Thursday, 11 August 2016

அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25 என மாறப்போகிறதா???

அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:25 என மாறப்போகிறதா???
கடந்த வாரத்தில் சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தின் போது தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரம் *1:25* என அறிவிக்கப்பட்டதாக அனைத்து ஆசிரியர்கள் மத்தியில் பரவி வருகிறது.
தேசிய விகிதாச்சாரம் *(RTE-2009 கல்வி உரிமைச்சட்டம்)* படி தொடக்கக்
கல்வித்துறையில் *1:30, நடுநிலைப் பள்ளிகளில் 1:35, உயர்நிலைப் 
பள்ளிகளில் 1:40 மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1:45 என இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போது துவக்கப் பள்ளிகளில் 1:25, நடுநிலைப்பள்ளிகளில்1:24, உயர்நிலை பள்ளிகளில்1:27 மற்றும் மே.நி.பள்ளிகளில் 1:36 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையிலேயே உள்ளது. இதை தான் சட்டசபையில் தமிழக அரசும் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் சிறப்பாக உள்ளது* (ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது)
என்பதை சட்டசபையில் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இதை தவறுதலாக புரிந்து கொண்டு 1:25 என்ற விகிதாசாரத்தின் படி அரசாணை பிறப்பிக்கப்போவதாக தவறான கருத்தை பரப்பிவருகின்றனர்.அவ்வாறு ஒன்றும் இதுவரை வரவில்லை.

No comments:

Post a Comment