தேசிய திறனறிவு தேர்வில் (NMMS ) அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை... திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் சாதனை...
திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், ஒன்றியத்தில் மட்டும் 82மாணவர்கள் தேர்ச்சி பெற்று வியத்தகு சாதனை படைத்துள்ளார்கள். இம் மாணவர்களின் சாதனையால் தமிழகமே நமது திருப்பத்தூரை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.
இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி மாதந்தோறும் கல்வி ஊக்க தொகையாக ரூபாய் 500 கிடைக்கும். இக்கல்வி ஊக்கத்தொகை இம்மாணவர்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு வரை கிடைக்கும். இந்த அபார சாதனைக்கு உழைத்திட்ட ஆசிரியர்களின் தியாகத்தை சொல்லி வாழ்த்திட வார்த்தைகள் இல்லை. வாழ்க ஆசிரியர்கள் தொண்டு, தொடரட்டும் தாங்கள் பணி.
இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த எமது ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மூத்த தலைமை ஆசிரியர்கள் இவர்களின் உழைப்பும், இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாகும். எனவே இந்த மாபெரும் வெற்றியை நமது ஒன்றித்திற்கு பெற்றுத்தந்த ஆசிரிய பெருமக்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும், பாராட்டி 'சாதனை பாராட்டு விழா' 03.07.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் இம் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்,தொடக்க கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள், உதவி,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வியாளர்கள், தலைமை ஆசிரியரக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பாராட்டுரை நிகழ்தினர்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் திருப்பத்தூர் ஒன்றியத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
அன்புடன்...
மு.சிவக்குமார்,ப.ஆ
ALL TRS TN....
.
No comments:
Post a Comment