இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3 முதல், கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது.
தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை என, தனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், எட்டாம்வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், விருப்ப இடமாறுதலில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால், அவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது.
அதாவது, ஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோ, அந்த ஒன்றியத்தில், மூத்தவர், இளையவர் என்ற அடிப்படையில்தான், ஊதிய முரண்பாடு இருக்கும். மாறாக, புதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர், இளையவர் பட்டியலை கணக்கிட்டு, அதன்படி, தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் என, கேட்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment