Powered By Blogger

Friday, 28 December 2018

*Jactto Geo NEWS*

அன்புடையீர்!
வணக்கம்.

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று(28.12.2018) மாலை 3 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக இயற்றப்பட்டது.

1. 07.01.2019   அன்று அரசு வழியிலோ அல்லது உயர் நீதிமன்றம் வழியிலோ CPS மற்றும்  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்காவிடில் 07.01.2019 அன்று மதுரை மாநகரில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு கூடி போராட்டத்தை அறிவிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

2. பள்ளிகள் இணைப்பு என்ற போர்வையில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை ஒன்றிணைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்.

மேலும் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

இவண்
சிவா,Tams tpt
*JACTTO Geo*

No comments:

Post a Comment