Monday, 6 March 2017

1,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலக்கம். டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்கள் பணிநீக்கம்..கவலை வேண்டும் கலக்கம் இது அனைவருக்கும் பொருந்தாது.

1,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலக்கம். டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்கள் பணிநீக்கம்..கவலை வேண்டும் கலக்கம் இது அனைவருக்கும் பொருந்தாது.



பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலக்கம். டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் இதனால், 1,000 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், 'அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை அங்கீகாரம் பெறாத பள்ளிகளில், 2010 ஆகஸ்டிற்குப் பின், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், இந்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதார், பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென தேர்வை அறிவித்துவிட்டு, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி 5 ஆண்டுகளில் தகுதி தேர்வு அரசு கண்டிப்பாக நடத்திருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் வருடா வருடம் தகுதி ஆனால் தொடர்ந்து நடத்தவில்லை திடீர் என அறிவித்து இது கடைசி தேர்வு என கூறுவது முறையாகாது.



இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பத்தூர் ஒன்றிய பொருப்பாளர் திரு.சிவக்குமார் கூறியதாவது:



2013 ம் ஆண்டு இந்த RTI actல் 23/8/2010 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக தகுதி தேர்வு எழுத வேண்டும், என்பது RTI rules.



2013 ல் ஒருவர் பணியில் சேர்வதற்கு முன் குறைந்தபட்ச ஒர் ஆண்டு அவர் பெயர் பரிசீலனை இருக்கும். மேலும் 23/8/10 க்கு முன்னரே பெயர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அல்லது தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டு இருந்தாலோ, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்திருந்தாலோ இப்படிப்பட்ட ஆசிரியர்கள் 23/8 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுகிறது என RTI தகவல் கூறுகிறது. இது 2013 ல் அனைத்து பத்திரிகை,RTI தகவல்,அரசு சார்பாக அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  மதுரை கோர்ட் 94 பேர் கொண்ட ஒரு பகுதி ஆசிரியர்கள் வழக்கு தொடுக்கப்பட்டது.  இறுதியா அல்லது



சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வுக்கு பதில், ஆண்டு தோறும் புத்துணர்வு பயிற்சி  அதாவது பணியிடை பயிற்சி முகாம் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தலாம். மாறாக, திடீரென, 'டெட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கெடு விதிப்பது பிரச்னையை அதிகரிப்பதாக இவ்வாறு அவர் கூறினார்

 இறுதியாக மேற்கண்டவாறு கருபத்திரிகைய,்  2013 ல் அரசு பள்ளியில் பணியில் சேர்ந்த ந அனைவரும் தகுதி தேர்வை எழுத  விலக்கு அளிக்கப்படுகிறது. .. RTI

இது அனைத்து செய்தி

 பத்திரிகையில் வெளிவந்தது.



by

*ALL TRS TN Siva*

Tirupattur block

TAMS Ldr tpt.

No comments:

Post a Comment