அக்.,24க்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் !
அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
2011 மக்கள்தொகை, சுழற்சிமுறை, இடஒதுக்கீடு, தொகுதி வரையறை ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என திமுக மற்றும் பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மாநில தேர்தல் கமிஷன் பதில் அளிக்க ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ஐகோர்ட்டில் மாநில தேர்தல் கமிஷன் அளித்த பதிலில், வரும் அக்டோபர் 24ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் செப்டம்பர் 3வது வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தொகுதி வரையறை உடனடியாக அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நாளை பதிலளிக்க வேண்டும் என மாநில தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment