Saturday, 30 July 2016

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும். Be alert all govt staffs ,

அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் கவனமாக படிக்கவும்.
Be alert all govt staffs ,

நமது ஆதார் எண், வங்கி கணக்கு எண், PAN நம்பர் ஆகியவை நமது ECS WEB
PAYROLL ( ONLINE SERVICE RECORD-S.R.) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நாம்
வாங்கும் சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த
சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமானவரி நமது பான் கார்டில் கட்டாயம் வரவு
வைக்கப்பட வேண்டும். நம்மிடம் சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரி
நமது அலுவலக TAN நம்பரில் சேர்ந்து இருக்கும்.  நமது அலுவலக DDO (TAN)
நம்பரில் இருக்கும் வருமான வரி பிடித்தத்தை PAN நம்பருக்கு மாற்ற
கட்டாயம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q ஒவ்வொரு காலண்டுக்கும்
தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு முடிவில் Form-16 நாம் பெறவேண்டும். இதை
வலியுறுத்தி நமது தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசாணை (G.O.880
DT:12.12.2014, G.O.843 DT; 15.12.2015) வெளியிட்டுள்ளது. இதுவரை நாம்
Form-16 வாங்கவில்லை எனில் நம்மிடம் பிடிக்கப்பட்ட வருமான வரி நமது
பெயரில் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அதாவது நாம் இதுவரை வருமான வரி
காட்டவில்லை என்று பொருள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை TDS-24Q  தாக்கல்
செய்யாமல் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 200 அபராதம்
விதிக்கப்படும். இது சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் .
மேலும்  விவரங்களுக்கு 
DHIRAVIAM TAX SERVICES PARAMAKUDI RAMNAD SIVAGANGAI
9843806320 , 9442291325 DHIRAVIAM.TAX@GMAIL.COM.

No comments:

Post a Comment