எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம்
மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை
எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம்
18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை எதிர்த்து-மதுரை உயர் நீதிமன்றத்தில் இன்று 29/07/2016 தடையாணை பெறப்பட்டுள்ளது
எம்பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் 18.01.2013 க்கு முன்பு அரசாணை 42 பின்பற்றி வழங்கப்பட்டதினை எதிர்த்து சட்ட விரோதமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளரால்
18.01.2013 கு பிறகு மட்டுமே பொருந்தும் என்ற அடிப்படை அரசாணைக்கு விரோதமாக ஒரு விளக்க கடிதம் அளிக்கப்பட்டு அதனை கல்வித்துறை அலுவலர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு 18.01.2013 கு முன்பு பெற்ற பணத்தினை செலுத்திட ஆணை பிறப்பித்தார்கள்.
தணிக்கை துறையினர் புது விதமாக அரசாணை 42 ஐ கண்டுகொள்ளாமல்
மேலெழுந்த வாரியாக உடன் பணத்தினை 18.01.2013 கு முன்பு வாங்கியது
தவறு என்று பக்கம் பக்கமாக எழுதினார்கள் இதனை எதிர்த்து மதுரை
உயர் நீதி மன்றத்தில் தடையாணை கோரி வழக்கு ஆசிரிய சங்கம் மூலமாக
1. பள்ளி கல்வி துறை செயலாளர் அவர்கள்
2.பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள்
3.தணிக்கை துறை மதுரை அலுவலர் அவர்கள்
4.புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
5..ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
6.ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்
7. பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்
8.திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்
. அந்தந்த -சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்
எதிர் மனுதாரர்களாக கொண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில்
இன்று 29/07/2016 தடையாணை பெறப்பட்டுள்ளது
மேலும் இதனை காரணம் காட்டி தேர்வு நிலை நிறுத்தி வைப்பது சட்ட விரோதம் என்று வாதாடப்பட்டது ஊக்க ஊதியம் பெற்றாலும் பெறாவிட்டாலும் ஒரு ஆசிரியர் 10 ஆண்டு பணி முடித்தால் தேர்வு நிலை வழங்கப்பட வேண்டும் என்று 1970 முதல் நடை முறையில் இருந்து வரும் விதி என்பதனையும் அது இன்றும் தொடர்கிறது ஆகவே இதனை தடுத்தி நிறுத்திட யாருக்கும் உரிமை இல்லை என்றும் வாதிடப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் இப்போது வரை அரசாணை 42 ஐ பின்பற்றி பெற்று வரும்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் 18/01.2013 என்று cut of தேதி வைப்பது சட்டவிரோதம் என்பதனை நீபதி ஏற்று கொண்டார்
வரும் வாரத்தில் அனைத்து அலுவலர்களுக்கும் உயர் நீதிமன்றத்தின் மூலம் serve செய்யப்படும்
No comments:
Post a Comment