Saturday, 9 July 2016

கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார், விரைவில் கலந்தாய்வு நடைபெறும்..!

கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார், விரைவில் கலந்தாய்வு நடைபெறும்..!







பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படும்.





          அதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் நாளில் மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியாற்றத் தொடங்குவர்.இந்த நிலையில் ஆன்லைன் கலந்தாய்வு கடந்த சில ஆண்டுகளாகத் தாமதமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணி மாறுதல் பொது மாறுதல் கலந்தாய்வு இதுவரைநடைபெறவில்லை.



இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:-பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கான பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும், மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் பணியும் பாதிக்கப்படும். எனவே, கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்றார்.



விரைவில் அறிவிப்பு: இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எனவே ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை, காலிப்பணியிட விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகலாம்' என்றனர்.

No comments:

Post a Comment