Sunday, 21 August 2016

சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்

சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறமையாக பணியாற்ற வேண்டும்
சிறந்த பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என்றார் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் அறிவொளி.

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சியில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியது: அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.


இதற்கு ஆசிரியர்களின் பங்கு அதிகமாகும். 100% தேர்ச்சி அடைவதில் நாம் அதிக அக்கறை எடுத்து கொள்வதுபோல், தலைமை ஆசிரியராக நீங்கள் உங்கள் பள்ளியில் சக ஆசிரியர்களோடு கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

வகுப்பறையில் நீங்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வேண்டும்.சமுதாயத்தில் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டால்தான், ஒரு பள்ளி சிறந்த பள்ளியென பெயர் எடுக்க முடியும் என்றார் அவர்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந. மாரிமுத்து தலைமை வகித்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி துணை இயக்குநர் குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஜம்புலிங்கம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கமணி, செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment