Monday, 14 December 2015

3 கிராமங்களைத் தத்தெடுத்தார் நடிகர் சூர்யா!

3 கிராமங்களைத் தத்தெடுத்தார் சூர்யா!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை நடிகர் சூர்யா தத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கிறது. இருளர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் இப்பகுதி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாததால் அவர்களால் அரசின் உதவிகளைப் பெறமுடியவில்லை. அப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment