Friday, 8 January 2016

SSA அடைவுத் தேர்வு (SLAS) மாணவர்களின் கல்வி தரத்தை காணுவதற்கு ஓர் அளவுகோலாகுமா!!!!!!!

SSA அடைவுத் தேர்வு (SLAS) மாணவர்களின் கல்வி தரத்தை காணுவதற்கு ஓர் அளவுகோலாகுமா!!!!!!!
 *************
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 2016 ஜனவரி 5,6 தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துவக்கப் பள்ளிகளில் 3ஆம் 5ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 7,8 தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 8ஆம் வகுப்புகளுக்கும் அடைவுத் தேர்வினை நடத்தியுள்ளார்கள். தேர்வு நடத்திய முறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்துகிற GROUP 2 க்கு கொடுக்கின்ற முக்கியத்துவதை அளித்திருக்கிறார்கள் என தெரிகிறது.'PASS FAILING SYSTEM' 10ஆம் வகுப்பு வரையில் தேவையில்லை என விவாதம் நடந்து வருவதை காணுகிறோம்.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ’PASS FAILING SYSTEM' அவசியம் என்பதில் உறுதியாக உள்ளது.சில மாநிலங்கள் ’PASS FAILING SYSTEM' தேவையில்லை என வாதிட்டு வருகிறார்கள்.இந்த சமயத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தரமான கல்வியினை தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு அளிப்பதற்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் அறிய முடிகிறது.
3ஆம் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முறையில் இவ்வளவு நெறிபடுத்துகின்ற தன்மை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.குறிப்பாக 3ஆம் வகுப்பிற்கு இவ்வளவு கடுமையான சோதனை தேவையில்லை. அடைவுத் தேர்வு,2ஆம் பருவத் தேர்வு தொடர் நிகழ்வுகள் என்ற இந்த சமயத்தில் ஆசிரியர்களை பயிற்சி என்ற பெயரால் கூட்டம் போட்டு மாணவர்களின் கல்வி நலனில் அக்கரை காட்டாமல் சீரழித்து வருவதும் இந்த கல்வித் துறைதான்.
மயிலைப் பிடித்து காலை ஒடித்து
 ஆட சொல்கிற கல்வித் துறை.
எது எப்படியோ இந்த தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருப்பதை வரவேற்கலாம்.தேர்வு சமயத்தில் பயிற்சி என்ற பெயரால் கூட்டம் போடுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.
SAVE CHILDREN
 SAVE EDUCATION
 SAVE INDIA !!!!!

No comments:

Post a Comment