சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்டோ முதலிடம்
அகில இந்திய அளவில் நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் (சார்ட்டன்ட் அக்கவுண்டட்) தேர்தவில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ முதலிடம் பெற்றார்.
பிரிட்டோ 800 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் எடுத்து 74.38 சதவீதத்துடன் முதலிடத்தை பெற்றார்.
திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினேஷ் சான்செட்டி 566 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்திய பட்டய கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் ஒன்று பிரிவில் நவம்பர் மாதம் தேர்வு எழுதிய 77,442 பேரில் 9,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல குரூப் 2 பிரிவில் தேர்வு எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரு தேர்வுகளையும் எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் ஏதாவது ஒரு குரூப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment