பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துபொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளா?, கல்வித்தரம் குறைவா? அல்லது வே்லை வாய்ப்பின்மையா? என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 523 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக். இடங் களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. பொறி யியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 34 ஆயி ரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். பொது கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மொத்தம் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியிருக்கின்றன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 648 இடங்கள் காலியாகவுள்ள உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கான காரணங்கள்குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி:தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலே வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவுகிறது. வெளிநாடுகளில் தொழில் மந்த நிலை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் அது இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு களைப் பார்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அமைப்பானது பொறியியல் படிப்பில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு. புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைப் பார்த்தும் அவற்றின் உரிமையாளர்களின் செல்வச்செழிப்பை பார்த்தும் ஏராளமானோர் புதிதாக பொறியியல் கல்லூரிகளை தொடங்கிவிடுகிறார்கள். புதிய கல்லூரிகளுக்கான தேவை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படவே இல்லை. புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா, தகுதியான பேராசிரியர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய வரும் ஏஐசிடிஇ குழுவினர் பெயரளவுக்கு ஆய்வுசெய்துவிட்டு இஷ்டத்துக்கு அனுமதி வழங்கிவிடு கிறார்கள்.
இதனால், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகப் படுத்தாததால் காலியிடங்கள் அதிகரித் துள்ளன என்ற கருத்தை ஏற்க முடியாது. தற்போதைய படிப்பிலே நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய பாடங்களை தெரிவு பாடங்களாக (எலெக்டிவ் சப்ஜெக்ட்)எடுத்து படிக்கலாம்.முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன்:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் பொறியியல் படிப்பதற்கு தேவையான கல்லூரிகள் உள்ளன. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருக்கின்றார்களா என்றால் இல்லை. தகுதியான ஆசிரியர்கள் இருந்தால் தரமான கல்வி கிடைக்கும். தரமான கல்வி பெறும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கவே செய்கின்றன. தரமான கல்வி கிடைக்காததால்தான் மாணவர்கள் படித்துமுடித்துவிட்டு வேலையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர்:
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பொறியியல் கல்லூரிகளின்எண்ணிக்கை மிக மிக அதிகம். அரசு கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். தற்போது பொறியியல் படிப்பில் சேருவோரில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள். எஞ்சிய 32 சதவீதம் பேர்தான் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப்புற மாணவர்கள் வேலைநோக்கில்தான் பொறியியல் படிப்பை தேர்வுசெய்கிறார்கள். பலரின் எண்ணமும் சாப்ட்வேர் பணியில் சேருவதாகத்தான் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொருத்தவரையில் 92 சதவீதம் தகவல்தொழில்நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. எனவேதான் பெரும்பாலான மாண வர்கள் இசிஇ, ஐடி பிரிவுகளில் சேர விரும்புகிறார்கள். தற்போதைய சூழலில் வேலையளிக்கும் நிறுவனங்களின் போக் கும் மாறியிருக்கிறது. பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு 25 ஆயிரம்சம்பளம் கொடுக்க வேண்டும். அதே வேலைக்கு சற்று பயிற்சி கொடுத்தால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த பட்டதாரிகளை வைத்து பணியைச் செய்யலாம். அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும் என்ற என்று நினைக்கின்றனர்.போதிய அளவு மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு 22 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோன்று பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். எனவே, அடுத்த ஆண்டு நிலைமை ஓரளவுக்குச் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment