Powered By Blogger

Saturday, 20 August 2016

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய திறனாய்வு தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது. 

இந்தத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படிப்போர் www.tngdc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.50-உடன் ஆகஸ்ட்31-க்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்திலேயே அறியலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்தின் இயக்குநர்

தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தொடரும் குழந்தைகள் பலி... ஊரை விட்டு வெளியேறும் மக்கள்!

தொடரும் குழந்தைகள் பலி... ஊரை விட்டு வெளியேறும் மக்கள்!

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். தொடரும் குழந்தைகள் பலியால் ஊரைவிட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் இந்த கிராமத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே காவேரிராஜபுரம் உள்ளது. இந்த கிராம மக்கள் கடந்த ஒருவார காலமாக மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சலில் பாதிக்கப்பட்ட யுவராஜ் என்ற 6 வயது குழந்தை கடந்த வாரம் பலியானார். அடுத்து, சந்தோஷ் என்ற 6 வயது குழந்தை உயிர் இழந்தான். தொடர்ந்து இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் கிராம மக்களை பீதிகளுக்குள் ஆழ்த்தியதோடு, பலர் கிராமத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காவேரிராஜபுரத்துக்கு சென்றனர்.

 அங்குள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், காவேரிராஜபுரத்திலிருந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட தேவா என்பவரின் 9 வயது மகன் மோகன்குமாரும், காவேரிராஜபுரம் கிராமத்தின் அருகே உள்ள ஆதிஆந்திரவாடா கிராமத்தை சேர்ந்த செங்கையா என்பவரின் 6 வயது மகன் மோகனும் இன்று காலை பலியாகினர். ஒரே வாரத்தில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் இரண்டு கிராமங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு கிராமங்களிலும் தற்போது 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 குழந்தைகள் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட பெரியவர்களும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் 40 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அரசு தரப்பில் எந்தவித புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி நேரில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், "இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளன. காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளனர். இப்போதைக்கு இந்த காய்ச்சலை டெங்கு என்று சொல்ல முடியாது"என்றார்.

இந்த சூழ்நிலையில் கிராமத்தில் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. இந்த காய்ச்சலுக்கு தொடர்ந்து குழந்தைகள் பலியாகி வருவது அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராமத்தை தற்காலிகமாக காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தொடக்க கல்வி - ஆசிரியர் வைப்புநிதி கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம்செய்யப்பட்டு புதிய எண் வழங்குதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பம் நாள் : 16. 08. 2016


தொடக்க கல்வி - ஆசிரியர் வைப்புநிதி கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம்செய்யப்பட்டு புதிய எண் வழங்குதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பம் நாள் : 16. 08. 2016  


Friday, 19 August 2016

கணவர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனைவி தர்னா

கணவர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனைவி தர்னா
கணவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சரவணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் விடைகளைப் பார்த்து எழுத அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் புகார் உண்மை என தெரியவந்தது. எனவே, சரவணனை வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் செய்து

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி இலக்கியா தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். கல்வித் துறை

அலுவலர்கள் மற்றும் சூலக்கரை போலீஸார் அவரிடம் சமரசம் செய்து முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிடுமாறு கூறினர்.

இதுகுறித்து ஆசிரியர் சரவணன் கூறியதாவது:

பள்ளியில் இருக்கும் சில ஆசிரியர்களின் தூண்டுதலின்பேரில் என்னை இடமாற்றம் செய்துள்ளனர். மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

அதில், நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தற்போது இடமாறுதல் செய்துள்ளனர். நரிக்குடி பள்ளியிலிருந்து ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் நான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்

என்றார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது:

சரவணன் மீது சக ஆசிரியர்கள் மட்டுமல்லாது கிராம மக்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையிலே அவரை இடமாறுதல் செய்தோம். இடமாறுதல் கலந்தாய்வில் அவர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றார்.   

ALL TRS TN.. Siva

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு - மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:

பெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது. அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

ALL TRS TN... Siva

01.01.2006 – 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்

01.01.2006 – 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்  

ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள

இடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.

அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.

01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

எனவே 01.01.2006 – 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.

ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.

2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.   

ALL TRS TN... Siva

FLASH NEWS:-மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.....

FLASH NEWS:-மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.....   

Thursday, 18 August 2016

உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட முகவரியில்*

*உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட முகவரியில்*

1. உங்கள் PF / CPS number ஐ பதிவிடவும்
2. SELECT SUFFIX : PTPF 
3. உங்கள் பிறந்த தேதி 

இவற்றை பதிவிட்டு , பெறலாம்.

TN ePayslip - e-Payroll
epayroll.tn.gov.in › CLICK HERE 

பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை

பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை  




மிகவும் பயனுள்ள தகவல் ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்*

*மிகவும் பயனுள்ள தகவல்
ஒரே நேரத்தில் பலருக்கு forward செய்யும் புதிய வசதி வாட்ஸ்அப் சேவையில் அறிமுகம்*

வாட்ஸ்அப் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். வாட்ஸ்அப் சேவையானது புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அது இன்றுவரை மெசேஜிங் சேவையில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்தவகையில் வாட்ஸ்அப் பயனர்களை குதூகலிக்கச் செய்யும் மற்றுமொரு வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்ட்டுள்ளது.


அதாவது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு செய்தியை பலருக்கு அனுப்பவேண்டிய (Forward) தேவை ஏற்பட்டால் நாம் அவற்றை தனித்தனியாகவே ஒவ்வொருவருக்கும் அனுப்பி வந்தோம் என்றாலும் இதன் பின்னர் அவ்வாறான சிரமங்கள் உங்கள் இருக்காது.


மாறாக குறிப்பிட்ட செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பி வைக்கக்கூடிய புதிய வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை வாட்ஸ்அப் செயலியின்  2.16.230 எனும் பதிப்பில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. 
link👇🏻

http://www.apkmirror.com/apk/whatsapp-inc/whatsapp/whatsapp-2-16-230-release/whatsapp-messenger-2-16-230-android-apk-download/download/

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி தொகை வழங்கப்படுறது

வங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி தொகை வழங்கப்படுறது

சென்னை: எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு கல்வியாண்டின்

இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான உதவித்தொகை, இந்த ஆண்டு முதல், நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என, பள்ளிகளுக்கான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

Wednesday, 17 August 2016

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு

ரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம் : வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு
உபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

           
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன. இதில் சமூகஅறிவியல் ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை உபரியாக கணக்கிட்டுள்ளது. அவர்கள் ஆக., 27 முதல் 29 வரை நடக்கும் கவுன்சிலிங் மூலம் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:
அரசாணைப்படி முதலில் அறிவியல், தொடர்ந்து கணிதம், சமூகஅறிவியல், ஆங்கிலம், தமிழ் என்ற அடிப்படையில் தான் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும். ஆனால் சமூகஅறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது அரசாணைக்கு எதிரானது. மேலும் 5 பாட வேளைகள் மட்டுமே சமூக அறிவியல் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் உள்ள பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சமூக அறிவியல் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய கூடாது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3 முதல், கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. 

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை என, தனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், எட்டாம்வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், விருப்ப இடமாறுதலில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால், அவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது.

அதாவது, ஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோ, அந்த ஒன்றியத்தில், மூத்தவர், இளையவர் என்ற அடிப்படையில்தான், ஊதிய முரண்பாடு இருக்கும். மாறாக, புதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர், இளையவர் பட்டியலை கணக்கிட்டு, அதன்படி, தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் என, கேட்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

INSPIRE Award Nominations for the year 2016-17 are now open- Last date -30.09.2016

INSPIRE Award Nominations for the year 2016-17 are now open-   
Last date -30.09.2016

CLICK HERE...TO APPLY-INSPIRE AWARD  



தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்

தேசிய திறனறி தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்
பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவி தொகை வழங்கும், 'தேசிய திறனறி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறி தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது; மாநில தேர்வில் தேர்ச்சி பெறுவோர், தேசிய தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.


'தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் நவ., 6ல், இந்த தேர்வு நடக்க உள்ளது; அதற்கான விண்ணப்பங்களை, இன்று முதல் சமர்ப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 'விண்ணப்பங்களை, www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணம், 50 ரூபாயுடன், ஆக., 31க்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' எனவும் தெரிவித்துள்ளார்.

Tuesday, 16 August 2016

Departmental exam may 2016 results released now...

Departmental exam may 2016 results released now...   

பி.எட்., பயிற்சிக்கு தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், அனுமதி

பி.எட்., பயிற்சிக்கு தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில்,  அனுமதி  

அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள்
பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சி மேற்கொள்ளலாம்.

அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.



'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்..

பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில்..   


புதுடில்லி:தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம்அறிமுகம் செய்ய
உள்ளது.
இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர்.நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார்.அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கானசாத்தியக்கூறுகள்குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.

முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம்.மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்கலாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

தலையிடாது:

சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்.,சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும்.இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்காக இது?


தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.

அரசு பள்ளி ஆசிரியர் சாதனை 10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி!

அரசு பள்ளி ஆசிரியர் சாதனை

10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி!
   


செல்பேசியில் தான் உருவாக்கிய செயலி ஆசிரியர் *மதன் மோகன்* 

அனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.

*இச்செயலியின் சிறப்பம்சங்கள்*

* ஆன்ட்ராய்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி இயங்க இணைய வசதி தேவையில்லை. ஒரு முறை பதிவிறக்கிக்கொண்டால் மட்டுமே போதுமானது.

* அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகத்தில் உள்ள 1 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

* ஒவ்வொரு முறை பயிற்சியைத் தொடங்கும்போதும் பாடங்களில் உள்ள கேள்விகளின் வரிசைமுறைகள் தானாகவே மாறிவிடும். இதே போன்று விடைக்குறிப்புளும் (Shuffle) மாறும்.

* முக்கிய வினாக்களை, குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும் வினாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனியே பயிற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடும் வகையில், புக்மார்க் வசதி செய்யப்பட்டுள்ளது.

* கணிதக் கேள்விகளுக்கு, பென்சில் பொத்தானை அழுத்தி தேவையான கணக்கை அலைபேசியிலேயே போட்டுப் பார்த்து விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

* மாணவர்கள் சரியான விடையைத் தேர்வு செய்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடையைத் தேர்வு செய்தால் சிவப்பு நிறத்திலும் சுட்டிக்காட்டும்.

* பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பயிற்சி பெற்ற பாடம், தலைப்பு, மதிப்பெண் விவரம் போன்றவை சுட்டிக்காட்டப்படும்.

முழுமையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கைத்தட்டல் சத்தம் கிடைக்கும். வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மரக்கோப்பை, வெள்ளிக்கோப்பை மற்றும் தங்கக்கோப்பைகள் காட்டப்பட்டு மாணவர்கள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவர்.

* மாணவர்கள் தேர்வெழுதிய நேரம், பாடம், பெற்ற மதிப்பெண் விவரம் போன்றவை அனைத்தும் தானாகவே சேமிக்கப்பட்டு விடுவதால் ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.

* மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை குறுஞ்செய்தி, ஈமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர முடியும்.

* தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்த்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட வினா விடைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆறு மாத உழைப்புக்குப் பிறகு தான் உருவாக்கிய செயலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட *ஆசிரியர் மதன் மோகன்,*

''கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெற பயிற்சி அளித்து வருகிறோம். அப்போது நன்றாகப் பயிலும் மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினாக்களில் தவறு செய்து 98 அல்லது 99 மதிப்பெண்கள் பெற்று சதத்தை தவற விடுகின்றனர். அதேபோன்று கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மாணவர்களுக்கு அலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்துகொண்டேன்.

அதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என யோசித்து, மாணவர்களுக்கு பிடித்த அலைபேசி விளையாட்டு போன்ற இந்த செயலியை உருவாக்கினேன். செயலி உருவாக்கத்தில் உதவிகள் செய்த தொழில்நுட்ப நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த உயரதிகாரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

செயலியைப் பதிவிறக்கம் செய்ய ப்ளே ஸ்டோர் இணைப்பு: பத்தாம் வகுப்பு செயலி CLICK HERE APK

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன் உருவாக்கி இருக்கும் இந்த செயலி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கும்.ஆசிரியர் *மதன் மோகன்*யை அனைத்து ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Play store Link: https://play.google.com/store/apps/details?id=com.tnschools.tamilquize

*தொடர்புக்கு: ஆசிரியர் மதன் மோகன் - 9952787972*
நன்றி!

அன்புடன்
*மு.சிவக்குமார், ப.ஆ*
ALL TRS TN... Siva.