Monday, 30 November 2015

ALL TRS TN. ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

ALL TRS TN

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.

இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது. தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது.

* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி

* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி

* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு

பூவிதழ் கல்வி 

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி ! 

 பூவிதழ் கல்வி மையம்

 TNPSC- VAO போன்ற  போட்டித்தேர்வுகளுக்காக பயிற்சி வரும் 6-12-15 முதல் ஆரம்பம் . 

சனி ,ஞாயிறு- அரசு விடுமுறை நாட்களில் பயிற்சி நடைபெறும்  . 
50 க்கும் அதிகமான வகுப்புகள்.
50க்கும் அதிகமான தேர்வுகள் OMR மாதிரி தேர்வுகள். 

தமிழகத்தின் பல முன்னணி பயிற்சி மையங்களில் பணியாற்றிவரும் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் TNPSC தேர்வுக்குரிய நூல்களை எழுதிய சிறந்த ஆசிரியர்களால் நடத்தப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

அறிமுக வகுப்பு 6-12-15 ல்  
தொடர்புக்கு : 
72003 39565
95241 48489

இடம் 
சண்முகா திருமண மண்டபம் அருகில் 
ஆசிரியர் நகர் - திருப்பத்தூர்

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி' கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

"எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி' கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்


       பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.


        ஆறு வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் வகையிலும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கிலும், அவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமான இந்தக் கொள்கையால், மாணவர்கள் தங்களுக்கு நடத்தப்படும் ஆண்டுத் தேர்வுகளை தீவிரமாகக் கருதுவதில்லை; இதனால், அவர்களின் கல்வித் தரம் குறைவதுடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும் பல்வேறு மாநில அரசுகள் கருதுகின்றன. இதையடுத்து, கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை தொடர்பாக, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், கட்டாயத் தேர்ச்சி கொள்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ABL&SABL அட்டைகள் மற்றும் உபகரணங்கள் பள்களுக்கு நேரில் வழங்கவேண்டும்.

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.ஜே3/18403/2009 படி BRC மையத்திலிருந்து ABL&SABL அட்டைகள் மற்றும் உபகரணங்கள் பள்களுக்கு நேரில் வழங்கவேண்டும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் லட்சக்கணகில் SSA நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி அட்டைகளை பள்ளிகளுக்கு நேரில் வழங்குவதற்காக செலவிடப்பட்டது என RTI மூலம் தகவல்பெறப்பட்டது.

இதில் பல மாவட்டங்களில் இதற்கான நிதியை இப்பணிக்காகசெலவிடப்பட்டது என்றும்.சில மாவட்ங்களில் இது போன்ற நிதி SSA -ல் வழங்கப்படவில்லை

எனவும் RTI மூலம் தகவல்தெரிவிக்கப்பட்டது.ABL&SABL பல்வேறு குழப்பம்

நடைபெற்றிறுப்பது RTI தகவல் அடிப்படையில்தெரிகிறது.

தொடக்கக்கல்வி இயக்குநரின்செயல்முறைகளில் தெரிவிக்ப்பட்ட நடைமுறை களை ஆசிரியர்கள் பின்பற்றுவதா

SSA -வாய்மொழி உத்ததிரவை பின்பற்றுவதா என்ற தெளிவற்றநிலை தொடக்கக்ககல்வித்துறையில் உள்ளது.
www.thodakkakalvi.blogspots.com

மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி

மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி

'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர்.


இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

CPS ACCOUNT

ALL TRS TN: Government Data Centre, Tamil Nadu

www.tngdc.gov.in

CPS ACCOUNT SLIP 2014 - 2015 DOWNLOAD http://218.248.44.123/auto_ cps/public GOVERNMENT DATA CENTRE ...

Scheme (CPS) of the Government of Tamil Nadu.

cps.tn.gov.in

Popup Enable : Read me ( Kindly Use Browsers IE Version.11.0 and Above, Chrome Version.30.0 and Above , ...S EXAM: INSTRUCTION& APPLICATION DOWNLOAD...