Sunday, 17 January 2016
நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை
நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை
வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25 ஆயிரம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஏற்கனவே, 12,441 தபால் நிலையங்களில் சி.பி.எஸ். முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தபால்துறை. இந்த முறையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் எந்த தபால் நிலையத்தில் வேண்டுமானாலும், தங்களது கணக்குகளை இயக்க முடியும். வங்கி தொடர்பான சேவைகளையும் பெற முடியும். இந்நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம். மையங்களை திறக்க இந்திய தபால்துறை முடிவு செய்துள்ளது. அதேபோல், கிராமப்புற தபால் நிலையங்களில் வரும் 2017-ம் ஆண்டுக்குள் சூரிய சக்தியுடன் இயங்கும்
பயோமெட்ரிக் கருவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 300 ஏ.டி.எம். மையங்கள் தபால்துறை சார்பில் இயங்கி வருகின்றன. 25 ஆயிரம் டிபார்ட்மண்டல் தபால் நிலையங்கள் தவிர நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராமப்புற தபால் நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?
தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?
பருவத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் ஆதார்
எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமைப் பதிவு தலைமைப்பதிவாளர் அலுவலகம் செய்து வருகிறது. இப்பணிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணிகளை பள்ளி வேலை நேரம் முடிந்து மாலையில்தான் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஜன.18ல் துவங்கி பிப்.5க்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிக்காக ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை வெள்ளத்தால், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் தற்போது பள்ளிகளில் நடந்து வருகின்றன. இச்சூழலில் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தொகுப்பூதியம் ரூ.33,250 ஆகும்.
கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலம், குழந்தைகள் நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 1.1.2016-ஆம் தேதியன்று 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
18-ஆம் தேதிக்குள்..: குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலன், குழந்தை நலம் ஆகிய துறைகளில் கள ஆய்வில் புதிய திட்டங்களை வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் நிலையில் பணிபுரிந்த அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை www.tn.gov.in/department/30 என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செயயலாம். புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10, தொலைபேசி: 044-26421358.
சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம் அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.
சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்
அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.
பிரிட்டோ 800 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் எடுத்து 74.38 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றார்.
திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினேஷ் சான்செட்டி 566 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்திய பட்டய கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் ஒன்று பிரிவில் நவம்பர் மாதம் தேர்வு எழுதிய 77,442 பேரில் 9,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல குரூப் 2 பிரிவில் தேர்வு எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரு தேர்வுகளையும் எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் ஏதாவது ஒரு குரூப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் ஜெயலலிதா அறிவிப்பு.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்தியஅரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களில் பெரும் பாலானோருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப் பட்டுவிட்டது. எஞ்சியவர் களுக்கு மிக விரைவில் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். இந்த பெரு மழை வெள் ளத்தால் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த மாநில மாக அறிவித்து ஏற்கெனவே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன. வங்கிகளுடன் கலந் தாய்வு கூட்டங்கள் நடத்தி இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக் கைகளை எடுக்கும்படி நான் தலைமை செயலாளருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளேன்.
வேலையற்ற பட்ட தாரிகளின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 5,000 இளைஞர் களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத் தின்படி 25 சதவீத மூலதன மானியத்துடன்ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கிட நான் உத்தர விட்டுள்ளேன். இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி பெறப்படவேண்டும் என்ற நிபந்தனையிலிருந்தும் விலக்கு அளித்து உடனடியாக கடன் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்
ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http://218.248.44.30/ecsstatus/) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CLICK HERE CPS ACCOUNT
இணையதளத்தில் தங்களது பிபிஓ எண், கருவூல விவரங்களை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் பிற்பகல் 3மணி முதல் 5 மணி வர நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். கருவூல அலகில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மருத்துவக் காப்பீடுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம்.
அவ்வாறு இருந்தால் ஒரு சந்தாவை நிறுத்தம் செய்தும், செலுத்திய சந்தா தொகையை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.2.5 லட்சம் அதற்கு மேலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், தங்களது வருமான வரி கணக்குத் தாளை மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களில் ஜனவரி மாத இறுதிக்குள் இரட்டைப் பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Friday, 15 January 2016
அனைவருக்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்
அனைத்து ஆசிரிய சகோதர,சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
எல்லா வளமும் பெற்றிட இந்த நன்நாளில்,
தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா அனைத்து
ஆசிரிய பெருமக்கள்
அனைவருக்கும் எங்கள்
பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
🙏🙏ALL TRS TN🙏🙏
Monday, 11 January 2016
ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு
ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு
ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.
12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.
12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.
சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது
: மாவட்டத்தில் உள்ள, 21 ஒன்றியங்களில் குழுக்கள் அமைத்து, 12 ஆயிரம் ஆசிரியர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள், சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களிடம், அதற்குரிய காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை குழு குறைகள் கண்டறிந்தால், மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்கிறுக்கல்களுடன் கசக்கி தூக்கி வீசப்படும் காகிதங்களை கலைப் பொருட்களாகவும், பாரம்பரியம் உணர்த்தும் படைப்புகளாகவும் மாற்றி வருகின்றனர் கோவை தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்.
செலவில்லாமல் புதுமை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்கிறுக்கல்களுடன் கசக்கி தூக்கி வீசப்படும் காகிதங்களை கலைப் பொருட்களாகவும், பாரம்பரியம் உணர்த்தும் படைப்புகளாகவும் மாற்றி வருகின்றனர் கோவை தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள்.
கோவை மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் தொண்டாமுத்தூரை ஒட்டியுள்ள கிராமம் தேவராயபுரம். சுற்றியுள்ள கிராம மக்களின் குழந்தைகளின் கல்வி வசதிக்காக தேவராயபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 360 மாணவ, மாணவிகள் இங்கு படிக்கின்றனர்.
மாணவர்களால் நோட்டு புத்தகங்களிலிருந்து கிழிக் கப்படும் காகிதங்கள் குப்பை யாகச் சேருகின்றன. அவை எளிதில் மட்கக் கூடியதாக இருந்தாலும், மறுசுழற்சிக்கோ, வேறு பயன்பாட் டுக்கோ உபயோகிக்கப்படுவ தில்லை. ஆனால் தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் சேகரமாகும் காகிதக் குப்பைகளை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இப்பள்ளியில் ஓவிய ஆசிரிய ராக பணியாற்றும் வி.ராஜகோபால், எளிமையான முறையில் மாணவர் களுக்கு ஓவியப் பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, குப்பையாக ஒதுக்கும் காகிதங்களை வைத்து புதுமையான வடிவங்களைத் தயாரிக்கும் பயிற்சியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.
கசக்கி எறியப்படும் காகிதங் களை நூலால் சுற்றி மனித, விலங்கு உருவங்களுக்கு ஏற்ப மாணவர்கள் வடிவங்களை உருவாக்கி வரு கின்றனர். இதனால் குப்பையாகச் சேரும் காகிதங்கள் குறைந்து, அதை பயனுள்ள கலைப் பொரு ளாக மாற்றும் ஆர்வம் மாணவ, மாணவிகளிடையே அதிகரித் துள்ளது.
துல்லிய உருவம் கொடுக்கப் படாத வடிவங்களாக கலைப் பொருட்கள் உருவாக்குவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து இதுபோன்ற பொருட்களை செய்து காட்டுபவர்கள் மத்தியில், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறிதும் செலவில்லாமல் அநாயசமாக பல உருவங்களை செய்து பிரமிப்பில் ஆழ்த்துகின்றனர்.
குறிப்பாக பாரம்பரிய பறை இசைக் கருவிகளை வாசிக்கும் மனிதர்கள், கூடுகளில் தங்கும் பறவை, காரமடை அரங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற பந்தசேவை, மரத்தடி விநாயகர் என அன்றாடம் பார்த்து பழக்கப்பட்ட, மண்ணின் பெருமையைக் கூறும் படைப்புகளை இந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஓவிய ஆசிரியர் ராஜகோபால் கூறும்போது, ‘பள்ளி மாணவர்களை யும், காகிதங்களையும் பிரிக்க முடியாது. அவர்களுக்கும் காகிதத் துக்குமான நெருக்கம் மிக அதிகம். ஏதாவதொன்றை அவர்களே செய்து காட்டுவார்கள். அதன் அடுத்தகட்டமாக எளிய முறையில் வீணான காகிதம், நூல், பசை மூலம் அரூப (abstract) உருவம் உருவாக்கப் பயிற்சி கொடுத்தேன்.
இன்று ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பல படைப்புகளை மாணவர்கள் உருவாக்கிவிட்டனர். வீணாகும் பொருளும் பயனளிக் கும் என்பதற்கு இது உதாரணம். அதைத் தாண்டி மாணவர்களுக்கு பொறுமை, நினைவாற்றல் அதிக மாவதை பார்க்க முடிகிறது. காகிதத்தில் உருவாகும் வடிவங் களில் அழகுணர்ச்சி குறைவாக இருந்தாலும், திறமையை வெளிப் படுத்த ஒருவாய்ப்பாக இருக்கிறது.
அந்த வகையில், நமது பாரம் பரிய, கலாச்சார மாண்புகளை காகித உருவங்களில் மாணவர் கள் உருவாக்குகின்றனர். இதில் பெரிய செலவுகள் ஏதுமில்லை. காகிதக் குப்பை குறைகிறது. பெற் றோரும் ஊக்குவிக்கிறார்கள். மாணவர்களுக்கு கலை உணர்வு மேலோங்குகிறது. இப்படி பல நன்மைகள் இதில் இருக்கின்றன. ஒவ்வொரு மாணவனுக்கும் எண் ணமும், அழகுணர்ச்சியும் மாறு படும், ஆச்சரியப்படுத்தும். 2 டி உருவ அமைப்புகளை கையா லேயே எளிய முறையில் உரு வாக்கும் அளவுக்கு அவர்களது திறமை மேம்பட்டுள்ளது’ என்றார்.
ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு
TNTET: 4 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கல்வித்துறை இயக்குனரிடம் மனு
நிபந்தனையின் அடிப்படையில் நிரந்தர பணியிடத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 2 ஆசிரியர்கள் வீதம் 50 பேர் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், இணை இய்ககுனர் கருப்பசாமி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில், “பணி நியமனம் பெற்ற நாளில் இருந்து ஆசிரியர் தகுதி காண் பருவமான 2 ஆண்டுகளையும் முறையாக நிறைவு செய்து விட்டோம். எங்களிடம் படித்த மாணவர்கள் 10ம் வகுப்பு அரசுத்தேர்வில் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றும், சிலர் மாநில,மாவட்ட அளவில் தரம் பெற்றும் உள்ளனர். அங்கீகாரம் பெற்ற பள்ளி குழுவின் நேர்முகத்தேர்வு, இனச்சுழற்சி முறை கடைப்பிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முறையாக தேர்வு பெற்று, பள்ளி கல்வித்துறையின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது நிரந்தர பணியிடத்தில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம். ஆனால் அவரது ஆட்சிக்காலத்திலேயே எங்களது பணிக்கு ஆபத்து உருவாகி உள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும், மனஉளைச்சலும் அடைகிறோம்.
மொத்தத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் வாழ்வா, சாவா என்ற வாழ்க்கை போராட்டத்துடன் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறோம்.நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைபேரிடர் மற்றும் குடும்ப சூழல் என தற்போதைய ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாங்கள் தேர்வு எழுதக்கூடிய மனநிலையில் தற்போது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
எனவே, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுதித்தேர்வை எழுதுவதில் இருந்து ஓர் தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து உதவ வேண்டும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட, பள்ளி கல்வித்துறை மூலம் தக்க பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
Sunday, 10 January 2016
வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு
முக்கியச் செய்தி :-
வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கும் திட்டத்தை அண்மையில் முதல்வர் தொடங்கிவைத்தார்...பலர் அவற்றைப் பெற்றுத்தரும்படி கோரினார்கள்..தற்போது அவை www.tnscert.com என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன..
Honourable CM Released Learning Materials for 10th and 12th Standard - Click Here
http://www.tnscert.org/cmrelmat.html
Saturday, 9 January 2016
பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி
பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி
உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, ஜன., 23ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது; மூன்று லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கு இன்னும், 15 நாட்களே உள்ள நிலையில், அரசு தேர்வுத்துறையின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கு, எட்டாம் வகுப்பு பாடங்கள் முழுமையும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டு, அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இம்முறையும் அதே பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால், திடீரென தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பில், முதல் இரண்டு பருவ பாடங்களையும், ஏழாம் வகுப்பில் அனைத்து பருவ பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே வினாத்தாள் அமையும். இதை, திருத்திய அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
தேர்வு துறையின் அறிவிப்பு, வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், திடீரென, 'ஏழாம் வகுப்பின் ஓராண்டு பாடத்தையும் படியுங்கள்' என, மாணவர்களை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும். இந்த
அறிவிப்பு, விதிகளை மீறுவதாக உள்ளது.எந்த ஒரு தேர்வுக்கும், விண்ணப்பிக்கும் முன் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பித்த பின் அறிவிக்கையை மாற்ற, சட்டத்தில் இடமில்லை.- ஆசிரியர்கள்
இளம் வயது மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல், இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே, அரையாண்டு தேர்வையும் வைத்துக் கொண்டு, உதவித்தொகைக்கான தேர்வையும்
அறிவித்ததால், இரண்டு தேர்வுக்கும் தயாராக முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.இதில் திடீரென, 'கடந்த ஆண்டு பாடங்களை படியுங்கள்' என்பது என்ன நியாயம்; மாணவர்கள் ஓராண்டில் படிக்க வேண்டியதை இரண்டு வாரங்களில் படிக்க முடியுமா?- பெற்றோர்
எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்
எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. "எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது.
எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார்.
இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை
மருத்துவர்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
சமீப காலமாக ஆசிரியர்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபக்கம், மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் படுத்தக் கோரி உயர் அதிகாரிகளின் நெருக்குதல், மறுபக்கம், மாணவர்களின் ஒத்துழைப்பின்மை என கடுமையான மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாக நேரிடுகிறது. எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மாணவர் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். அச்சமில்லாமலும், மன நிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக மருத்துவர்களுக்கு உள்ளது போல் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதி போதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி
தேர்தல் முறைகேட்டை அனுப்ப 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி
''சட்டசபை தேர்தல் முறைகேடு புகார்களை, படங்களுடன் அனுப்ப, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வசதி செய்யப்பட்டுஉள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கண்ணியமான தேர்தலுக்கான அமைப்பின் சார்பில், 'கண்ணியமான தேர்தல்' என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம், துவங்கியது. சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியின், மனித உரிமைகள் துறையுடன் இணைந்து, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் முக்கிய விருந்தினராக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராஜேஷ் லக்கானி பேசியதாவது: நேர்மையான தேர்தல் நடத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறைகேடு புகார்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கவும், படங்கள் எடுத்து அனுப்பவும், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' வசதி அறிமுகம் செய்யப்படும். மாணவர்கள், என் அலைபேசி எண்ணுக்கே, 'வாட்ஸ் ஆப்'பில் புகார்அனுப்பலாம். ஆனால், தவறான தகவல் தர வேண்டாம்.
தேர்தல் நாளில் வீட்டிலிருந்து, 'டிவி' பார்த்து கொண்டிருக்காமல், முதலில் ஓட்டை பதிவு செய்யுங்கள். மாணவியர், இளைஞர்கள் அனைவரும், தேர்தல் துறையின் துாதராக, தலைமை தேர்தல் அதிகாரியாக நினைத்து, நேர்மையான தேர்தல், ஓட்டு போடுவதன் அவசியத்தை, குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
'ஊழல் கரங்களுக்கு ஓட்டு வேண்டாம்':
நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசியதாவது:நான், 2011 தேர்தலில் மதுரை கலெக்டராக இருந்த போது, 'பணநாயகம்வீழ்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் அதிகாரிகள் கூறினர். அதை மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, பகலில் வாக்காளர்களுக்கு போதனையும், இரவில் வாகன சோதனையும் மேற்கொண்டோம். நேர்மையான தேர்தலை நடத்தினோம்.அதேபோல், இந்த தேர்தலும் கண்ணியமாக நடக்கும் என நம்புகிறேன். ஊழல் கரங்களுக்கு ஓட்டு போட வேண்டாம்.நீங்கள் பொறுப்பாக ஓட்டு போட்டால் நாட்டில் புரட்சி நடக்கும். பணத்தை வாங்கி ஓட்டு போடாதீர்கள்.மாணவர்கள் மூலம், பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்கலாம். நீங்கள் நேர்மையாக இருக்க, உங்கள் குடும்பம் நேர்மையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் கண்ணியமான ஓட்டின் மூலம், வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்;
விவசாயி தற்கொலை செய்ய மாட்டார்கள்; மன்னர்களை மண்டியிட வைக்கும் ஜனநாயக கடமை உங்களிடம் உள்ளது. நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பதை உறுதிப்படுத்த, ஊழலற்றவர்களுக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்
தேர்தல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்: சென்னையில் நாளை துவக்கம்
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க உள்ள பயிற்சியாளர்களுக்கான முகாம், சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாவட்டத்திற்கு ஆறு பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கடந்த மாதத்தில் இருந்து, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.டிச., 30 மற்றும் 31ம் தேதி, தேர்தல் பொறுப்பு அலுவலர்களுக்கு சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று சென்னையில், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, செய்தி மக்கள் தொடர்பு
அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தலின்போது, சமூக வலைதளங்களில், ஓட்டுப்போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்வது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடியாக நடத்தும் பயிற்சி வகுப்பு சென்னை மற்றும் பவானிசாகரில், இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில், நாளை முதல், 13ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 21 மாவட்டங்களில் இருந்து, மாவட்டத்திற்கு, ஆறு
பயிற்சியாளர்கள் வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.பவானிசாகரில், 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில், 11 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பு
துணைவேந்தர் தேர்வு குழு அமைப்பு
சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், ஓய்வுபெற்ற ஊழல் ஒழிப்பு மற்றும் வளர்ச்சி கமிஷனர் வேத நாராயணன், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக, அறிவியல் மற்றும் மனித நேய துறை இயக்குனர் பாலசுப்ரமணியன், சென்னை பல்கலைக் கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் சுரேந்திர பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூன்று பேரை தேர்வு செய்து, அவர்கள் குறித்த விபரங்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும்; அதி
ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு
ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு
ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயகுமார் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. இவற்றை அந்தந்த பயிற்சி பள்ளிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம். பிரைவேட் மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு
அகஇ - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் மற்றும் பொது மக்களிடத்திலும் மற்றும் தனி திறன்களை மேம்படுத்தவும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு
Friday, 8 January 2016
பணி நிரந்தரத்துக்காகக் காத்திருக்கும் கெளரவ விரிவுரையாளர்கள்
பணி நிரந்தரத்துக்காகக் காத்திருக்கும் கெளரவ விரிவுரையாளர்கள்
தமிழகம் முழுவதும் 84 அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் 3,350 கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் 2004-ஆம் ஆண்டு சுய நிதிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம்: சுய நிதி பாடப் பிரிவுகளில் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து தனியார் கல்லூரிகளில் வசூலிப்பது போலக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதேபோல, மாணவர்களுக்கு பாடம் நடத்த கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 40 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்படும். ஒரு மணி நேரம் பாடம் நடத்த ரூ.100 என்று கணக்கிட்டு, 40 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, கெளரவ விரிவுரையாளர்களை பணியில் சேர்த்தது.
12 ஆண்டுகள் கல்விச் சேவை: இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொற்ப மதிப்பூதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி 84 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,350 கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் குறைந்த அளவு மதிப்பூதியத்தில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மதிப்பூதியம் உயர்த்தப்படுமா?: 2008-ஆம் ஆண்டு இவர்களது மதிப்பூதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், 2011-ஆம் ஆண்டு டிசம்பரில் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் 3,350 பேரில் 70 சதவீதம் பேர் நெட், ஸ்லெட், பிஎச்.டி., முடித்துள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்று மதிப்பூதியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கெளரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பணி நியமனத்தில் முன்னுரிமை: இதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய பணியிடங்களை நிரப்பும்போது அரசுக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரிவோருக்கு முன்னுரிமையும், அதிகப்படியான "வெயிட்டேஜ்' மதிப்பெண்களும் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் 3,350 பேரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நலச் சங்க நிர்வாகி கே.ஜீவா கூறியதாவது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று 2011-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.
திருவண்ணாமலையில் அதிகம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 2 அரசுக் கல்லூரிகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 111 பேரும், செய்யாறு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 104 பேர் என 215 கெளரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்.
SSA அடைவுத் தேர்வு (SLAS) மாணவர்களின் கல்வி தரத்தை காணுவதற்கு ஓர் அளவுகோலாகுமா!!!!!!!
SSA அடைவுத் தேர்வு (SLAS) மாணவர்களின் கல்வி தரத்தை காணுவதற்கு ஓர் அளவுகோலாகுமா!!!!!!!
*************
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 2016 ஜனவரி 5,6 தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துவக்கப் பள்ளிகளில் 3ஆம் 5ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 7,8 தேதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 8ஆம் வகுப்புகளுக்கும் அடைவுத் தேர்வினை நடத்தியுள்ளார்கள். தேர்வு நடத்திய முறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்துகிற GROUP 2 க்கு கொடுக்கின்ற முக்கியத்துவதை அளித்திருக்கிறார்கள் என தெரிகிறது.'PASS FAILING SYSTEM' 10ஆம் வகுப்பு வரையில் தேவையில்லை என விவாதம் நடந்து வருவதை காணுகிறோம்.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ’PASS FAILING SYSTEM' அவசியம் என்பதில் உறுதியாக உள்ளது.சில மாநிலங்கள் ’PASS FAILING SYSTEM' தேவையில்லை என வாதிட்டு வருகிறார்கள்.இந்த சமயத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் தரமான கல்வியினை தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு அளிப்பதற்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் அறிய முடிகிறது.
3ஆம் 5ஆம் வகுப்புகளுக்கு தேர்வு முறையில் இவ்வளவு நெறிபடுத்துகின்ற தன்மை தவிர்க்கப் பட்டிருக்கலாம்.குறிப்பாக 3ஆம் வகுப்பிற்கு இவ்வளவு கடுமையான சோதனை தேவையில்லை. அடைவுத் தேர்வு,2ஆம் பருவத் தேர்வு தொடர் நிகழ்வுகள் என்ற இந்த சமயத்தில் ஆசிரியர்களை பயிற்சி என்ற பெயரால் கூட்டம் போட்டு மாணவர்களின் கல்வி நலனில் அக்கரை காட்டாமல் சீரழித்து வருவதும் இந்த கல்வித் துறைதான்.
மயிலைப் பிடித்து காலை ஒடித்து
ஆட சொல்கிற கல்வித் துறை.
எது எப்படியோ இந்த தேர்வின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருப்பதை வரவேற்கலாம்.தேர்வு சமயத்தில் பயிற்சி என்ற பெயரால் கூட்டம் போடுவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.
SAVE CHILDREN
SAVE EDUCATION
SAVE INDIA !!!!!
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க,தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க,தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை
அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.; line-height: 22px;">அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் மேற்படிப்பு, பணி அனுபவம் அடிப்படையில், தலைமை ஆசிரியர்களாகவும், நிலை வாரியாகவும், பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அதன்படி, தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஜன., 1ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து, பிப்., 2க்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது
தொடர் பயிற்சிகளால், ஆசிரியர்கள் தவிப்பு!
தொடர் பயிற்சிகளால், ஆசிரியர்கள் தவிப்பு!
தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வும், 11ம் தேதி துவங்குகிறது.இதனால், மழை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையால், கிடப்புக்குப் போன பாடங்களை விரைந்து முடிக்க, ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, ஆசிரியர்களுக்கான பாடம் எடுக்கும் பயிற்சியை, ஆர்.எம்.எஸ்.ஏ., என்ற, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு, நேற்று முதல், 9ம் தேதி வரை, மூன்று நாட்கள், மாவட்ட ரீதியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மூன்று நாட்களும், பள்ளி வேலை நாட்கள் என்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்
டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்
டி.ஆர்.பி.,அறிவிப்பு-ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்
வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் தகவல்
தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய இணை அமைச்சர் தகவல்
தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருவதில் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களை இதிலிருந்து விடுவிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.ஏற்றத் தாழ்வுகள்:சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்உபாத்யாயா என்பவர் தாக்கல்செய்துள்ள பொது நல மனுவிவரம்:
நம் நாட்டில் தற்போது நடைமுறையில்உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள்உள்ளன. குழந்தைகளின்,சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்பகல்வியும் மாறுபடுகிறது.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும்ஜனநாயக நாடு என கூறுவதற்கு,இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறைநிச்சயம் உதவாது.சமூகம்,பொருளாதாரம், மதம்,கலாசாரம் என, எந்தவகையிலும்,குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாதுஎன,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில்கூறப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசின் கல்வி உரிமைசட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாககல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி,ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு, நாடு முழுவதும்,ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடியகல்வியை வழங்க வேண்டும் என்பதையும்வலியுறுத்துகிறது.சமூக, பொருளாதார பாகுபாடுநீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமானபாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும்அமல்படுத்த வேண்டும்.
பின்லாந்து,டென்மார்க், நியூசிலாந்து, நார்வே,கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்றநாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறைதான் அமலில் உள்ளது.உத்தரவிட வேண்டும்:அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரேமாதிரியானபாடத்திட்டத்தைஅமல்படுத்தும்படி, மத்திய,மாநிலஅரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறுஅவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்காலவிடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும்இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும்.அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு அனுமதி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.ஜல்லிகட்டு விளையாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த விளையாட்டு நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி, அமைச்சர் ஜாவடேகர் மற்றும் அமைப்புகள், தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு: கல்வித்துறை சர்க்குலர்
அரையாண்டு தேர்வு: கல்வித்துறை சர்க்குலர்
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 11ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகளை நடத்த,தொடக்கக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ்,இயங்கும் பள்ளிகளில், 1முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் வரும், 11ம் தேதி முதல், 27ம் தேதி வரை,நடத்த வேண்டும். இதன்படி,உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக,அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள,அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்புடன் கூடிய 4 வருட பி.எட். படிப்பு.
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்புடன் கூடிய 4 வருட பி.எட். படிப்பு.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘12 பி’ அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அந்தஸ்து இதுவரை 4 திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்து உள்ளது. 5-வதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது.4 மண்டல மையம்இந்த அந்தஸ்து பெற்றதனால் ‘நேக்’ என்ற தேதிய தர அங்கீகாரம் (என்ஏஏசி) பெறலாம். அதற்காக விண்ணப்பித்து இருக்கிறோம். சென்னை,கோவை, மதுரை, தர்மபுரி ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மண்டல அளவில் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு ரூ.65 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கி உள்ளது.
மதுரையில் மண்டல மையம் அமைப்பதற்கான நிலத்தை கலெக்டர் வழங்கியுள்ளார். இதுபோல மற்ற இடங்களில் நிலம் கையகப்படுத்திய பின்னர் கட்டிடம் கட்டப்படும். சமுதாயக்கல்லூரிகள் அனைத்து மாவட்டங்களிலும் திறக்க இருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.தற்போது பி.எட். தபால்வழியில் நடத்தி வருகிறோம். அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.பி.ஏ. பி.எட்., பி.எஸ்சி. பி.எட். ஆகிய இரு படிப்புகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக அடுத்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இளங்கலை பட்டத்துடன், பி.எட். படிப்பும் சேர்ந்து படிக்கக்கூடிய இதற்கு மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும்.
ஆய்வுக்குழுஇந்த படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் விண்ணப்பித்துள்ளோம். விரைவில் ஆய்வுக்கு வர உள்ளனர். மாணவர்கள்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கக்கூடிய ரெகுலர் பி.எட். படிப்பு, ரெகுலர் எம்.எட். படிப்பும் அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வரப்படும். தபால் வழியில் பட்டயப்பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பி.எட். படிக்கும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம். தபால் வழியில் எம்.எட். படிப்பு கொண்டுவர உள்ளோம்.
இவ்வாறு பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.
Wednesday, 6 January 2016
13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு
13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு
தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துவதால், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட வருவாய் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'வருவாய் துறையில் காலியாக உள்ள, 7,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்;ஊதிய குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்;தேர்தல் பிரிவு தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.
அரசு பேச்சு நடத்தி, கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ஓராண்டு ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சங்கத்தினர், தமிழகம் முழுவதும், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஜனவரி மாதத்தில் , உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு,தமிழ் படித்தல் பயிற்சி மற்றும் social science Map Training மற்றும் தொடக்க நிலைக்கு , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் உடற்பயிற்சி நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதத்தில் , உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு,தமிழ் படித்தல் பயிற்சி மற்றும் social science Map Training மற்றும் தொடக்க நிலைக்கு , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் உடற்பயிற்சி நடைபெறவுள்ளது.
Tuesday, 5 January 2016
ALL TRS TN: பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு
பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு
விருதுநகர்:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெறுவர்கள் தேர்ச்சி பெறவும், தேர்ச்சியின் விளம்பில் இருப்பவர் அதிக மதிப்பெண் பெறவும், அதிக மதிப்பெண் பெறுவர் முழு மதிப்பெண் பெறும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல்,
புவியியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு கற்றல் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.இக்கையேடுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்'சிடி'யாக வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் கல்வித்துறை சார்பில் www.chiefeducationalofficer.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் பயன் பெறும் வகையில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 'சிடி'யாக வழங்கிய கையேட்டை அனைத்து மாணவர்களும் புத்தகமாக மாற்றுவது என்பது காலதாமதமாகும். இதை தவிர்க்க இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த முகவரியில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். ஓரிரு நாளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடும் இணைய தளத்தில் வெளியிடப்படும்,” என்றார்.
ALL TRS TN : பிளஸ் ௨ தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்: 'கருத்து கேட்கவில்லை' என ஆசிரியர்கள் புகார்
பிளஸ் ௨ தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்: 'கருத்து கேட்கவில்லை' என ஆசிரியர்கள் புகார்
மதுரை,: கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம்
வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன.சென்னை, கடலுார் உட்பட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இத்தேர்வுகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிளஸ் 2 தேர்வில், முக்கியத்துவம் வாய்ந்த இயற்பியல் தேர்வு எந்தாண்டும் இல்லாத வகையில் கடைசி தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை குழப்பியுள்ளது.
இதேபோல், மார்ச் 22ல் நடக்கும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்விற்கு பின், ஆறு நாட்கள் விடுமுறைக்கு பின் 29ம் தேதி தான் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது. ஏப்.,13ல் தான் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன. முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில தேர்வை தவிர ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை விடுமுறை இடைவெளி
உள்ளது.தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:பொதுத் தேர்வுகள் அட்டவணை முடிவு செய்வதற்கு முன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களிடம் கல்வித்துறை சார்பில் கருத்து கேட்கப்படும். ஆனால் இந்தாண்டு அதுபோன்று நடக்கவில்லை. மேலும் வெள்ளப் பாதிப்பால் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டாலும், அதிக விடுமுறை அறிவிப்பு, பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முதல்முறையாக கடைசியாக பட்டியலிடப்பட்டது போன்றவை குழப்பமாக
உள்ளது. மேலும் கடைசி திருப்புதல் தேர்வு நடத்த முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது என்றார்.
ALL TRS TN : போலி சான்றிதழ் விவகாரம்: 40 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
போலி சான்றிதழ் விவகாரம்: 40 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
தர்மபுரி: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரத்தில், 40 ஆசிரியர்களின் ஜாதி, கல்வி சான்றிதழ்களை, போலீசார் சரிபார்த்து வருகின்றனர்.
போலி ஜாதி மற்றும் கல்வி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாராதியார் நகரைச் சேர்ந்த முனியப்பன், 37, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சானுாரைச் சேர்ந்த செந்தில்குமார், 38, இவர்களுக்கு, போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்த, கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்,
42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில், ராஜேந்திரன் மூலம் பலர் போலி ஜாதி, கல்வி சான்றிதழ் பெற்று, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் திடீர் விடுமுறை எடுத்த, 40 ஆசிரியர்கள் குறித்த விபரங்களை, கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து போலீசார் பெற்றனர். திடீர் விடுமுறைக்கான காரணம் மற்றும் அவர்கள் சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் குறித்த விபரங்களையும் வழங்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ALL TRS TN : டி.டி.எஸ்., பிடித்தம்: ஐ.டி., ஆணையர் விளக்கம்
டி.டி.எஸ்., பிடித்தம்: ஐ.டி., ஆணையர் விளக்கம்
சென்னை: தமிழக அரசின் மாவட்ட கருவூலத் துறை மற்றும் சம்பள கணக்கு அதிகாரிகளுக்கான, டி.டி.எஸ்., கணக்கு விழிப்புணர்வு பயிலரங்கம், சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் 'டாக்ஸ் டிடெக்சன் பார் சர்வீஸ்' எனப்படும் டி.டி.எஸ்., பிடித்தம், வரவு வைத்தல் மற்றும் அது தொடர்பான சந்தேகங்களுக்கு, வருமான வரி அதிகாரிகள் பதில்
அளித்தனர்.பயிரலங்கை துவக்கி வைத்து, வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு முன், டி.டி.எஸ்., பிடித்தம் என்பது கையால் எழுதப்பட்டு, வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். தற்போது, டி.டி.எஸ்., பிடித்தம் மற்றும் செலுத்துதல் போன்ற அனைத்து கணக்குகளும், 'ஆன்-லைனில்' மட்டுமே செய்ய வேண்டும்.
ஆன்-லைனில் செலுத்தும் போது, பல்வேறு சந்தேகங்களும், தவறுகளும் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கு, உரிய பதிலை வருமான வரித்துறை அளிக்கிறது. ஆனால், பிடித்தம் மற்றும் செலுத்துதலில் ஏற்படும் தவறுகளை, தொடர்புடைய கருவூலத் துறை அதிகாரிகள் மட்டுமே சரி செய்ய முடியும்.
அரசு ஊழியர் மற்றும் அரசு வரவு செலவுகள் தொடர்பாக பிடித்தம் செய்யப்படும் டி.டி.எஸ்., தொகையை, சரியாக பிடித்தம் செய்து, தவறு இல்லாமல் ஆன்-லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்-லைனில் தவறாக செலுத்தும் போது, பிடித்தம் செய்தவரின் கணக்கில் பதிவாகாது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, டி.டி.எஸ்., பிடித்தம் குறித்து குறிப்பிடவும் முடியாது. டி.டி.எஸ்., செலுத்தியிருந்தாலும் பலனில்லாமல் போய் விடும்.
எனவே டி.டி.எஸ்., பிடித்தம் மற்றும் செலுத்துவதை, கருவூல அதிகாரிகள் விழிப்புடன் செய்ய வேண்டும், என்றார்.டி.டி.எஸ்., ஆணையர் சேகர், இணை ஆணையர் சசிகுமார், கருவூலம், கணக்குத் துறை கூடுதல் இயக்குனர் ஜெகதீஸ்வரி பங்கேற்றனர்.
ALL TRS TN : என்.ஐ.டி.ஐ.இ.,யில் மாணவர் சேர்க்கை
என்.ஐ.டி.ஐ.இ.,யில் மாணவர் சேர்க்கை
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி நிறுவனமாக மும்பையில் செயல்படும், நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் (என்.ஐ.டி.ஐ.இ.,) இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்ட் கிரேஜூவேட் டிப்ளமோ இன் இன்டஸ்டிரியல் மேனேஜ்மென்ட் மற்றும் போஸ்ட் கிரேஜூவேட் டிப்ளமோ இன் இன்டஸ்டிரியல் சேப்ட்டி அன்ட் என்விரான்மென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேர விரும்புவோர் பொறியியல் துறையில், ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்து, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஜனவரி 15 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.nitie.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
www.nitie.edu
ÀLL TRS TN : 'திருவள்ளுவர் பிறந்த நாள் தேசிய விடுமுறை ஆகுமா?
திருவள்ளுவர் பிறந்த நாள் தேசிய விடுமுறை ஆகுமா?
தேசிய விடுமுறை ஆகுமா?
''திருவள்ளுவர் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,'' என, தருண்விஜய் எம்.பி., கூறினார்.உலகத் திருக்குறள் பேரவை சார்பில், மூன்றாவது திருக்குறள் மாநாடு, வேலுார் அடுத்த ரத்தினகிரியில் நேற்று நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார்.
திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, தருண்விஜய் எம்.பி., பேசியதாவது:
திருக்குறளை பிராந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும். ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு திருக்குறள் பேரவை துவங்கப்படும். அனைத்து பகுதியில் உள்ளவர்களும் திருவள்ளுவர், திருக்குறள் குறித்து தெரிந்து கொள்ள, திருக்குறள் பரப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில், 25 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
பஞ்சாப் மாநிலத்தில், அரசு பள்ளிகளில் பாட திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாகமத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து ஹரித்துவாருக்கு, திருக்குறள் கருத்துக்களை பரப்ப, புனித பயணம் பொங்கல் அன்று மஹாபலிபுரத்தில் இருந்து துவங்கப்படும். திருக்குறளைப் போல் மணிமேகலை, சிலப்பதிகாரம், கம்ப ராமாயணத்தை நாடு முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ALL TRS TN: தமிழக_சட்டமன்றத்_தொகுதிகளை தெரிந்து கொள்வோம்!
தமிழக_சட்டமன்றத்_தொகுதிகளை தெரிந்து கொள்வோம்!
தமிழக_சட்டமன்றத்_தொகுதிகளை தெரிந்து கொள்வோம்.
1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)
2. பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)
3. திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)
4. திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)
5. பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)
6. ஆவடி (சட்டமன்றத் தொகுதி)
7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)
8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
9. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)
11. ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)
12. பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
13.
கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி)
14. வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
15. திரு.வி.க நகர் (சட்டமன்றத் தொகுதி)
16. எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி)
17. இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)
18. துறைமுகம் சட்டமன்றத் தொகுதி
19. சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
20. ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)
21. அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)
22. விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
23. சைதாப்பேட்டை (சட்டமன்ற தொகுதி)
24. தியாகராய நகர் (சட்டமன்ற தொகுதி)
25. மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)
26. வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி)
27. சோளிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
28. ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
29. திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)
30. பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)
31. தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)
32. செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
33. திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)
34. செய்யூர் (சட்டமன்றத் தொகுதி)
35. மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)
36. உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி)
37. காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
38. அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)
39. சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)
40. காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)
41. ராணிப்பேட்டை (சட்டமன்ற தொகுதி)
42. ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)
43. வேலூர் (சட்டமன்றத் தொகுதி)
44. அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)
45. கீழ்வைத்தனன் குப்பம் (சட்டமன்றத் தொகுதி)
46. குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)
47. வாணியம்பாடி (சட்டமன்ற தொகுதி)
48. ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
49. ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
50. திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
51. ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி)
52. பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)
53. கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)
54. வேப்பனஹள்ளி (சட்டமன்றத் தொகுதி)
55. ஓசூர் (சட்டமன்றத் தொகுதி)
56. தளி (சட்டமன்றத் தொகுதி)
57. பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)
58. பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)
59. தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி)
60. பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
61. அரூர் (சட்டமன்றத் தொகுதி)
62. செங்கம் (சட்டமன்றத் தொகுதி)
63. திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி)
64. கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
65. கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
66. போளூர் (சட்டமன்றத் தொகுதி)
67. ஆரணி (சட்டமன்றத் தொகுதி)
68. செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)
69. வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
70. செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)
71. மயிலம் (சட்டமன்றத் தொகுதி)
72. திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)
73. வானூர் (சட்டமன்றத் தொகுதி)
74. விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)
75. விக்கிரவாண்டி (சட்டமன்ற தொகுதி)
76. திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)
77. உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
78. இரிஷிவந்தியம் (சட்டமன்ற தொகுதி)
79. சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)
80. கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)
81. கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)
82. ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)
83. ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)
84. ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)
85. மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)
86. எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)
87. சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி)
88. சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
89. சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
90. சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
91. வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)
92. இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
93. சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
94. நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)
95. பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)
96. திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
97. குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)
98. ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
99. ஈரோடு மேற்கு (சட்டமன்ற தொகுதி)
100. மொடக்குறிச்சி (சட்டமன்ற தொகுதி)
101. பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)
102. பவானி (சட்டமன்றத் தொகுதி)
103. அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)
104. கோபிச்செட்டிப்பாளைய (சட்டமன்றத் தொகுதி)
105. பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)
106. தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)
107. காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)
108. அவினாசி (சட்டமன்றத் தொகுதி)
109. திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
110. திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
111. பல்லடம் (சட்டமன்றத் தொகுதி)
112. உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)
113. மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)
114. உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)
115. கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)
116. குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)
117. மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)
118. சூலூர் (சட்டமன்றத் தொகுதி)
119. கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)
120. கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
121. தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
122. கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
123. சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
124. கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)
125. பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)
126. வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)
127. பழநி (சட்டமன்றத் தொகுதி
128. ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி)
129. ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)
130. நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
131. நத்தம் (சட்டமன்றத் தொகுதி
132. திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)
133. வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
134. அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)
135. கரூர் (சட்டமன்றத் தொகுதி)
136. கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)
137. குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)
138. மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி)
139. ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)
140.
திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
141.
திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
142. திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)
143. இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)
144. மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
145. முசிறி (சட்டமன்றத் தொகுதி)
146. துறையூர் (சட்டமன்றத் தொகுதி)
147. பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)
148. குன்னம் (சட்டமன்றத் தொகுதி)
149. அரியலூர் (சட்டமன்றத் தொகுதி)
150. ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)
151. திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)
152. விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)
153. நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)
154. பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)
155. கடலூர் (சட்டமன்றத் தொகுதி)
156. குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)
157. புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)
158. சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)
159. காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)
160. சீர்காழி (சட்டமன்றத் தொகுதி)
161. மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)
162. பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)
163. நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)
164. கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)
165. வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)
166. திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)
167. மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)
168. திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)
169. நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)
170. திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)
171. கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)
172. பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)
173. திருவையாறு (சட்டமன்ற தொகுதி)
174. தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)
175. ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)
176. பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
177. பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)
178. கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
179. விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)
180. புதுக்கோட்டை (சட்டமன்ற தொகுதி)
181. திருமயம் (சட்டமன்றத் தொகுதி)
182. ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)
183. அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)
184. காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)
185. திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
186. சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
187. மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)
188. மேலூர் (சட்டமன்றத் தொகுதி)
189. மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
190. சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)
191. மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
192. மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
193. மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)
194. மதுரை மேற்கு (சட்டமன்ற தொகுதி)
195. திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
196. திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)
197. உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
198. ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
199. பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)
200. போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)
201. கம்பம் (சட்டமன்றத் தொகுத
202. இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)
203. திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
204. சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
205. சிவகாசி (சட்டமன்றத் தொகுதி)
206. விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி)
207. அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
208. திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)
209. பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)
210. திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி)
211. இராமநாதபுரம் (சட்டமன்ற தொகுதி)
212. முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
213. விளாத்திகுளம் (சட்டமன்ற தொகுதி)
214. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)
215. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)
216. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)
217. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி)
218. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
219. சங்கரன்கோவில் (சட்டமன்ற தொகுதி)
220. வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
221. கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
222. தென்காசி (சட்டமன்றத் தொகுதி)
223. ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)
224. திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)
225. அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)
226. பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
227. நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)
228. ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)
229. கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)
230. நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
231. குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)
232. பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)
233. விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
234. கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி),
ALL TRS TN: மின் பொறியாளர் பணிக்கு 31-ம் தேதி தேர்வு
மின் பொறியாளர் பணிக்கு 31-ம் தேதி தேர்வு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவிப் பொறியாளர்கள் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு மையத்தில் நடைபெறும் இத்தேர்வுக்கு பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ALL TRS TN: ஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு
ஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு
நாடு முழுவதும் முதல் கட்டமாக 17.01.2016 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இம்முகாம்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் முடிவெடுக்கப்பட்டது.
1. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் தவணையாக 17.01.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
4. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.
6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் மற்றும் மருத்துவமனைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
7. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சிறப்பு செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் (பொ) டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, இணை இயக்குநர் டாக்டர் சேகர், உலக சுகாதார நிறுவன கண்காணிப்பு மருத்துவர் டாக்டர் என்.எஸ்.சுரேந்திரன், யுனிசெப் சார்பாக டாக்டர் அர்ச்சனா, டாக்டர் ஜெகதீசன் மற்றும் மருத்துவத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மார்ச் 4-ல் பிளஸ் டூ, மார்ச் 15-ல் 10-ம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்: முழுமையான கால அட்டவணை 10-ம் வகுப்பு
மார்ச் 4-ல் பிளஸ் டூ, மார்ச் 15-ல் 10-ம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்: முழுமையான கால அட்டவணை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 - ஏப்ரல் 13 வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 4-ல் தொடங்கி ஏப்ரல் 1 வரை நடக்கிறது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
ALL TRS TN: சிறுபான்மை மாணவர்கள் தமிழ் மொழி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
சிறுபான்மை மாணவர்கள் தமிழ் மொழி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்க கடிதம் அனுப்பி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்கு, கன்னடம், உருது உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 68 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6873 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இவர்கள் தமிழ் தவிர, அவர்களது தாய்மொழியை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி, தமிழ் மொழி கட்டாயமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால், 2006-ம் ஆண்டு 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் தாய்மொழியாக கற்பிக்கப்பட்டது. இதனால் தமிழ் மொழி படிப்பதில் பிறமொழி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, தெலுங்கு அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், இருவார காலத்திற்குள் பிறமொழி படிக்கும் மாணவ, மாணவிகளின் கருத்துகளை, பள்ளிக்கல்வித் துறை பெற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி ஓசூர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 6873 மாணவ, மாணவிகளின் கருத்துகளை பள்ளிக்கல்வித்துறை பெற்றது.
இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிறமொழி படிக்கும் 3604 மாணவர்களுக்கு அனுப்பி உள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர்நீதிமன்ற மற்றும் உச்zசநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தமிழ் கட்டாயமாக்கும் சட்டம், 2006-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பகுதி 2-ல் ஆங்கில பாடத்தினையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை சிறுபான்மை மொழியில் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழ் மொழிக்கற்றல் சட்டம் 2006-ன் படி, 2011-12-ல் 6-ம் வகுப்பில் தமிழ்பாடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மாணவர்களின் பெற்றோர் உரிய முறையில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு விலக்கு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.
தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள நிலையில், விலக்கு கோருவது ஏற்புடையாக இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அனுப்பி உள்ள விளக்கக் கடிதம் நகல்.
Monday, 4 January 2016
கல்வியில் புதிய புரட்சி ALL TRS TN- TAMS ம் வழங்கும் பயிற்சி.
கல்வியில் புதிய புரட்சி ALL TRS TN- TAMS ம் வழங்கும் பயிற்சி.
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன்
NMMS இன்று முதல் துவங்கியது.
TAMS & ALL TRS TN GRP வழங்கும் தினமும் NMMS மற்றும் VAO, TNPSC( 15 நாட்களுக்கு முன்னரே துவக்கி நடைபெற்று வருகிறது) வினாவிடை தொகுப்பு.
எனது ஆசிரிய பேரினமே அனைவருக்கும் வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இந்த NMMS GRP உருவாக்கியதன் காரணம் மாணவர்கள் நலன் ஒன்றே. கல்வியில் ஏதாவது பயனுள்ள வகையில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும், உங்களின் உதவியுடன் செய்யலாம் என இந்த முயற்சி செய்யப்பட்டது. இதற்கு தங்களின் பேராதரவு கிடைத்தற்க்கு அனைத்து ஆசிரியர்களுக்கு ALL TRS TN & TAM'S சார்பாக எங்களது நன்றியினை தெரிவித்துகொள்கிறோம். இதுவரை தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆதரவோடு 2 NMMS குழு துவக்கபட்டுள்ளது.
சில ஆசிரிய நண்பர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தாமல் இருப்பார்கள் அவர்கள் பள்ளிகளில் NMMS தேர்வர்களுக்கும் தந்து உதவிடுங்கள். நாங்கள் அனுப்பும் கேள்வி..பதிலில் தவறு இருந்தால் தாங்கள் புத்தகத்தை பயன்படுத்தி சரியானவற்றை மாணவர்களுக்கு வழங்குங்கள் ஆசிரிய நண்பர்களே!. அனைவருக்கம் மீண்டும் நன்றியினை உரித்தாக்குகிறோம்.
ஒன்றுபடுவோம்...
வெற்றிபெறுவோம்...
📖📖🌹🌹🌹📖📖
அனைத்து மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம்.
📖📖🌹🌹🌹📖📖
தினமும் வாட்ஸ் அப்பில்
NMMS போட்டி தேர்வு மற்றும் VAO, TNPSC தேர்வுக்கும் வினா விடைகள் சேகரித்து தொகுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும், ALL TRS TN GRP ம் இணைந்து வழங்குகிறது.
தேவைப்படுவோர் NMMS. OK<name, place> என Type செய்து (9894429770) என்ற எண்ணிற்கு WhatsApp ல் அனுப்பவும்.
மேலும் ALL TRS TN & TAMS ம் VAO, TNPSC க்கும் தேர்வர்களுக்கு study material வழங்கிக்கொண்டிருக்கிறது . தேவைப்படும் நண்பர்கள் MS.GK<name,place> என type செய்து 9894429770 என்ற எண்னுக்கு what's app ல் செய்தி அனுப்புங்கள்.
இந்த தகவலை தேவைப்படும் ஆசிரிய நண்பர்களுக்கு தெரிவியுங்கள். இந்த புத்தாண்டில் NMMS தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்வியல் நம்மால் முடிந்த சிறு உதவி.
மேலும் கீழ்கண்ட தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ.
ALL TRS TN.. Siva.
www.alltrstnsiva.blogspot.in.
பள்ளிக்குத் தேவையான முக்கிய படிவங்கள் - pdf (13 படிவங்கள்)
பள்ளிக்குத் தேவையான முக்கிய படிவங்கள் - pdf (13 படிவங்கள்)
CLICK HERE TO DOWNLOAD FORM FOR SCHOOLS .....(PDF)
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை தயார்
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில்,
பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்வுஎப்போது- பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள்
பொதுத்தேர்வுஎப்போது
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு தேர்வுத் துறை சார்பில் முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.
மார்ச் 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
16,500 ஆசிரியருக்குபோனஸ் இல்லை
16,500 ஆசிரியருக்குபோனஸ் இல்லை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது.ஆனால், இந்த பட்டியலில்,
அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
INCOMETAX: ALLOWANCES AVAILABLE TO DIFFERENT CATEGORIES OF TAX PAYERS FOR THE FY 2015-16,AY 2016-17,PHYSICALLY CHALLENGED TEACHERS SEE SERIAL NO.14 0F THE TABLE
INCOMETAX: ALLOWANCES AVAILABLE TO DIFFERENT CATEGORIES OF TAX PAYERS FOR THE FY 2015-16,AY 2016-17,PHYSICALLY CHALLENGED TEACHERS SEE SERIAL NO.14 0F THE TABLE
CLIK HERE INCOMETAX PAYERS DETAILS
Saturday, 2 January 2016
ALL TRS TN : பருவநிலை மாற்றம் கருத்தரங்கு: இத்தாலியில் உரை நிகழ்த்தி அசத்திய திருச்சி மாணவர்
பருவநிலை மாற்றம் கருத்தரங்கு: இத்தாலியில் உரை நிகழ்த்தி அசத்திய திருச்சி மாணவர்
பருவநிலை மாற்றம் தொடர்பாக இத்தாலி நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஏ.சிவச்சந்திரன்.
தட்பவெட்ப நிலையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களின் விளைவாக பருவ மழை குறைவு, வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே இன்டர்நேஷனல் சென்டர் பார் தியோரெடிக்கல் பிசிக்ஸ் என்ற நிறுவனம் கடந்த மாதம் இத்தாலியில் ஏற்பாடு செய்திருந்த ‘10 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றம் மற்றும் எதிர்கால கணிப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று உரை நிகழ்த்தி திரும்பியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வரும் மாணவர் ஏ.சிவச்சந்திரன்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி அழகுதுரையின் மகன் இவர். கடந்த 3 ஆண்டுகளாக பேராசிரியர் யோகானந்தன் வழிகாட்டுதலுடன் கடந்த கால தட்பவெட்ப நிலை (Paleo Climate) குறித்து சிவச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிவச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியது: பழமையை அறிந்துகொண்டால் எதிர்காலத்தை கணிக்கலாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஆய்வை நான் மேற்கொண்டேன்.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தண்ணீரை தருகிறது. இங்கு பெய்யும் மழையில் பெரும்பகுதி பல்வேறு ஆறுகள் வழியாக அரபிக்கடலில் சென்று கலந்துவிடுகின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக குறைந்த காலத்தில் அதிக மழைப் பொழிவு, மழையே இல்லாமை அல்லது வெப்பக் காற்று உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடல் பரப்பில் நிலவும் வெப்பம் தான் நிலப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலையை தீர்மானிக்கிறது.
எனவே, கடந்த 10,000 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை எந்த அளவுக்கு பெய்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக அரபிக்கடலின் தென் கிழக்குப் பகுதியில் 500 மீட்டர் ஆழத்தில் பிரத்யேக டிரில் மூலம் போர் செய்து 6 அடி அளவுக்கு மணல் படிமங்களைச் சேகரித்தேன். சேகரிக்கப்பட்ட மணல் படிமங்களை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து அதிலுள்ள நுண்ணுயிர்கள், அதன் வாழ்வாதாரச் சூழல், வெப்ப நிலை, உப்புத் தன்மை ஆகியவற்றைக் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்பவெட்ப நிலை குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்தேன். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்துதான் இத்தாலியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினேன்.
பல்வேறு நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 157 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். அமெரிக்கா மேரிலாண்ட் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் முனைவர் கெல்லி ஹலிமெடா கில்போர்ன், தங்களது பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பயிலரங்கில் பங்கேற்க தன்னை அழைத்துள்ளார் என்றார் சிவச்சந்திரன் பெருமையுடன்.
இதுகுறித்து பேராசிரியர் யோகானந்தன் கூறியபோது, “இந்த ஆய்வில் மீதமுள்ள பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும், அதன் பிறகு பருவநிலை மாற்றத்தைச் சரி செய்வதற்கான மாதிரிகளைத் திட்டமிடுவதற்கும், ஆராய்ச்சிகளுக்கும், எதிர்காலத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான கணிப்புகளுக்கும் இது பேருதவியாக இருக்கும்” என்றார்.
ALL TRS TN : 1 முதல் 9–ம் வகுப்பு வரை 3–ம் பருவ பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வினியோகம்
1 முதல் 9–ம் வகுப்பு வரை 3–ம் பருவ பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வினியோகம்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. மழை வெள்ளப்பாதிப்பில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வருகிற 11–ந்தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.அரையாண்டு தேர்வு நடைபெறாத நிலையிலும் மாணவர்களுக்கு வழக்கமாக விட வேண்டிய பண்டிகை கால விடுமுறையை பள்ளிக் கல்விதுறை அளித்தது. விடுமுறை நாட்களில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.வேலை நாட்கள் குறைவாக இருப்பதால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் வகுப்பு நேரம், சிறப்பு வகுப்பு நடத்தி பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கப்பட்டு வருகின்றன.மாணவ–மாணவிகள் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற வசதியாக இந்த கையேடு தயாரிக்கப்பட்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி தொடங்கி வைத்தார். 10 லட்சம் கற்றல் கையேடுகள் பாடவாரியாக தயாரிக்கப்பட்டு மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ–மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு 3–ம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 1 முதல் 9–ம் வகுப்பு வரை வழங்கும் மாணவ–மாணவிகளுக்கு பருவமுறை கல்வி நடைமுறையில் உள்ளது. 2 பருவம் முடிந்து 3–வது பருவம் இன்று தொடங்கியது.இறுதி பருவமான 3–ம் பருவத்திற்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நேற்று வழங்கப்பட்டன. இதற்காக ஒரு கோடியே 25 லட்சத்து 800 புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு 62,300 பாட புத்தகங்களும், 81 லட்சத்து 9 ஆயிரத்து 500 3–ம் பருவபாடப் புத்தகங்கள் விற்பனைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி
ALL TRS TN: மாணவர் விவரம் அவகாசம் நீட்டிப்பு.
மாணவர் விவரம் அவகாசம் நீட்டிப்பு.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிவேற்றம் செய்ய, 5 வரை, பள்ளிகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்றது. இவ்விவரங்களை, முதல்கட்டமாக ஆப்லைன்னில் தயாரித்து வைக்க ஏதுவாக, பள்ளிகளுக்கு யூஸர் ஐடி, பாஸ்வேர்டு தரப்பட்டன. தற்போது, 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள், பிழை இல்லாமல், பெயர் பட்டியல் தயார் செய்ய, தலைமை ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
தனித்தேர்வருக்கும் அவகாசம் மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்,டிச., 11 முதல், 29 வரை தேர்வுக்கு, விண்ணப்பிக்க, அவகாசம் தரப்பட்டது. அவர்களும், ஜன., 5 வரை,அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையத்தை அணுகி, ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என,அறிவுறுத்தப்பட்டுள்ளது
ALL TRS TN: ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிவர்த்தனை: "பான்' எண் இன்று முதல் கட்டாயம்
ரூ.50,000-க்கும் மேல் பணப்பரிவர்த்தனை: "பான்' எண் இன்று முதல் கட்டாயம்
ரூ.50,000-த்துக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய உத்தரவு வெள்ளிக்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒருகட்டமாக, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பணப்பரிவர்த்தனை செய்யும்போது பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அரசின் இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, ரூ.50,000-த்துக்கும் அதிகமாக ஹோட்டலில் ரசீது கட்டினாலோ அல்லது வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டணம் செலுத்தினாலோ வெள்ளிக்கிழமை முதல் பான் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் நகை வாங்குவது உள்ளிட்ட அனைத்து பணப்பரிவர்த்தனைகள், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் அசையா சொத்துகளை வாங்குவது போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் கட்டாயம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் அசையா சொத்துகளை வாங்கும்போது பான் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த தொகை தற்போது ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதேபோல், வங்கிகள், தபால் அலுவலகங்கள், வங்கி சாராத நிதி நிறுவனங்களில் ஒரே தவணையில் ரூ.50,000-த்துக்கும் அதிகமாகவோ அல்லது ஒராண்டில் ரூ. 5 லட்சமோ முதலீடு செய்யும்பட்சத்தில் அதற்கும் இனிமேல் பான் எண் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பான் அட்டை இல்லாதவர்கள் தவறான தகவல் அளித்தால் கடுங்காவல்
பான் அட்டை இல்லாதவர்கள், ரூ.50,000-த்துக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தவறானவை என்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லியில் வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருமான வரித்துறை கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பான் அட்டை இல்லாதோர், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்கையில், 60ஆவது எண் படிவத்தை கட்டாயம் நிரப்பி அளிக்க வேண்டும். அத்துடன், தனது அடையாள அட்டை, முகவரிச் சான்றுகளையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் விவரங்களில் தவறு இருப்பது தெரிந்தால், அத்தகைய நபர்களுக்கு அதிகபட்சமாக அபராதத்துடன் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனைஅல்லது குறைந்தபட்சம் 3 மாத கடுங்காவல் சிறையுடன் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
ALL TRS TN: உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- 1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம்பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமானகட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.
ALL TRS TN: அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்
அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்
கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் வரும்ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை கல்வித்தர அடைவு சோதனை நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வ.மல்லிகா தெரிவித்ததாவது:
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வித்தர அடைவு சோதனை வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இச்சோதனை நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வோர் ஒன்றியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு 10 பள்ளிகளும் 15 மாணவர்களுக்கு 6 பள்ளிகளிலும், 1 ஆங்கில வழிப் பள்ளியிலும் மொத்தம்16 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் இச்சோதனையை நடத்த வேண்டும். இதேபோல், 8-ஆம் வகுப்புக்கு 10 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடைவுச் சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வித்தர அடைவு சோதனை வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இச்சோதனை நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வோர் ஒன்றியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு 10 பள்ளிகளும் 15 மாணவர்களுக்கு 6 பள்ளிகளிலும், 1 ஆங்கில வழிப் பள்ளியிலும் மொத்தம்16 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் இச்சோதனையை நடத்த வேண்டும். இதேபோல், 8-ஆம் வகுப்புக்கு 10 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடைவுச் சோதனை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)