திறனாய்வு தேர்வு: பள்ளி மாணவர்கள்விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வருமான சான்றிதழ் அளிக்க வேண்டும். தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு கட்டணமா ரூ. 5, சேவை கட்டணம் ரூ. 5 என மொத்தம் ரூ. 10 செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு (50 மாணவர், 50 மாணவியர்) ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிப்பு உதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1,000 வழங்கப்படும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கூடாது என்றார் அவர்.
No comments:
Post a Comment