32 மாவட்டங்களில் உடற்கல்வி அதிகாரிகள் இல்லை
தமிழகத்தில், 32 மாவட்டங்களிலும், பள்ளிக்கல்வி சார்ந்த, விளையாட்டு துறையில், உடற்கல்வி அதிகாரி பணி இடங்கள் காலியாக உள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள், போட்டிகளில் பின்தங்கி உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில், 32 மாவட்டங்களிலும், உடற்கல்வி இயக்குனர் என்ற, மாவட்ட விளையாட்டு பிரிவு அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் கட்டுப்பாட்டில், அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் விளையாட்டு பிரிவுகள் இயங்குகின்றன. தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் வசூலிக்கும்
நிதியை பயன்படுத்தி, மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு தயாராக, அரசு, ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்குகிறது. இந்த நிதி, மாவட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். பள்ளிக்கல்வி, விளையாட்டு பிரிவில் அடுத்தடுத்து காலியான, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணி இடங்கள், நிரப்பப்படாததால், 32 மாவட்டங்களிலும்,
இந்த இடங்கள் காலியாக உள்ளன.அரசின் விளையாட்டு நிதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தரப்படுகிறது. இந்த நிதி, அந்த அதிகாரிகளால், முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதுகுறித்து, விசாரிப்பதோடு, காலியாக மாவட்ட விளையாட்டு அதிகாரி இடங்களையும் நிரப்ப வேண்டும் என, விளையாட்டு பிரிவு மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்க பொதுச்செயலர் தேவிசெல்வம் கூறுகையில், ''மாவட்ட அளவில், விளையாட்டு பிரிவுக்கு, தனி அதிகாரி பணியிடங்களை நிரப்பினால், முறைகேடுகள் நடக்காது. நீண்ட நாட்களாக, இந்த இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் புகாரில், உண்மை உள்ளதா என, விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment