Tuesday, 5 January 2016

ALL TRS TN : என்.ஐ.டி.ஐ.இ.,யில் மாணவர் சேர்க்கை

என்.ஐ.டி.ஐ.இ.,யில் மாணவர் சேர்க்கை
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி நிறுவனமாக மும்பையில் செயல்படும், நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் (என்.ஐ.டி.ஐ.இ.,) இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்ட் கிரேஜூவேட் டிப்ளமோ இன்  இன்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் மற்றும் போஸ்ட் கிரேஜூவேட் டிப்ளமோ இன் இன்டஸ்டிரியல் சேப்ட்டி அன்ட் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.


இப்படிப்பில் சேர விரும்புவோர் பொறியியல் துறையில், ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்து, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஜனவரி 15 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.nitie.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment