ்க்கை நரகமாகும் தோழர்களே...

பழைய பென்ஷன் திட்டத்தை பெற்றே தீருவோம் என சபதம் ஏற்போம் தோழர்களே..



*எந்தப் பணி இருப்பினும் அதை ஒத்தி வைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம்.(மீண்டும் சொல்கிறோம். நமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நம்மைக் காக்க வேண்டும், என்பதில் ஜேக்டோஜியோ உறுதியாக உள்ளது.அதனால் தான் நடக்கும்  மூன்று கட்ட நடவடிக்கைகளுக்கும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது). எனவே அச்சமின்றி திரண்டு வாருங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்..*

*அலைகடலென ஆர்பரித்து வாரீர் வாரீர் வாரீர்*



இவன்

*திருப்பத்தூர் ஜாக்டோ-ஜியோ*

ஒருங்கிணைப்பாளர்கள்.



(செய்தி. மு.சிவக்குமார்,Tams தலைவர்.

திருப்பத்தூர் வட்டம்.)

Friday, 22 February 2019


*சம்பளம் வழங்கும் அதிகாரிகளுக்கு அறிவுரை சார்ந்து Income Tax Department TDS சம்பந்தமாக வழங்கியுள்ள அறிவுரை. Fy 2018-2019 Ay 2019-2020.*

Click here
https://drive.google.com/file/d/18pRhTCQvKpcnNNbCurSznr8WDOZGI9xj/view?usp=drivesdk

*யார் இந்த பணியை செய்ய வேண்டும்*

பள்ளிக்கல்வி பொருத்தவரை தொடக்கக் கல்வி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வட்டார கல்வி அலுவலரும்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களும்

அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அவர்களூம்

மற்றும் அதை சார்ந்த கல்வி அலுவலகங்களுக்கு அந்தந்த சம்பளம் பெற்று வழங்கக்கூடிய அதிகாரிகளும் பொறுப்பு ஆவார்கள்



https://tnteacherincometax.blogspot.com/2019/02/income-rax-tds-tax-deducting-source.html?m=1

Friday, 28 December 2018

*Jactto Geo NEWS*

அன்புடையீர்!
வணக்கம்.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று(28.12.2018) மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக இயற்றப்பட்டது.

1. 07.01.2019   அன்று அரசு வழியிலோ அல்லது உயர் நீதிமன்றம் வழியிலோ CPS மற்றும்  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்காவிடில் 07.01.2019 அன்று மதுரை மாநகரில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. பள்ளிகள் இணைப்பு என்ற போர்வையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை ஒன்றிணைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.

மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

இவண்
சிவா,Tams tpt
*JACTTO Geo*

Wednesday, 26 December 2018

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க அன்புமணி அறிக்கை வெளியீடு



Sunday, 16 December 2018

Tn school app latest version

TN Schools app latest version-ல்(2.0.4) Setting -Logout புதிய வசதி அறிமுகம்

Google Play store க்கு சென்று UPDATE செய்து கொள்ளவும்
Version V2.0.4
Latest version ல் settings and logout வசதி தரப்பட்டுள்ளது.

Siva tams Ldr Tpt

CLICK HERE

Friday, 12 October 2018

NMMS Metrial 2018-2019

NMMS Study Metrial 2018-19

OMR Sheet For NMMS Exam

NMMS SAT Model Question Paper

NMMS MAT Model Question Paper

NMMS MAT Question and Answer

NMMS SAT Maths Model Question Paper

NMMS SAT Science Question and Answer

NMMS SAT Social Science Question and Answer

NMMS Maths question and answer

BEST OF LUCK...

By NMMS GROUP ALLTRSTN

M.SIVAKUMAR. B.T.,TPT.
PUMS JOLLAGOUNDANUR
Cell: 9894429770

Wednesday, 3 October 2018

NMMS online entry 2018-19

Nmms online apply direct link Nmms தேர்வுக்கு விண்ணப்பிக்க நேரடி லிங்க் மற்றும் username password details 


User I'd: your schl disecode number
Password: 999999

 நடுநிலைப்பள்ளிகளுக்கு user id : school Dise NO-ஐயும், password ஆக 999999 ஐயும் பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 3/10/18 முதல் 17/10/18 -க்குள் பதிவேற்றம் செய்யலாம். EMIS NOஐ பயன்படுத்துவதால்  மாணவர்களின் விவரங்கள் தானாகவே பதிவேற்றம் ஆகும். விடுபட்ட ஒருசில தகவல்களை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

CLICK HERE

Friday, 20 October 2017

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தின் மூலமாக மாணவர்களுக்கு *தேசிய திறனாய்வு ( NMMS) தேர்வில் வெற்றிபெற பயிற்சி

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தின் மூலமாக மாணவர்களுக்கு *தேசிய திறனாய்வு ( NMMS) தேர்வில்* வெற்றி பெற வேண்டும் என நோக்கில் இந்த குழு செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு தமிழகத்தின் பல ஒன்றியத்தில் பல மாணவர்கள் தேர்ச்சி பெற பெரிதும் உதவி உள்ளது.



*இந்த குழுவில் இன்று முதல் தேவையற்ற செய்திகள் பகிர்வது தடைசெய்யப்பட்டது. எனவே தயவுசெய்து தேர்வுக்கு பயன்படும் வகையில் உள்ள செய்தி மட்டும் பகிர்தல் வேண்டும்*



*தொடர்ந்து தேவையற்ற செய்திகள் இக்குழுவில் பகிர்ந்தால் தங்களை  வெளியேற்றப்படும்*



*கண்டிப்பாக ஒருவர் ஒரு குழுவில் மட்டும் இணைய வேண்டும்.*







Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/ACE7RFvfWDF65PF2S4jofT



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LhOqKRtKG5YL2aJexdHA7t



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/IET6MxouBPy6AMMYKDoLNZ



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JRxG8JQO0iFCjBrScOvcEZ



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0G4ME1wengQ2kYl2gvKR3s



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/E5gxVJnQnnf1RkZl1btDfs



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/3GGtujB4LEFLUGtq122ZKs



Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LFl1jtI44NcK1VVS0qEhkT



அன்புடன் கல்வி பணியில்

*மு.சிவக்குமார், தலைவர்*

TAMS TIRUPATTUR, VLR.

Sunday, 28 May 2017

SG Teacher -District Transfer Counselling - Seniority List- District wise | Published...

SG Teacher -District Transfer Counselling - Seniority List- District wise 


இடைநிலை ஆசிரியர்- மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு..

தமிழகத்தில் 2014-15 ல் தரம் உயர்த்தப்பட்ட 42 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்திட 23/5/17 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது*

*TAMS வேலூர் மாவட்டம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர்*
👍👍👍👍👍👍👍👍👍
*திரு.கு.தியாகராஜன் அவர்கள்*
💥💥💥💥💥💥💥💥💥
*பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களை சந்தித்தபோதும் தொடர்ந்தது வலியுறுத்தியதன் பேரில்.*

* நமது சங்கம் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான*
👏👏👏👏👏👏👏👏👏
*2014-15 ஆம் ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்*

அதனை சார்ந்து நமது முன்னாள் மற்றும்  இன்னாள் மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும்

*துவக்கப் பள்ளியிலிருந்து*

*நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட*
💥💥💥💥💥💥💥💥💥
     *தமிழகத்தின் 42 நடுநிலைப்  பள்ளிகளில் பட்டதாரி தலைமையாசிரியர்களை நியமித்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற TAMS ன் கோரிக்கையை ஏற்று*
💥💥💥💥💥💥💥💥💥
*மதிப்புமிகு.பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்கள்*
👍👍👍👍👍👍👍👍👍
*42 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்திட 23/5/17 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*அதனை சார்ந்து நமது மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும் தற்போது PROCEEDINGS வெளியிட்டுள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*ஆகவே 42 நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரைவில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படவுள்ளன.*
👏👏👏👏👏👏👏👏👏
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்*
*கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட*
👍👍👍👍👍👍👍👍👍
*மதிப்புமிகு.பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களுக்கும்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குனர்* அவர்களுக்கும்
*இணை இயக்குனர் பெருமக்களுக்கும்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*
  🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இங்ஙனம்,

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஆசிரியர்கள்* *மாணவர்கள் நலன் சார்ந்து தொடர்* *கோரிக்கையின் மூலம்*

*ந.நி.பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தை பெற்று தந்த*
 👍👍👍👍👍👍👍👍👍
நமது மாநில தலைவர்

*கு.தியாகராஜன்,*அவர்களுக்கு,

*பதவி உயர்வு பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் பல.*
👍👍🙏🏻🙏🏻👍👍🙏🏻🙏🏻🔥
*TAMS வேலூர் மாவட்டம்*

அன்புடன்

*மு.சிவக்குமார், தலைவர்*

திருப்பத்தூர் வட்டம்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*











பல ஆண்டுகளாக ஏமாற்றப்படும் வெளிமாவட்ட ஆசிரியர்கள்-முறைகேடாக நடத்தப்பட்ட கலந்தாய்வு செய்தி.

பல ஆண்டுகளாக ஏமாற்றப்படும் வெளிமாவட்ட ஆசிரியர்கள்-முறைகேடாக நடத்தப்பட்ட கலந்தாய்வு செய்தி.



தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,திருப்பத்தூர்



மாவட்டம் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் பல்வேறு தவறுதல் உள்ளன. அதாவது *ஒரே ஒன்றியத்தில் பணியில் 2012 ல், சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு மாநில முன்னுரிமை ஒருவருக்கு 42, மற்றொருவருக்கு 414 ,அதே ஒன்றியம் 2010 ல் பணியில் சேர்ந்தவருக்கு 329, இதுபோன்ற முன்னுரிமை தவறுகளுடன் கலந்தாய்வு 26/5/17 அன்று நடைபெற்றது*.



இந்த தவற்றை *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கண்டறிந்த்தனால் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு வேலூர் மாவட்டம் *கலந்தாய்வு சுமார் 2.30 மணி நேரம் நடைபெறவில்லை*. இதனால் தமிழகம் முழுதும் கலந்தாய்வு தடைபெற்றது. *மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த தவறுக்காக ஜூன் மாதம்*  தவற்றை கலையப்பட்டு வாய்ப்பு அளிப்பாதாக வாக்குறுதி *TAMS பொறுப்பாளர்கள்* முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலகம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.



* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொபைலில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதை  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வன்மையாக கன்டிக்கிறது.



* தமிழகம் முழுவதும் முன்னுரிமை பட்டியலில் தவறாக தயாரித்து முறைகேடாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த தவறு கணினி பிழை என்று கூறுகிறார்கள்.



*நடத்தப்பட்ட மாவட்டம் விட்டு விட்டு மாவட்டம் கலந்தாய்வு முன்னுரிமை வழங்குவதில் தவறான முறையில் நடைபெற்றது. எனவே வேறு ஒரு நாளில்  சரியான முறையில் நடைபெற சங்க மாநில,மாவட்ட பொருப்பாளர்களே மற்றும. ஜாக்டோ நண்பர்களே,  மாவட்ட, மாநில கல்வி அலுவலர்களை சந்தித்து ஆசிரியர்களுக்கு நியாமான முறையில் கலந்தாய்வு நடைபெற வலியுறுத்தங்கள்.*



* 29,30/5 ல் நடைபெறும் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்ழிவு விழிப்புணர்வு தேவை மாநில முன்னுரிமை சரியான முறையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள் சங்க பொருப்பாளர்களே..



என்றும் ஆசிரியர் நலனில்



*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

உடன்

*மு.சிவக்குமார்,* தலைவர்

திருப்பத்தூர்,ஒன்றியம்.