அலுவலர்கள் அரசாணை ஏதும் வராது முன்பே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - ஆசிரியர்கள் தவிப்பு!
வருமானவரி கல்வித்துறையில் எப்போதுமே மார்ச் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை மட்டுமே கணக்கிடப்படும்.ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட பகுதியிலுள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் தற்பொழுது 3 நாட்கள் (30, 31, 1) நடந்த தொடர் மறியலில் திங்கள் ( 1.2.16) கிழமை கலந்து கொண்டவர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்து தான் காட்ட வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி வருவதாகஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அரசு இதுவரை தொடர் மறியல் கலந்தவர்களது சம்பளம் பிடித்தம் பற்றிய ஆணை பிறப்பிக்காத போது தன்னிச்சையாக இவர்கள் பிடித்தம் செய்வது என்ற தவறான அணுகுமுறை ஆசிரியர்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.உ.தொ.கல்வி அதிகாரிகளும் அரசாணைகளை முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில் மற்ற மாவட்டம், ஒன்றியம் என அருகில் உள்ளவர்களிடமாவது கேட்டறிய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment