Monday, 7 December 2015

சத்துணவு வழங்க முடியாது!

சத்துணவு வழங்க முடியாது!
     தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான பள்ளி சத்துணவு கூடங்களும் மூழ்கின. 
 
       சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு கருதி, ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகின.


இந்த வெள்ளத்திற்கு, பள்ளி சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களும் தப்பவில்லை. அங்கிருந்த அரிசி, துவரம் பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்களும், நனைந்து சேதமாகின.

இதுகுறித்து, சத்துணவு, அங்கன்வாடி மைய சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், 'வெள்ளத்தால், பெரும்பாலான சத்துணவு மையங்கள் மூழ்கின; உணவு பொருட்கள், நீரில் அடித்து செல்லப்பட்டன. பள்ளிகள் திறந்தாலும், சத்துணவு வழங்க முடியாது. இதுகுறித்து, கலெக்டர்கள், சத்துணவு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்' என்றனர்.

No comments:

Post a Comment