வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலர் என்.பசுபதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக தலைநகர் சென்னை உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பேரிடரால் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், மாநில அரசுடன் இணைந்து அவர்களுக்கு துணையாகப் பணியாற்ற எங்களது சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், அரசுக்கு உதவும் வகையில் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், பாரதிதாசன், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் இணைவு பெற்றுள்ள, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் சுமார் ரூ. 1 கோடியை நிவாரண நிதியாக வழங்குகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment