Saturday, 2 July 2016

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

 அதன்படி, மாநில அளவில் ஜூலை 7-இல் புத்தாக்கப் பயிற்சியும், 19-இல் தொடர் மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சியும், 11-இல் மாவட்ட வாரியாக அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், ஆசிரியர் கருத்தாளர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியும், 25-இல் வலுவூட்டல் பயிற்சியும், 16-இல் அனைத்துத் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் நடுநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment