கணவர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனைவி தர்னா
கணவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சரவணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் விடைகளைப் பார்த்து எழுத அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் புகார் உண்மை என தெரியவந்தது. எனவே, சரவணனை வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் செய்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனைவி இலக்கியா தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டார். கல்வித் துறை
அலுவலர்கள் மற்றும் சூலக்கரை போலீஸார் அவரிடம் சமரசம் செய்து முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிடுமாறு கூறினர்.
இதுகுறித்து ஆசிரியர் சரவணன் கூறியதாவது:
பள்ளியில் இருக்கும் சில ஆசிரியர்களின் தூண்டுதலின்பேரில் என்னை இடமாற்றம் செய்துள்ளனர். மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
அதில், நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக தற்போது இடமாறுதல் செய்துள்ளனர். நரிக்குடி பள்ளியிலிருந்து ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் நான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்
என்றார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியதாவது:
சரவணன் மீது சக ஆசிரியர்கள் மட்டுமல்லாது கிராம மக்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையிலே அவரை இடமாறுதல் செய்தோம். இடமாறுதல் கலந்தாய்வில் அவர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றார்.
ALL TRS TN.. Siva
No comments:
Post a Comment