Tuesday, 8 December 2015

அரையாண்டு தேர்வுகள் குறித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும்பொருந்தும்: முதல்வர் உத்தரவு

அரையாண்டு தேர்வுகள் குறித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும்பொருந்தும்: முதல்வர் உத்தரவு
டிசம்பரில் நடக்கவிருக்கும் அரையாண்டுத் தேர்வை ஜனவரி மாதம் ஒத்தவைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,


தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள்பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டதால், 7.12.2015 அன்று முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்திடநான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவு தங்களுக்கு பொருந்தாது என கருதுவதாக தெரிjdய வருகிறது. அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். 

இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்ப நான் பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment