Powered By Blogger

Monday, 7 September 2015

மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு.


புதுக்கோட்டை திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இலுப்பூா் அருகே உள்ள இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்று வெற்றி பெற்றனா்.
மறுநாள் சனிக்கிழமை புதுக்கோட்டையில் அதே பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவா் முத்துப்பாண்டி செய்திருந்த படைப்பான செயற்கைக்கோள் படைப்பு முதலிடத்தினை பிடித்து மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. அதனைத்தொடா்ந்து மாலையில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலா்கள்(பொ) புதுக்கோட்டை ப.மாணிக்கம், அறந்தாங்கி ஆா்.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி கலந்துகொண்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு  தோ்வு பெற்ற படைப்பினை படைத்த முத்துப்பாண்டியை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழை  வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து இன்று 7ந்தேதி(திங்கட்கிழமை) காலை இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை இறைவணக்கக்கூட்டத்தில் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்ற செயற்கைக்கோள் படைப்பினை படைத்த மாணவா் முத்துப்பாண்டி மற்றும் கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் தோ்வு பெற்ற படைப்பினை படைத்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் சி.பழனிவேலு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் மாணவா்கள் சிறந்த படைப்புகளை படைக்க வழிகாட்டியாக செயல்பட்ட வழிகாட்டி ஆசிரியை ஆா்.சாந்தியை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உதவித்தலைமையாசிரியா்கள் ஆசிரிய. ஆசிரியைகள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
படவிளக்கம் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா் முத்துப்பாண்டியை பாராட்டி புதுக்கோட்டை திருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலா் (பொ) ப.மாணிக்கம் மற்றும் பலா் உள்ளனா்.

@  காரைக்குடி:தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், தொடக்க பள்ளியில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு,பல்வேறு பள்ளிகளுக்கு, பணி நிரவல் அடிப்படையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பணி நிரவலுக்கு பின் சுமார் 900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் இன்னமும் உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், இன்னும் தாமதப்படுத்தி கலந்தாய்வு தேதி அறிவிக்கும்போது, மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.



No comments:

Post a Comment