மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு ? ??
7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதியளித்தது.
இதையடுத்து, ஜூலை 11-ஆம் தேதி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அவை குறித்து பரிசீலிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே, போராட்டத்தை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பிறகே, உயர்மட்டக் குழு அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
No comments:
Post a Comment