அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட எந்த திட்டமும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் சுமார் 50 லட்சம் ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக இருக்கிறது. அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment