Sunday, 6 December 2015

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிஉள்ளது,வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிஉள்ளது,வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது என்றும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. குமரிகடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில்மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிஉள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குமரிகடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையுடன், தென்மேற்கு வங்க கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையில் வட கடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைநீடிக்கும். சென்னையை பொருத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment