Wednesday, 9 December 2015

வெள்ள நிவாரண பணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற‌ ராமநாதபுரம் பள்ளி குழந்தைகள்

வெள்ள நிவாரண பணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற‌ ராமநாதபுரம் பள்ளி குழந்தைகள் 
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நேஷனல் அகடாமி பள்ளி மற்றும் நேஷனல் அகாடமி மாணவர் சங்கம், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் பொது மக்கள் இணைந்து சேகரித்த வெள்ள நிவாரண பொருட்களை தயார் படுத்தும் பணியில் பள்ளி குழந்தைகளும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.  சென்னை மற்றும் கடலூர் வெள்ள நிவாரண பணிகளில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் நேஷனல் அகடாமி பள்ளி மற்றும் நேஷனல் அகாடமி மாணவர் சங்கம்  அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் பொது மக்கள் உடன் இணைந்து சுமார் ஏழு இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பி வைத்தனர். 
 
தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட வெள்ள நிவாரண பொருள்களை தயார் படுத்தும் பணிகள் சின்ன சிறு மாணவ மாணவயரும் ஆர்வத்துடன் பங்கேற்று கொண்டனர். இப்பணியில் நேஷனல் அகடாமி பள்ளி மாணவர் சங்கத்தலைவர் முரளி, செயலாளர் ஆத்மா கார்த்திக், சஜன் ஷா, கெளதம்  மற்றும் சமுக சேவகரும் தன்னார்வலருமான அரு. சுப்பிரமணியன் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் சார்பில் கார்த்திக்கேயன், லெனா.செந்தில் குமார்,  சிவா, அருண் பிராசாந்த், ஹரி, மற்றும் இந்த  பணிகளை மேற்கொண்டனர் பள்ளியின் ஆலோசகர் சங்கரலிங்கம் அவர்கள் ஒருங்கிணைப்பு 

No comments:

Post a Comment