Monday, 13 June 2016

இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.


இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.

பள்ளி மாணவர்களுக்கான அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற, தனியாக மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கத் தலைவர் சிவா.தமிழ்மணி, அமைப்பு செயலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் கிருபாகரன், தலைமையிடச் செயலர் இஸ்மாயில் உள்ளிட்டோர், பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

* கல்வித்துறையில் அமல்படுத்தப்படும் இலவச திட்டங்களை முறையாக செயல்படுத்த, மாவட்டந்தோறும் தனியாக மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி போன்ற பணியிடங்களை நியமிக்க வேண்டும்

*அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி பணியிடங்களை கலைக்காமல், அவற்றில் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்

*குறிப்பிட்ட நேரம் மட்டுமின்றி எந்த நேரமும் கல்விப் பணியாற்றும் கல்வி அதிகாரிகளுக்கு, 5,000 ரூபாய் தனி ஊதியம் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment