💥குரூப்பில் எப்படி நடந்துகொள்வது💥
1.ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள் உண்மையானதா என
உறுதி செய்து அனுப்புங்கள். அது உங்களை உண்மையாக்கும்.
2. உண்மை செய்தி அனுப்பும் பொழுது குழுவில் உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை என மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள்.
குழுவுக்கும், உங்களுக்கும் &
அட்மினுக்கும் பெருமை.
3. கலந்துரையாடல் தனிப்பட்ட நபரிடம் தனியாக விவாதிக்கவும்.
குழுவில் விவாதிப்பதை தவிர்க்கலாம்.
4. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள். அது
உங்களை தரம் உயர்த்தி காட்டும்.
5.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விசயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்.
6. கொத்து கொத்தாக பதிவிடுவதை தவிர்க்கவும். ஒரே நேரத்தில் நீங்கள் பத்து வீடியோ மற்றும் படத்தை போடுவதை தவிர்க்கவும். மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை சுமையாக எண்ண வைக்க வேண்டாம்.
7.ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.
8.மூடநம்பிக்கை மற்றும் தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம்.
9.கொலை செய்வது, கையை வெட்டுவது போன்ற கொடுரமான வீடியோவை அனுப்ப வேண்டாம்.
10. காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.
11.அரசியலை குரூப்பில் தவிர்க்கவும். நமக்குதான் நேரம் வீண்.
12. நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.
13. குழுவில் பதிவிடும் பொழுது பகிர்வு, பதிவு என தங்கள் பெயருடன் பதிவிடுங்கள். மற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும்.
14. .ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள் அந்த குழவில் உள்ளடக்கிய அனைத்து நண்பர்களுக்கும் சென்றுவிடும். மறுபடியும் அந்த செய்தயை அதேகுருப்பில் பதிவிடவேண்டாம்
15. பதிவிடும்போது விழாக்களின் மற்றும் கல்வி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ மட்டுமே அனுப்பினால் போதும். தரவிறக்கம் MB சேமிக்க உதவும்.
🙏ALL TRS TN.. Siva🙏
No comments:
Post a Comment