Friday, 4 December 2015

மழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப் இலவசமாக வழங்கியுள்ளது :

மழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப் இலவசமாக வழங்கியுள்ளது :
 

மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக கூகுள்  மற்றும் முகநூலுக்கு அடுத்தபடியாக ஸ்கைப்பும்  இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது .ஸ்கைப் முதற்கட்டமாக வருகின்ற  அடுத்த சில நாட்களுக்கு இலவசமாக,  கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை   உடனடியாக அமல்படுத்தியுள்ளனர் .  கனமழையின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும்  என தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அயல்நாட்டில் இருப்பவர்கள் தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார் உறவினர்களுடன்   தொடர்பில் இருக்க தங்கள் உதவியினை வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இதற்கு முன்   ஸ்கைப்  அழைப்பை செய்ததில்லை என்று எண்ணுகுறீர்களா? கவலை வேண்டாம் கீழே உள்ள வீடியோ  காட்சி  உங்களுக்கு கண்டிப்பாக உதவும் .



மழையால் வெள்ளத்தால் தங்கள்   உடைமைகளை இழந்தவர்களுக்கு கண்டிப்பாக இது கைகொடுக்கும். கடந்த மாதம் பாரீசில் நடந்த விபத்தின் போது ஸ்கைப்  இதே மாதிரியான  தகவல் தொடர்பினை இலவசமாக  அளித்திருந்தது குறிப்பிடத்தக்கதே!.இந்த திட்டம் இயற்கை  சீற்றத்திற்கு ஒரு தீர்வாக இல்லாவிடிலும்  பாதிக்கப்பட்ட  மக்களுக்குகிடையேயான தகவல் தொடர்பினை எளிமைபடுத்த ஒரு நல்ல வழியே !உங்களது நண்பர்கள்  அல்லது உறவினர்கள் சென்னையில் இருக்கிறார்களா?   இருப்பின்  அவர்களுக்கு இந்த அறிவிப்பை   தெரியபடுத்தி  உங்களது   அன்புக்குரியவர்கள்  பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து  கொள்ளுங்கள் நண்பர்களே !!

No comments:

Post a Comment