Thursday, 31 December 2015

தமிழகத்தில. உள்ள அனைத்து உயர் தொடக்க பள்ளிகள் LIST SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்படட்டுள்ளது.

தமிழகத்தில. உள்ள அனைத்து உயர் தொடக்க பள்ளிகள் LIST
 SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்படட்டுள்ளது. அதன் விவர


Upper primary schools.. SLAS TEST..TN

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் (திருத்தப்பட்டது) திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது திருத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு... (இது இறுதியான பட்டியல்)

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள் (திருத்தப்பட்டது)
திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது திருத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு... (இது இறுதியான பட்டியல்)

By..SSA TIRUPATTUR., DT.31-12-15.


3 மற்றும் 5 வகுப்புகள் தேர்வு நடைபெறும் பள்ளிகள்:மற்றும் பார்வையாளர்கள் 
1. PUMS PUDHUR MARIMANIKUPPAM - 3rd ENGLISH Medium and 5th TAMIL Medium...SARALA..BRT
2. PUPS ANDIYAPPANUR - 3rd ENGLISH.. Medium and 5th TAMIL Medium...SEEMA..BRT
3. ADWPS KARUPPANUR - 3, 5...PARTHIBAN..BRT
4. PUPS BOMMIKUPPAM -3, 5..JEEVITHA..BRT
5. APS PALLAVALLI - 3, 5...NAGARAJ..SPL TRS
6. PUMS KATHIRIMANGALAM - 3, 5...SUMATHI..SPL TRS
7. PUPS VENKATESAPURAM - 3, 5..MEGANATHAN..BRT
8. PUPS SAMUTHIRAM - 3, 5...ARUNKUMAR..BRT
9. PUPS ACHAMANGALAM - 3, 5...SARKKI..BRT
10. PUMS KAVARAIYUR - 3, 5..SRINEEVASAN..BRT
11. PUMS VINAYAGAPURAM, 3'5...MALAIYAN..BRT
12. PUMS LALAPET - 3, 5...PIRABAKARAN..BRT.
13. APS DOMINIC SAVIO - 3, 5... RAMU..SPL TRS.
14. APS GOVT GARDEN - 3, 5 ...BUVANA ROHINI..SPL TRS
15. PUPS NM KOVIL -3,5... KUMAR..BRT.


8 -ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகள்: இறுதி பட்டியல் இன்று மாலைக்கள் உறுதி செய்யப்படும்.
ஒரு பள்ளி மாற வாய்ப்புண்டு.
பார்வையாளர்கள் பட்டியலும் இன்று மாலை தெரியவரும்.

1. GHS ACHAMANGALAM
2. PUMS VELAN NAGAR
3. AMS RCM KOVILUR
4. PUMS KAVARAIYUR
5. PUMS VINAYAKAPURAM
6. GHSS VADUGAMUTHAMPATTI
7. MMS OLD MUSLIM GIRLS
8. AHSS DOMINIC SAVIO
9. GGHSS MEENAKSHI
10. AHSS OSMANIYA
அன்புடன். SSA TIRUPATTUR.
NEWS.  ALL TRS TN.. SIVA


திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி


















மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்,  DIET முதல்வர்,விரிவுரையாளர்கள, ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்,SSA மேற்ப்பார்வையாளர், கல்வியாளர்கள் பர்வையிட்டு இப்பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என அனைவரும்  விடுமுறை நாட்களில் தன்னார்வத்தோடு சிறப்பாக  நடத்திகொண்டு இருக்கும் அனைவரையும் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.

   இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்கள்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம். மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கிய மகளீர் அமைப்புக்கும் நன்றியினை உரித்தாக்குகிறோம். இப்பயிற்சியில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.

மீண்டும் அனைவருக்கும் நன்றியினை கூறும்
ALL TRS TN.. Siva.
www.alltrstnsiva.blogspot.in

மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவு

மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவு!
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.


மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, மேனகா, நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம், பால் புகட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு, 26 வார காலம், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை, தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென, தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறையை, எட்டு மாதங்களாக அதிகரிக்க வேண்டுமென கருதுகிறோம். இதுபற்றி, அமைச்சரவை செயலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்; விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்

Tuesday, 29 December 2015

ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு

ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு
பெங்களூரு:'கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து,
யூ.ஜி.சி., அறிக்கை அனுப்பிஉள்ளது.ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடப்பது, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் மூலம், மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தி வரும் பல்கலைக்கழகங்கள், அதற்கு பயன்படுத்தப்படும், 'சாப்ட்வேர்' நடைமுறை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டும், ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்த்து வரும் பல்கலைக்கழகங்கள், 2016 -- 17ம் கல்வியாண்டில், எல்லா படிப்புகளுக்கும், ஆன்லைன் மூலமே, மாணவர்களை சேர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கூற வேண்டும்.
இதுதொடர்பாக, அடுத்த மாதம், பல்கலைக்கழகங்களுடன், ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு வேத் பிரகாஷ் கூறினார்.

NMMS SAT MODEL

SAT தேசிய திறன் அறிவு தேர்வு மாதிரி வினாவிடை

http://sivapattu.blogspot.in/2015/12/nmms-sat-question-for-viii-std.html?m=1

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்..திருப்பத்தூர்

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்

SLAS - தேர்வு நடைபெறும் பள்ளி விவரங்கள்
திருப்பத்தூர் வட்டாரத்தில் SLAS - தேர்வு நடைபெறும் பள்ளிகளின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதிகள்;
 3 மற்றும் 5-ஆம்  வகுப்புகள்  :
5.1.2016 - காலை - தமிழ் ; மதியம் - கணக்கு
6.1.2016 - ஆங்கிலம்
8-ஆம்  வகுப்பு ;
7.1.2016 - காலை - தமிழ் ; மதியம் - கணக்கு
8.1.2016 - காலை - ஆங்கிலம் ; மதியம் - அறிவியல்


தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர் மற்றும் தேர்வு நடைபெறும் வகுப்புகள் - விவரம்:
1. APS- GOVT GARDEN - 3,5
2. APS- PALLAVALLI - 3,5
3.PUPS- KODUMAMPALLI - 3,5
4.GGHSS-MEENAKSHI - 8
5.PUPS-BOMMIKUPPAM - 3,5
6.MMS-OLD MUSLIM GIRLS  - 3,5,8
7.GHSS-VADUGAMUTHAMPATTI - 8
8.PUMS-VELAN NAGAR - 3,5,8
9.PUPS-ACHAMANGALAM  -3,5
10.GHS-ACHAMANGALAM - 8
11.MPS-NEW MUSLIM BOYS - 3,5
12.PUMS-PUDHUR MARIMANIKUPPAM -3 ENGLISH ONLY
13.APS-OSMANIYA -3,5
14.PUMS-KAVARAIYUR -3,5,8
15.AMS-RCM KOVILUR -8
16.PUMS-LALAPET -3,5
17.MMS-OLD MUSLIM BOYS -3,5,8
18.AHSS- DOMINIC SAVIO -8
19.APS- DOMINIC SAVIO -3,5
20.PUMS- VINAYAKAPURAM -3,5,8
21.AHSS-OSMANIYA - 8

ALL TRS TN.Siva

All Trs Tn: ஜனவரி 1 முதல் எந்தெந்த துறைகளுக்கு "பான் கார்டு" கட்டாயமாகிறது; வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு

ஜனவரி 1 முதல் எந்தெந்த துறைகளுக்கு "பான் கார்டு" கட்டாயமாகிறது; வருமானவரித்துறை பட்டியல் வெளியீடு





Centum Coaching Team 10th,+2 STUDY MATERIAL

Centum Special Question Paper - 12th Commerce
Centum
 Special Question Paper - 10th English
Centum
 Special Question Paper - 10th Maths
Centum
 Coaching Team - 10th Social Science
10th Study Material - Maths
10th Study Material - Social Science March 2014 Questions
12th Study Material - Chemistry June, March, October Question Analysis

CLIK HERE

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்
இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்றதலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அப்போது நேயர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.

இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று அவர் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.அப்போது மோடி கூறியதாவது:–வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, உற்சாகம், வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும் ஆண்டாக இருக்கட்டும். 
 
தீவிரவாதம், பூமி வெப்பமயமாதல், இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகள் இல்லாத ஆண்டாகவும் அமையட்டும்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ‘இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ (‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’) என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் இந்த திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 16–ந்தேதி இத்திட்டத்தை மத்திய அரசு முழு உத்வேகத்துடன் தொடங்கும்.
 
சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரும் புதுமை சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளை புதியன தொடங்குவோம் திட்டத்தில் பெற இயலும். உற்பத்தி துறை, சேவைத்துறைஅல்லது விவசாயத்துறை என எந்த துறையில் வேண்டும் என்றாலும் அவற்றில் புதிய சிந்தனைகளும், புதிய வழிகாட்டுதல்களும், புத்தாக்கமும் இருக்கவேண்டும். 
 
ஏனெனில் புதுமை சிந்தனைகள் இல்லாமல் இந்த உலகம் முன்னேற முடியாது.அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இந்த திட்டம் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. திறமையை வெளிக்காட்டும் அனைத்து பகுதி இளைஞர்களுக்கு உரியதாகவும் இருக்கும்.
 
இத்திட்டமானது, நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இணைக்கப்படும்.புதிய தொழில்கள் தொடங்குவது, தொழில் முனைவதை ஊக்கப்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றில் வங்கி கடன் அளிப்பதையும் இத்திட்டம் லட்சியமாக கொண்டு உள்ளது. ஜனவரி 16–ம் தேதியன்று இது தொடர்பான விரிவான பிரசாரத்தை உங்கள் முன்பாக வைப்பேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

.மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 
 
இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.அதே சமயத்தில், ஊர்திப்படி பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் வழங்கிய, தேசிய அடையாள சான்றையே ஏற்க வேண்டும் என, மாநில ஆணையர் கூறியிருந்தார். 

அதை உறுதி செய்யாமல், அரசாணை உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. செவித் திறனை இழந்து, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு, ஊர்திப்படி மறுக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் கூடாது என வலியுறுத்தியும், சமீபத்திய அரசாணையில், அது இல்லாததது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

சம்பளமின்றி 18 ஆயிரம் ஆசிரியர்கள் திண்டாட்டம்: 7 மாதமாக தொடரும் அவலம்

சம்பளமின்றி 18 ஆயிரம் ஆசிரியர்கள் திண்டாட்டம்: 7 மாதமாக தொடரும் அவலம்
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட 18,205 ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்குவதால் அவதிக்கு உள்ளாகின்றனர்.திண்டுக்கல்லில் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், செயலாளர் ஜெகதீஷ்குமார், பொருளாளர் பிரான்சிஸ் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது:


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 7,979பட்டதாரி ஆசிரியர்களும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் மூலமாக 6,872 பட்டதாரி ஆசிரியர்களும், 1,590 முதுகலை ஆசிரியர்களும், 1,764 ஆய்வக உதவியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.சம்பளம் வழங்குவதற்கான ஆணை மாதம்தோறும் தாமதமாக வழங்கப்படுகிறது.இதனால் கடந்த 7 மாதங்களாக சம்பளம் பெறுவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கருவூலத்தில்கேட்டால் எஸ்.எஸ்.ஏ.,மற்றும்ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்கின்றனர். அவர்களை தொடர்பு கொண்டு கேட்டால் நிதித்துறை தாமதம் என அலைக்கழிக்கின்றனர்.ஒவ்வொரு மாதமும் ஊதியம் 15ம் தேதி முதல் 20ம் தேதிக்கு இழுத்தடிக்கப்படுகிறது.


மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள் வீட்டுக்கடன், வங்கிக்கடன், பால், மளிகை பொருட்கள், குழந்தைகளின் படிப்பு செலவு, வாகனங்களுக்கு பெட்ரோல், பஸ் செலவிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்படுகிறோம்.கடந்த நவம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை. நாங்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கல்வித்துறையில் அனைத்து ஆசிரியர்களின் சம்பள கணக்கு தலைப்புகளை நிரந்தர சம்பள கணக்கு (பெர்மனென்ட் ஹெட்) உடன் இணைத்து ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்

30-12-2015 -தொடக்கல்வித்துறையில் பதவி உயர்வு - இயக்குநர் அனுமதி.

30-12-2015 -தொடக்கல்வித்துறையில் பதவி உயர்வு - இயக்குநர் அனுமதி.

இன்று (29.12.2015) தொடக்கக் கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ரெ. இளங்கோவன் அவர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரிர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் படி பதவி உயர்வு 30-12-2015 அன்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் இன்று (29.12.2015) அனுமதி அளித்துள்ளார்கள்.

Monday, 28 December 2015

ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.


ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும்
 குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

தமிழ் நாட்டில் 01.04.2003 க்கு முன் நியமனம் செய்யப்பட்டு01.04.2003க்குப்பின் நிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்யப்பட்டஅரசு
ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும்
மரணம்அடைந்தவர்களுக்கு
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்பஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.

CLICK HERE DOWNLOAD

ALLS TN. Siva
V ENGLISH AND VIII TAMIL SLAS QNS






























ALL TRS TN-SIVA, www.alltrstnsiva.blogspot.in.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்
இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்றதலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அப்போது நேயர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.


இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று அவர் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.அப்போது மோடி கூறியதாவது:–வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, உற்சாகம், வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும் ஆண்டாக இருக்கட்டும். தீவிரவாதம், பூமி வெப்பமயமாதல், இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகள் இல்லாத ஆண்டாகவும் அமையட்டும்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ‘இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ (‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’) என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் இந்த திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 16–ந்தேதி இத்திட்டத்தை மத்திய அரசு முழு உத்வேகத்துடன் தொடங்கும்.


சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரும் புதுமை சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளை புதியன தொடங்குவோம் திட்டத்தில் பெற இயலும். உற்பத்தி துறை, சேவைத்துறைஅல்லது விவசாயத்துறை என எந்த துறையில் வேண்டும் என்றாலும் அவற்றில் புதிய சிந்தனைகளும், புதிய வழிகாட்டுதல்களும், புத்தாக்கமும் இருக்கவேண்டும். ஏனெனில் புதுமை சிந்தனைகள் இல்லாமல் இந்த உலகம் முன்னேற முடியாது.அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இந்த திட்டம் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. திறமையை வெளிக்காட்டும் அனைத்து பகுதி இளைஞர்களுக்கு உரியதாகவும் இருக்கும்.


இத்திட்டமானது, நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இணைக்கப்படும்.புதிய தொழில்கள் தொடங்குவது, தொழில் முனைவதை ஊக்கப்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றில் வங்கி கடன் அளிப்பதையும் இத்திட்டம் லட்சியமாக கொண்டு உள்ளது. ஜனவரி 16–ம் தேதியன்று இது தொடர்பான விரிவான பிரசாரத்தை உங்கள் முன்பாக வைப்பேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. 


அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்; அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.


மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இனி மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.


* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.

* சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.

* அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.


* அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.

* மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.

* மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார். 

சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி; ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது

சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி; ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது
தற்போது, சாதாரண லேப்டாப்புகள் மீதான ஆர்வம் மெதுவாக குறைந்து வருகிறது. இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. 


சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால் சாதாரண லேப்டாப் ஸ்கிரீன் டச் ஸ்கிரீனாக மாறிவிடும். கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி டச் வசதியை தருகிறது. இந்த கருவி மூலமாக போட்டோவை என்லார்ஜ் செய்யலாம், விண்டோவை மூவ் செய்யலாம். லிங்கை கிளிக் செய்யலாம், கைவிரலால் படத்தை கூட வரையலாம். கைவிரல்கள் மட்டுமில்லாது எந்த பொருளைக் கொண்டும் ஸ்கிரீனை தொட்டால் அது டச் ஸ்கிரீனாக இயங்கும்.

இதற்காக எந்த சாப்ட்வேரையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கருவியின் ஒருபகுதியை யூ.எஸ்.பி. போர்ட்டிலும், மற்றொரு பகுதியை லேப்டாப் ஸ்கிரீனின் அடிப்பகுதியிலும் பொருத்தினால் போதும். 

முதற்கட்டமாக, 15.6 இன்ச் ஸ்கிரீன் லேப்டாப்புகளுக்கு மட்டுமே இந்த கருவி வெளிவருகிறது. விண்டோஸ் மற்றும் குரோம் ஓ.எஸ்.களில் இயங்கும் கம்யூட்டர்களுக்கு பொருத்தமாக இயங்கும். ஆனால், மேக் ஓ.எஸ்-க்கு இன்னும் வெளிவரவில்லை. 

வரும் 2016-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த 'ஏர் பார்' கருவியின் விலை 49 அமெரிக்க டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,238.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கல்விச் செய்தி: பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்

பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்

பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால்,கடல் நீர் மட்டம் அதிகரித்து அதன் மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.


இது குறித்து ஆராய்ச்சி செய்த கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மேத்யூ டம்பெரி ஆகியோர்,பூமியின் வெப்பம் அதிகரித்து அதன் மூலம் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வருவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து அதன்மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.துருவப் பகுதிகள் உருகி வருவதால்,துருவங்களின் அடர்த்தி குறைந்து வருகிறது அது மட்டுமல்லாது நிலவின் ஈர்ப்பு சக்தியும் குறைந்து வருகிறது.இவை இரண்டுமே பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள மேத்யூ டம்பெரி அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள்பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும் பருவநிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்காக, இலட்சக்கணக்கான கோடிகளை செலவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தை விலை ரூ.608 ஆகும்.


நாட்டில் தற்போது 16.35 கோடி எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.எரிவாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சமையல் எரிவாயுக்கு வழங்கும் மானியத்தால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், வசதி படைத்தவர்கள் தங்களது மானியத்தை தாங்களே முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், சந்தை விலையில் வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.


அதையேற்று, 57.5 லட்சம் பேர் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக வருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரிவாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது.இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தியிருந்தாலும் மானியம் ரத்து செய்யப்படும்.எனவே, அதிக வருமானம் பெறும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரிவாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

alltrstnsiva: TNTET :தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதிகெடு ...

TNTET :தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இறுதிகெடு ...

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு சிறப்பு வகுப்பு.

 திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி  நடக்கிறது.

 திருப்பத்தூர் ஒன்றியத்தில் நடக்கும் NMMS  பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை  VSV நகராட்சி பள்ளியில் நடபெறுகிறது. இன்று பயிற்சி நடைபெற்ற பள்ளியில் 11.00 மணிக்கு திருப்பத்தூர், கிருஷ்ணகிரி  மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பார்வையிட வருகை புரிந்தனர். இப்பயிற்சியில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினர். மேலும் இப்பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க ஆர்வலர்கள், விடுமுறை நாட்களில் சிறப்பாக  நடத்திகொண்டு இருக்கும் ஆசிரியர்களையும் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.

   இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைகின்றனர்.
🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
www.alltrstnsiva.blogspot.in

நன்றி
நன்றி










அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்
www.alltrstnsiva.blogspot.in



எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு

எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய பாடத் திட்டங்களின் படி, செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் ஓவியம், இசை, தையல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.


இதை பயிற்றுவிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, அதிக அளவில் கலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். கலை ஆசிரியராக விரும்புவோர், பிளஸ் 2 முடித்து, தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் தொழில்நுட்ப தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். பின், அவர்கள்,டி.டி.சி., எனப்படும் மூன்று மாத ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்து, சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பு, 2007ம் ஆண்டு வரை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட வளாகங்களில், பள்ளிக் கல்வித் துறையால் நேரடியாக நடத்தப்பட்டன. ஆனால், 2007க்கு பின், ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடக்கப்பட்டுள்ளது. அதனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிகள் இருந்தும், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

Sunday, 27 December 2015

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகள்

பள்ளிக்கல்வி - மழை பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் இரண்டாம் கட்ட தூய்மை பணிகளை 28/12/2015 முதல் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்
CLICK HERE - DSE - II nd SPELL CLEANING PROCESS IN FLOOD AFFECTED DIST - DIR PROC

https://drive.google.com/file/d/0B69z3JTclPnxVWx5LXdxZ21XeDQ/view

இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்

இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்

தற்போதுள்ள இந்திய அரசு டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயதிற்கான AgriMarket and Crop Insurance மொபைல் ஆப பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் விவசாய பொருட்களுக்கான விலையை அறியலாம்.


இந்த மொபைல் ஆப்இந்திய அரசின் விவசாய துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது அரசாங்கம் பல விதங்களில் விவசாயத்திற்காக செலவிடுகிறது. ஆனால் பலரது வேலை குறைபாட்டால் அது விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை, இதனை போக்கும் விதமாக இந்த மொபைல் ஆப் செயல்ப்படும். மேலும் பயிர் கடன், இன்சூரன்ஸ் மற்றும் மானியத்தொகை போன்ற பல விசியங்களை ஆப் மூலம் அறியலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.brinvik.vksKBazar.app&hl=en


https://play.google.com/store/apps/details?id=mgov.gov.farmer&hl=en

96 வகை சிற்றிலக்கியங்கள் - தெரிந்துகொள்வோம்.


96 வகை சிற்றிலக்கியங்கள்   - தெரிந்துகொள்வோம்.

1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம்
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - -
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை - -
11. இருபா இருபஃது
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் - வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை -
28. கண்படை நிலை -
29. கலம்பகம் - 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.
36. கைக்கிளை - ஒரு தலைக்காமம.
37. கையறுநிலை - உற்றார் இறந்த  
பொழுது வருந்துவது.
38. சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது.
39. சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது.
40. சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து.
41. செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல்.
42. செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம்.
43. தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள்
44. தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள்
45. தண்டக மாலை
46. தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்.
47. தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்.
48. தானை மாலை - கொடிப்படை.
49. தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது.
50. துயிலெடை நிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல்.
51. தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல்.
52. தொகைநிலைச் செய்யுள்
53. நயனப்பத்து - கண்.
54. நவமணி மாலை -
55. நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல்.
56. நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று.
57. நான்மணி மாலை
58. நூற்றந்தாதி
59. நொச்சிமாலை - மதில் காத்தல்.
60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
61. பதிற்றந்தாதி - -
62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
63. பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது.
64. பல்சந்த மாலை
65. பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது.
66. பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள்.
67. பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.
68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள்.
69. புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு.
70. புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க.
71. புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க.
72. பெயர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
73. பெயர் இன்னிசை  பாட்டுடைத் தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
74. பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல்.
75. பெருமகிழ்ச்சி மாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு.
76. பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து.
77. போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி.
78. மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண்.
79. மணிமாலை
80. முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது.
81. மும்மணிக்கோவை
82. மும்மணிமாலை
83. மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது.
84. வசந்த மாலை - தென்றல் வருணனை.
85. வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு.
86. வருக்கக் கோவை
87. வருக்க மாலை
88. வளமடல் - மடலேறுதல்.
89. வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல்.
90. வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம்.
91. வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது.
92. விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.
93. விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது.
94. வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல்.
96. வேனில் மாலை - இளவேனில்,

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்- தெரிந்துகொள்வோம்.


நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.

கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.

1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II)
MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு:
(CANNED, PACKAGED DRINKS):
REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்:
(SALTED, PICKLED FOODS):
விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...

9.பண்ணை மீன்கள்: (இணைக்கப்பட்ட படத்தை காண்க)
FARMED FISH: பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை - "SUGAR FREE", "DIET", "LITE", "FAT FREE" போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.

-Thanks to
Dr.B.Santhosh Saravanan, M.D(A.M)., Ph.D(N.D).,
Naturopathic Physician.

கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு

கழிப்பறைகளை சுத்தம் செய்யஆட்கள் நியமிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கழிப்பறைகளை சுத்தம் செய்ய, பகுதி நேர பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டும், 27 ஆயிரத்து, 700 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், 7, 247 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், அனைத்து பள்ளிகளிலும், பல்வேறு திட்டங்களில், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.


ஆனாலும், அவற்றை சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லாத சூழலில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில், மேற்கண்ட பள்ளிகளில் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை நியமிப்பதற்கான, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தினக்கூலி அடிப்படையில், மாதத்துக்கு, 22 நாள் மிகாமலும், ஆண்டுக்கு, 10 மாதத்துக்கு மிகாமலும், பணியாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில், பள்ளியின் தேவைக்கேற்ப, பகுதி நேரம், முழு நேரம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் துப்புரவு சாதனங்கள் உள்ளிட்ட விவரங்களை, பள்ளியிலிருந்து சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்களின் ஊதியமாக ஆண்டுக்கு, 39.79 கோடி ரூபாயும், துப்புரவு சாதனங்களுக்கு, 17.84 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து தலைமை ஆசிரியர்களும், இந்த விவரங்களை படிவங்களில் நிரப்பி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், ஓரிரு நாளில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு

இன்ஸ்பயர்' விருதுக்கான உதவித்தொகை6,293 பேருக்கு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,293 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியரிடையே, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு போட்டியிட விரும்பும் மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மாணவியர் தேர்வுஅந்த நிதியில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.


வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட, மாநில, தேசிய விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், இவ்விருதுக்கு போட்டியிட பிற்படுத்தபட்டோர் மற்றும் பொதுப்பிரிவில், 4,612 பேரும், எஸ்.சி., பிரிவில் 1,621 பேரும், எஸ்.டி., பிரிவில் 60 பேரும் சேர்த்து மொத்தம் 6,293 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேரடியாக வரவுஇவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், 3.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மாணவ, மாணவியரின் வங்கிக்கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்

நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு

நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு
இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.

நாட்டிலுள்ள 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மதுரையில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது.தேர்வு மையத்தில் ஏற்படும், அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்க, 'விண்ணப்பதாரர்கள் தங்கள் கைகளில் அணிந்துள்ள கைக்கடிகாரம், பேனா, தோல் மற்றும் துணியினாலான 'பை'களை அறைக்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. தேர்வு அறையில் பேனா வழங்கப்படும். இதுகுறித்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.


'நெட்' தேர்வில் பங்கேற்க உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: வட இந்தியாவில் நடந்த தேர்வு குளறுபடிகளை தவிர்க்கவே, யு.ஜி.சி., இந்த விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது.


தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய 14 நடைமுறைகள் குறித்து டிச.,15ல் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளும்படி விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்தந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு அறை அனுமதி சீட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறை பேனா, பென்சில், போன்ற பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. இம்முறை அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை, என்றனர்.---

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோஅல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?


பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:


தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள்:


பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.கட்டணம்,பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.


செலுத்தும் முறை:


அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரைபணமாகச் செலுத்தலாம்.


அஞ்சல் மூலம் செலுத்த:


உதவி இயக்குநர் (வெளியீடுகள்),எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,சென்னை-600 002என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.


விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:


பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.


நிபந்தனைகள்:


விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


எப்படி பெறுவது?


அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.


விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:


சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம்இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்

மேலும் விவரங்கள்.

உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm


விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக்கொள்ளலாம். (www.seithiula.blogspot.in)


தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:****************************************************************சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.


சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு


ஆதார் எண் கொடுத்தால்தான் சம்பளம்: கருவூலம் எச்சரிக்கையால் அரசு ஊழியர்கள் தவிப்பு

நாடு முழுவதும் அரசின் உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும், மத்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஆதார் எண் கட்டாயமல்ல’ என மீண்டும் தீர்ப்பளித்ததுடன், ‘ஆதார் எண் கட்டாயம் அல்ல’ என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த குழப்பம் காரணமாக, சிலர் ஆதார் பெறுவதற்கான முயற்சியையே கைவிட்டனர்.


இந்நிலையில், காஞ்சிமாவட்ட கருவூலம் சார்பில் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பாக கோப்புகளை வழங்கும்போது, ஆதார் எண்ணும் கட்டாயம் இணைத்து வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கருவூலங்களிலும் ‘ஆதார் எண்ணை இந்த மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாத ஊதியம் வழங்கப்படாது’ என அரசு ஊழியர்களை எச்சரித்துள்ளன.


இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘ஆதார் அட்டை கட்டாயமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியதால், பல அரசு ஊழியர்கள் ஆதார் அட்டையை வாங்குவதற்கான முயற்சியை இதுவரை எடுக்காமலே இருந்தோம். ஆனால், இப்போது ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என கருவூல நிர்வாகம் கூறுகிறது. கனமழையின் காரணமாக இரவு பகல் பரமால் பணி செய்தோம். இதனால் ஆதார் எடுக்க முடியவில்லை. கூடுதல் அவகாசம் கொடுத்தல் ஆதார் அட்டையை வழங்குவோம். ஒரு சிலர் ஆதார் எண் தரவில்லை என்றாலும், தந்தவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படமாட்டது என்று கூறுவது ஏற்புடையாத இல்லை என்றனர்.


சம்பளம் கிடைக்குமா?
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு, 19ம் தேதிக்குள் கருவூலத் துறையிடம் வழங்கப்படும். இந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் இல்லாத காரணத்தால், அதை இந்த மாதத்துக்குள் (டிசம்பர்) முடிக்க முடியுமா என்று அரசு ஊழியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், டிசம்பர் 31ம் தேதி சம்பளம் கிடைக்குமா என தெரியவில்லை. ஆதார் எண்ணை சமர்ப்பிக்க போதிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இணையும் கரங்கள்

இணையும் கரங்கள்



      இனி ஒரு விதி செய்வோம்..

சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு.

மனிதவளத்தை ஒன்றுதிரட்டி பேரிடரிலிருந்து நம்மை நாமே காப்போம்..

தோழர்களே இனிவரும் காலங்களில் விபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படின் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று நம்மால் முடிந்த மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்ய தன்னார்வம் உள்ளவர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஒரு குழுவினை உருவாக்க உள்ளோம்..


இதில் தன்னார்வம் உள்ள தோழர்கள் தங்களின்

மாவட்டம்,
பெயர்,
பணி& பதவி,
கல்லூரி மாணவர் எனில் கல்லூரியின் பெயர்,
வீட்டு முகவரி ,
அலுவலக முகவரி,
தொலைபேசி எண்,
மின்னஞ்சல் முகவரி
போன்ற முழு விபரங்களையும் தெளிவாக குறிப்பிடவும்.

மேலே உள்ளவற்றில் நீல நிறத்தில் உள்ளவற்றிற்கு கட்டாயம் நிரப்புங்கள்...

இந்தக் குழுவில் இணைய மற்றும் விவரங்களை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்...

பதியப்பட்ட  விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்...

நான்  தஞ்சை மாவட்டத்தின் பேரிடர் மீட்புக் குழுவில் உள்ளேன்..

இந்தக் குழுவில் இணையும் தன்னார்வலர்களுக்கு அவர்களின் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே முதல் உதவி பயிற்சிகள், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் வழங்கி அவர்களைக் கொண்டு அவர்களின் பகுதியில் பேரிடர் மீட்புக் குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்..

இந்தப் பயிற்சியை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆசிரியராக உள்ளவர்கள் பயிற்சிக்கு செல்ல Red cross society முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து அனுமதியும் பெற்றுத்தந்திடுவார்கள்.

இந்தக் குழுவில் இணைபவர்களைக் கொண்டு WhatsApp & facebook-ல் ஒரு குழு உருவாக்கப்படும்.

இந்தக் குழு ஆபத்து காலங்களிலும், உதவி தேவைப்படும் பொழுதும் மட்டுமே உயிர் பெரும். இந்தக் குழுவினை பொழுது போக்கிற்கு பயன்படுத்த அனுமதி இல்லை..

ஆபத்தின் போது அடிக்கும் அலாரமாக மட்டுமே இந்தக் குழுக்கள் இயங்கும்.
தன்னார்வலர்கள் மீட்புப் பணியிலோ, நிவாரணப் பணியிலோ நேரடியாக ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்தியன் ரெட் கிராஸின் மூலம் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக் குழுவினருக்கு என்று தனி அடையாள அட்டை வழங்கப்படும். எனவே அவர்கள் சேவை செய்ய உலக நாடுகள் அனைத்திலும் தனி அங்கீகாரம் உண்டு..

Disaster Response Team Member சேவை செய்ய தடை ஏதும் இல்லை..

முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாகவே கருதுகிறோம்..

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

மேலும் விவரங்களுக்கு நமது  http://inaiyumkarangal.blogspot.in/ என்ற இணைய முகவரியில் இணைந்திருங்கள்.




-இவண்
தேவராஜன்,
Cell- 9994101709
பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர்.
தஞ்சாவூர் ரெட் கிராஸ்

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா? படித்துத்தான் பாருங்களேன். !

உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை அடையாளம் காட்டுகிறதா? படித்துத்தான் பாருங்களேன். !

a

உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.

b

உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

c

உங்கள் பெயர் C என்ற எழுத்தில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

d

உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

e

உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பீர்கள்.

f

உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

g

உங்கள் பெயர் G என்ற எழுத்தில் தொடங்கினால், நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

h

உங்கள் பெயர் H என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

i

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

j

J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

k

உங்கள் பெயர் K என்ற எழுத்தில் தொடங்கினால், ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.

l

உங்கள் பெயர் I என்ற எழுத்தில் தொடங்கினால், வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

m

M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவும





n



N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.



o



அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.



p



உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பத— தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.



q



Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.



r



உங்கள் பெயர் R என்ற எழுத்தில் தொடங்கினால், உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.



s



S என்பது கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.



t



உங்கள் பெயர் T என்ற எழுத்தில் தொடங்கினால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.



u



உங்கள் பெயர் U என்ற எழுத்தில் தொடங்கினால், அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும்.



v



உங்கள் பெயர் V என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.



w



உங்கள் பெயர் W என்ற எழுத்தில் தொடங்கினால், கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.



x



உங்கள் பெயர் X என்ற எழுத்தில் தொடங்கினால், சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.



y



சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.



z



உங்கள் பெயர் Z என்ற எழ தொடங்கினால், இந்த எழுத்தை உடையip பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு[truncated by WhatsApp]

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு நேற்று 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி நடக்கிறது.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   நேற்று 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி  நடக்கிறது.

 திருப்பத்தூர் ஒன்றியத்தில் உதவி தொடக்க அலுவலர்கள் நேற்று காலை 10 மணிக்கு    VSV நகராட்சி பள்ளியில் NMMS வகுப்பை தொடங்கி வைத்தார். காலை 10 மணி முதல் மாலை 3.30  வரை  நடைபெறும். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைவார்கள்.

🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.

கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்
www.alltrstnsiva.blogspot.in

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.


இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம்அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளில் ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

தமிழகத்தில் பள்ளிகளில் ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு

தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, ஜன., 18 முதல், இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள், ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 


கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின், ஜன., 2ல் பள்ளிகள் திறந்ததும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27 வரை, தேர்வுகள் நடக்க உள்ளன.இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, இரண்டாம் பருவ தேர்வை, ஜன., 18 முதல், 27 வரை நடத்தலாம் என, பள்ளிக்கல்வி துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திண்டுக்கல் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ்C

CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திண்டுக்கல்  தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ்C
CPS க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் TNPTF திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு நேற்று 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி


திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு   நேற்று 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி  நடக்கிறது.
 திருப்பத்தூர் ஒன்றியத்தில் உதவி தொடக்க அலுவலர்கள் நேற்று காலை 10 மணிக்கு    VSV நகராட்சி பள்ளியில் NMMS வகுப்பை தொடங்கி வைத்தார். காலை 10 மணி முதல் மாலை 3.30  வரை  நடைபெறும். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைவார்கள்.
🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்
www.alltrstnsiva.blogspot.in

Friday, 25 December 2015

TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, TAMS & ALL TRS TN GRP வழங்கும் தினமும் வினாவிடை தொகுப்பு.

TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, TAMS & ALL TRS TN GRP வழங்கும்  தினமும் வினாவிடை தொகுப்பு.

எனது ஆசிரிய பேரினமே 

TNPSC, VAO போட்டி தேர்வர்களுக்கு, TAMS & ALL TRS TN GRP வழங்கும்  தினமும் வினாவிடை தொகுப்பு வழங்க உள்ளது
தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், தங்களின் உறவினர்கள்  TNPSC தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதி எப்படியாவது வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களுக்கு  ஓர் அறிய வாய்ப்பு தினமும் வாட்ஸ் அப்பில் TNPSC,VAO போன்ற போட்டி தேர்வுக்கான வினா விடைகள் சேகரித்து தொகுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும், ALL TRS TN GRP ம் இணைந்து  வழங்க உள்ளது.

 தேவைப்படுவோர்  MS.GK என Type செய்து (9894429770) என்ற எண்ணிற்கு 31-12-15 க்குள் WhatsApp ல்  அனுப்பவும். 

இந்த தகவலை தேவைப்படும் நண்பர்களுக்கு, மாணவர்களுக்கு, தேர்வர்களுக்கு தெரிவியுங்கள்.  1000 அ 2000 பதவிகளுக்கு  5 அ 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என  மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு நம்மால் முடிந்த சிறு உதவி.

அன்புடன்..
ALL TRS TN.. Siva.

www.alltrstnsiva.blogspot.in
www.tamstpt.blogspot.in


CPS- புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -

CPS- புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -
நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்

புதிய பங்களிப்பு உதிய திட்டத்தில்  எந்த பலனும் இல்லை. நீதிமன்றம் சென்றும் பலனில்லை, அரசிடம் கேட்டால் பதில். இல்லை, நீதி மன்றத்தில் வழக்குகள் குவிகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோச மங்கை புனித தலம் சிறப்புகள். பகுதி.2

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை
தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்
நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்
தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்
இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. 

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும். 

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. 

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. 

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர். 

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம். 

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. 

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீ

.எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு!!!

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு!!!
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. அதனை 
நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போது மாத சம்பளம் ரூ.50 ஆயிரமாக உள்ளது.

இதனை ரூ.1 லட்சமாக உயர்த்தவும், தொகுதி அலவன்ஸ் தொகையை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ90 ஆயிரமாக உயர்த்தவும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது. இதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நலமாய, நல்லவராய் வாழ...கடைபிடிங்களேன்

நலமாய், நல்லவராய் வாழ...கடைபிடிங்களேன்

1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.

2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.

3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி.

4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.

5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.

6. ரகசியங்களைக் காப்பாற்று.

7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே.

8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.

9. உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.

10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி.

11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே.

12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.

13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.

14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.

15.மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.

16. ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.

17. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்.

18. போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.

19. ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.

20. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.

21. பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.

22. எனக்குத் தெரியாது, மன்னிக்கவும், என்பதை சொல்லத் தயங்காதே..!!
நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்குபிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா ?RTI -NEWS

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்குபிறகு 
நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம்
 விடுப்பு -இருக்கா ?RTI -NEWS
RTI பதில் உண்டு. அதாவது ஏர்க்கப்பட்டது.

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published
TAMIL UNIVERSITY

DISTANCE EDUCATION

B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015
Published

Log on www.tamiluniversitydde.org

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறன் கொண்ட சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சுமார் 5000 பேர் உள்ளனர். சிறப்பு கல்வியியல் (ஸ்பெஷல் பிஎட்) பட்டத்தை இந்திய மறுவாழ்வு குழுமம் அங்கீகரித்துள்ளது. சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் இந்த அரசாணையை 2015-16 கல்வி ஆண்டில் அமல்படுத்தக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இப்ப ணியிடத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டம் குறிப்பிடப்படவில்லை. இது பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவுக்கு எதிரானது.

இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க் கவும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கவும் கோரி மனு அளித்தோம். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என வே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.முனிராஜ் வாதிட்டார். இதையடுத்து, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான பள்ளிக் கல்வித் துறை அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015-ல் அனுப்பிய மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலனை செய்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.

பள்ளிகள தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்

பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்
தொழிற்சாலையில் பொருட்களை தயாரிப்பது போல இந்தியாவில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் கல்வி முறை சரியாக இல்லை. தொழிற்சாலையில் பொருட்கள் தயாரிப்பதில் எப்படி அணுகுமுறை இருக்குமோ அதைப் போல் மாணவர்களிடம் பள்ளிகளின் அணுகுமுறை உள்ளது. நேரடியாக ஆய்வகங்களில் சோதனையில் பங்குபெறும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார்.
சமீபகாலங்களாக இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால் ஆராய்ச்சிப் பணிகளில் ஒன்றுமே மேற்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழக அளவில் இருந்தே ஆராய்ச்சிகள் ஆரம்பமாக வேண்டும். ஆனால், இங்கு பிஎச்.டி யை பெறவே 5 ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் கூட முறையான வேலை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதன்காரணமாக, ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் சம்பளம் அதிகம் கிடைக்கும் மற்ற வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். சீனா நம்மை விட ஆராய்ச்சியில் முந்தி சென்றுவிட்டது. அங்கு பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றன. மாணவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.அவர் தெரிவித்தார்.