Saturday, 9 July 2016

பள்ளி நேரத்தில் பிற பணிகள் கூடாது; கல்வி அலுவலர் எச்சரிக்கை!

பள்ளி நேரத்தில் பிற பணிகள் கூடாது; கல்வி அலுவலர் எச்சரிக்கை!
கோவை: பள்ளி நேரத்தில், கல்விப்பணி உள்ளிட்ட இதர பணிகளுக்காக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, ஆசிரியர்கள் வரக்கூடாது. இதை அனுமதித்தால், உரிய தலைமையாசிரியர் மீது, நடவடிக்கை பாயும் என, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:

மாவட்டம் முழுவதும்,அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,கல்விப்பணி சார்ந்த சிறப்பு கூட்டம் நடத்துவது வழக்கம். இதில்,வேலை நாட்களில் ஆசிரியர்களை,பிற பணிகளுக்காக,வகுப்பை விட்டு வெளியே அனுப்ப கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு,சில ஆசிரியர்கள் கல்வி,சொந்த பணிகளுக்காக வருகின்றனர். இது,மாணவர்களின் கல்வியை பாதிக்கும். எனவே,வகுப்பை புறக்கணிக்கும் செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும்,அனுமதி அளிக்கும் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்மீதும்,நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு,அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment