Powered By Blogger

Saturday, 10 September 2016

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!

கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி!!
 மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி, கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:



காவல் துறை பணிக்கு வருவதற்கு முன்பு, கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தேன். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களே மிகச்சிறந்த முன்னுதாரணமாக உள்ளனர்.

மாணவர்களுக்கு தற்போதைய கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப போதிக்க வேண்டுமெனில், நாள்தோறும் புதுப்புது விஷயங்களை ஆசிரியர்கள் கற்க வேண்டும். தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போது சில ஆசிரியர்கள் தங்களை மாணவர்களாக கருதுகின்றனர். சிலர் அவ்வாறு கருதுவதில்லை. எவ்வாறு பாடம் நடத்துவது, சிறந்த முறையில் தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பயிற்சிகளை அரசு தான் செய்ய வேண்டுமென்பதில்லை. சொந்த முயற்சியில் கற்றுக் கொள்ளலாம். நாள்தோறும் தெரிந்துகொள்ளும் புதுப்புது விஷயங்களை, மாணவர்களுக்கு கற்றுத்தர பேசினாம். அறிவை வளர்க்க புத்தகம் தான் படிக்க வேண்டும் என்றில்லை, இணையதளத்தில் அனைத்து விஷயங்களையும் படிக்கலாம்.

மாணவர்களையும் இணையதளம் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும். கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit)*


*மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit)* 

*DEE PROCEEDINGS ந.க.எண்.012448/J3.நாள்:8/9/16_*





TALENT EXAM NEWS: மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

TALENT EXAM NEWS:

மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13இல் தொடங்குகிறது. இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கூறும்போது,


“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.

தகவல்களுக்கு  CLICK HERE.. என்ற இணையத்தைத் தேடலாம்.

மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' !

மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' !
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன்கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' 
விபரம் பெறப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாகவழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழத்தில் 2017 ம் ஆண்டு BE.d சேர்க்கைக்கு விண்ணப்பம் வெளியீடு!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழத்தில் 2017 ம் ஆண்டு BE.d சேர்க்கைக்கு விண்ணப்பம் வெளியீடு! 

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழத்தில் 2017 ம் ஆண்டு BE.d சேர்க்கைக்கு விண்ணப்பம்  

CLICK HERE... https://app.box.com/s/qvubukth7d611ccl664izijgpoztc2ep

டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!!

டிஜிட்டல் கல்விச் சான்றிதழ்களை வழங்க மத்திய அரசு திட்டம்!!! 

அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்விச் சான்றிதழ்களும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு, 
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக, "டிஜிட்டல் இந்தியா' பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியுள்ளார்.
முதலீட்டாளர்களின் நிதி வளங்களைப் பாதுகாக்கும் வகையில், நிதி சார்ந்த பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி, ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், கல்விச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக தேசியக் கல்வி ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில், புதிய கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெறுவதோடு, தாங்கள் ஏற்கெனவே பெற்ற சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றிக் கொள்ளலாம். அவர்களது விவரப் பட்டியலில் அனைத்துச் சான்றிதழ்களும் கிடைக்கும். இதன் மூலம் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பணியில் அமர்த்துபவர்களுக்கு எளிதில் கிடைப்பதோடு, சான்றிதழ்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழகங்களை நேரில் அணுகுவதும் குறையும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

*இது மிகவும் பயனுள்ள தகவல்.*நம்முடைய ஆவணங்கள் வழங்கும்போது விழிப்புணர்வு தொடர்பான விசயங்கள்..



*இது மிகவும் பயனுள்ள தகவல்.*நம்முடைய ஆவணங்கள் வழங்கும்போது விழிப்புணர்வு தொடர்பான விசயங்கள்..

நாம் தற்போது சிம், இருசக்கர வாகனம், கடன் என எதுவாங்கும் போதும் , இன்னும் எந்த வேலையாக 
இருந்தாலும் நம்முடைய *ஆதார் , ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அடையாள அட்டை என இன்னபிற ஆவணங்களில் , (Self Attest)* - கையெழுத்து இட்டு ஆதாரமாக தருகிறோம்.

நம்முடைய இந்த ஆவணங்களை , தெருவில் நின்று கொண்டு *சிம்* விற்கக் கூடியவர்களிடம் கூட சுய கையெழுத்து இட்டு கொடுத்து விடுகிறோம்.

அந்த ஆவணங்களை பெறக்கூடியவர்கள் அவர்கள் விரும்பியபடி இதனை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அவர்கள் நம்மிடம் நம் *புகைப்படம்* கேட்டால் அதனையும் கொடுத்து விடுகிறோம்.

நம்மிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களைக் கொண்டு , வேண்டுமானால் பல *சிம்*களை வாங்கலாம். அதனை எதற்கும் பயன்படுத்தலாம்.

சற்று முயற்சி செய்தால் நம் பெயரில் ஒரு வாகனத்தைக் கூட வாங்கி பதிவு செய்து விடலாம்.

இவ்வாறு , நம் பெயரில் வாங்கப்பட்டவைகள் ஒரு வேளை *தீவிரவாத செயல்களுக்கு* பயன்படுத்தப் பட்டால் , *நாம்* தான் *முதல் குற்றவாளி*யாக இந்திய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப் படுவோம்.

*இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு என்ன வழி ?*

இதற்குப் பிறகு நாம் கையெழுத்துப் போடும் போது கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

1. *கையெழுத்து*

2. *தேதி*

3. *கையெழுத்து இடுவதற்கான காரணம்.*

4. *இதனைத் தவிர்த்து வேறு எதற்கும் இது செல்லத்தக்கது அல்ல.*

இப்படி நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணத்திலும் அதனை கொடுப்பதற்கான காரணத்தையும் தேதியையும் எழுதி கையெழுத்து இட்டு கொடுக்க வேண்டும்.

இதனை பிறருக்கு கூறுவது அவர்களை இத்தகைய ஆபத்திலிருந்து காப்பாற்ற வழிவகுக்கும்.

*தகவல் பதிவு: ALL TRS TN... Siva.*

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர் நம்பிக்கை
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கல்விக்கொள்கை* ஒரு பார்வை..

*புதிய கல்விக்கொள்கை*

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.

4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.

5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.

6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.

8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.

9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.

10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.

11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B  என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும். 

12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B  எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.

13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.

14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.

17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும். 

18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.

19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.

20. ஆசிரியர்களைக்  கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.

22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.

23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.

Friday, 9 September 2016

*NHIS-2016திட்டத்தில் புதிய அட்டை பெற*

*NHIS-2016திட்டத்தில் புதிய அட்டை பெற* 

NHIS-2016 திட்டத்தில் புதிய அட்டை பெற பழைய 2012 ல் பெற்ற NHIS அட்டையின் எண்ணை பதிவு செய்து சந்தாத்தாரரின் பிறந்த தேதியை பதிவிடவும் 

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று 

'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது. இதன் முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, செப்., 6 முதல், வினியோகம் செய்யப்படுகிறது. 

'தேர்வர்கள், வரும், 23ம் தேதி வரை, தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JACTTO) _பழைய பென்ஷன் திட்டம்_தொடர்பாக (15.9.2016)அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது

தமிழக அரசு - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JACTTO) _பழைய பென்ஷன் திட்டம்_தொடர்பாக (15.9.2016)அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது


பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?

பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?

'வாட்ஸ் ஆப்' வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை பயன்படுத்தப் போவதாக, அந்த நிறுவனத்தை வாங்கியிருக்கும், 'பேஸ்புக்' நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதனால், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோர், தங்களது அந்தரங்க விஷயங்கள், பேஸ்புக்கில் பகிரப்படுமோ என கவலை அடைந்துள்ளனர்.


உலகில், 'வாட்ஸ் ஆப்' செயலியை, 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதை, சில ஆண்டுகளுக்கு முன், சமூக வலைத்தள நிறுவனமான, 'பேஸ்புக்' வாங்கியது; தற்போது, திடீரென ஒரு அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள், பேஸ்புக்கையும் பயன்படுத்துபவராக இருந்தால், அவர்களது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட விபரங்கள், பேஸ்புக்குடன் பகிரப்படும்' என்பதே அது. அதனால், தாங்கள் அனுப்பும் தகவல்கள், படம், வீடியோக்கள் கசிந்து விடுமோ என, 'நெட்டிசன்'கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.


இதுபோன்றவர்கள், வாட்ஸ் ஆப்பில் உள்ள, 'செட்டிங்ஸ்' வழியாக, 'அக்கவுன்ட்' பகுதிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றதும், 'ஷேர் மை அக்கவுன்ட்' என்ற வாசகமும், அதற்கு நேர் எதிரெ சிறிய பெட்டியும் இருக்கும். அதில், 'டிக்' செய்யப்பட்டு இருக்கும்; அந்த, 'டிக்'ஐ நீக்கியதும், வேறோர் திரை தோன்றும். அதில், 'உங்கள் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமா' என கேட்கப்பட்டு இருக்கும்; அதற்கு, 'கேன்சல், டோன்ட் ஷேர்' என, இரு, 'சாய்ஸ்' தரப்பட்டுள்ளது. 'டோன்ட் ஷேர்' எனப்படும், 'பகிர வேண்டாம்' என்ற வார்த்தையை, 'செலக்ட்' செய்தால் போதும்; உங்கள் விபரங்கள், பேஸ்புக்குடன் பரிமாறப்படாது.

உள்ளாட்சி தேர்தலில் அதிகாரிகள் 🍏 நியமனம் செய்வது குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்!!



🍎உள்ளாட்சி தேர்தலில் அதிகாரிகள் .... நியமனம் செய்வது குறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள்!!



கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு
மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்து உள்ளார் 

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம் 

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர,
'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.
அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது. இதற்கான கமிட்டி, விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2012ல், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையே அறிவிப்பதா அல்லது, புதிய அம்சங்களை சேர்ப்பதா; புதிதாக பாடத்திட்டம் ஏற்படுத்த, கமிட்டி அமைப்பதா என, பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

'மத்திய அரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, அல்லது அதைவிட தரம் உயர்ந்த பாடத்திட்டம் கொண்டு வர, முதல்வர் விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்' என்று, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''எந்த அளவுக்கு பாடத்திட்டம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியும். எனவே, கமிட்டியில் அவர்களை சேர்க்க வேண்டும்,'' என்றார்.

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்

7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியம் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு 100 சதவீத முத்திரைத்தாள் கட்டணத்திற்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றார். 

CPS ரத்து செய்ய வல்லுநர்குழுவில் கருத்து பரிமாற்றம் அழைப்புக்கடிதம்...

CPS ரத்து செய்ய வல்லுநர்குழுவில் கருத்து பரிமாற்றம் அழைப்புக்கடிதம்..


Thursday, 8 September 2016

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பிழையின்றி வாசிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!


பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படை விதிகள்...

பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படை விதிகள்...