Sunday, 21 August 2016
பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் !
பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் !
பணி நிரந்தர அறிவிப்பை, எப்போது அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், 10 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் மாநிலம் முவதும் காத்திருக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர், தையல்,
உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2012 ல், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
சிறப்பு ஆசிரியர்கள் என பெயரிடப்பட்ட, தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.வாரத்தின் மூன்று அரை நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்த இவர்கள், மூன்று முழுநாள் வேலை பார்க்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சம்பளம், 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.சிறப்பு ஆசிரியர்கள் கூறுகையில், "பள்ளிக்கான அனைத்து வெளி அலுவல் பணிகளும், சிறப்பு ஆசிரியர்கள் செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்க வேண்டும்என நிர்ப்பந்திக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி புத்தகம், சீருடை வழங்குவது அவற்றின் கணக்கெடுப்பு பணிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு உடனடியாக இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் வாரத்தின் மூன்று அரைநாட்கள் மட்டுமே பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமின்றி, பணி நிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும்,' என்றனர்.
No comments:
Post a Comment