Powered By Blogger

Wednesday, 22 February 2017

ஏப்ரல் முதல் "ஸ்மார்ட் ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு.

ரேஷன் அட்டை" -தமிழக அரசு அறிவிப்பு.


ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்
.சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அதிகாரிகளுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதில், அவர் பேசியது:-இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இப்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர். இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.புதிய அட்டைகள்: இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29,815 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.






இன்று வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார்.கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment