Powered By Blogger

Tuesday, 28 June 2016

TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.

TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.
தமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

மொத்த இடங்கள்:272

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Lecturers-38

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,700

பணி: Lecturers - 166

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800

பணி: Junior Lecturers - 68

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் துறையில் முதுகலை பட்டத்துடன் எம்.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:அனைத்து பிரிவினருக்கும் ரூ.50

விண்ணப்பிக்கும் முறை:தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி அதிகாரி அலுவலகத்தில் (Chief Education Officer) விநியோகம் செய்யப்படும் விண்ணப்பங்களை வாங்கி, தெளிவாக பூர்த்தி செய்து, அந்தந்தமாவட்ட தலைமை கல்வி அதிகாரி அலுவலகங்களிலேயே அளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர் பணியாளர் தேர்வாணய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி:15.07.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கானகடைசி தேதி:30.07.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:17.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அல்லது http://trb.tn.nic.in/DTERT2016/28062016/Noti.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.


ALL TRS TN.. Siva

No comments:

Post a Comment