Saturday, 19 December 2015

பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

பண்டிகை கால சிறப்புச் சலுகை: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ப்ரீபெய்டு- செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000, ரூ.890, ரூ.390, ரூ.290-க்கு "டாப்-அப்' செய்தால் கூடுதல் டாக்டைம் முறையே ரூ.6,000, ரூ.3,450, ரூ.2,300, ரூ.1,000, ரூ.433, ரூ.320 என டிசம்பர் 21 முதல் ஜனவரி 2 வரை கிடைக்கும்.

ரூ.220-க்கு "டாப்-அப்' செய்யும் போது, அதே மதிப்புக்கு டிசம்பர் 25, 26 ஆகிய நாள்களில் முழு டாக்டைம் கிடைக்கும். இதேபோல், "ரேட்-கட்'டர்களில் (STVs)  நிரந்தர, குறிப்பிட்ட கால சலுகையும் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களை -www.chennai.bsnl.co.in- என்ற இணையதளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment