மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு மனஅழுத்தம்: அனைத்து தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்
மழை வெள்ளம் காரணமாக மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதால் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐஐடி,என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரு வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை குஜராத்தியிலும் எழுத லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புச் சலுகையை தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுக்கும் வழங்க வேண்டும். எந்தப் பகுதியில் எப்போது எவ்வளவு மழை பெய்யும் என்பதை பிரதீப் ஜான் என்னும் இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் (Tamilnaduweatherman) சரியாக சொல்வதாக பலரும் கூறுகின்றனர். அந்த இளை ஞருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கான ஆண்டு நிதியை மத்திய அரசு, ரூ.5 கோடி யாகக் குறைத்துவிட்டது. இயக் குநர், பதிவாளர் போன்ற பதவி களுக்கு நிரந்தரமாக யாரையும் நியமிக்கவில்லை. அந்த நிறுவனத் துக்காக சென்னை பெரும்பாக் கத்தில் 6.71 ஹெக்டேர் நிலம் திமுக அரசால் ஒதுக்கப்பட்டது. கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.250 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், அதை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபடாதது வேதனை அளிக்கிறது.
பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்குவது டன், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
மழை பாதிப்பால் மன அழுத் தத்துக்கு ஆளாகியுள்ள மாணவர் களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இவ்வாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment