Sunday, 11 September 2016

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பு !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பு !
11–ந் தேதி (இன்று ) மற்றும் 25–ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

படிவங்களை பெறலாம்

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


1.1.17 அன்றைய தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11.9.16 மற்றும் 25.9.16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் (பொதுவாக பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடம் மாற்றலுக்கான படிவங்களை பெறுவதற்காக இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

காலை 10 மணி முதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இம்முகாம்கள் 18.9.16 மற்றும் 25.9.16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் அலுவலர்கள் 11.9.16 மற்றும் 25.9.16 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்வர்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment