பேஸ்புக்' பிடியில் இருந்து 'வாட்ஸ் ஆப்' : வாடிக்கையாளர் தப்பிக்க என்ன வழி?
'வாட்ஸ் ஆப்' வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை பயன்படுத்தப் போவதாக, அந்த நிறுவனத்தை வாங்கியிருக்கும், 'பேஸ்புக்' நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதனால், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவோர், தங்களது அந்தரங்க விஷயங்கள், பேஸ்புக்கில் பகிரப்படுமோ என கவலை அடைந்துள்ளனர்.
உலகில், 'வாட்ஸ் ஆப்' செயலியை, 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதை, சில ஆண்டுகளுக்கு முன், சமூக வலைத்தள நிறுவனமான, 'பேஸ்புக்' வாங்கியது; தற்போது, திடீரென ஒரு அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள், பேஸ்புக்கையும் பயன்படுத்துபவராக இருந்தால், அவர்களது வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட விபரங்கள், பேஸ்புக்குடன் பகிரப்படும்' என்பதே அது. அதனால், தாங்கள் அனுப்பும் தகவல்கள், படம், வீடியோக்கள் கசிந்து விடுமோ என, 'நெட்டிசன்'கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதுபோன்றவர்கள், வாட்ஸ் ஆப்பில் உள்ள, 'செட்டிங்ஸ்' வழியாக, 'அக்கவுன்ட்' பகுதிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு சென்றதும், 'ஷேர் மை அக்கவுன்ட்' என்ற வாசகமும், அதற்கு நேர் எதிரெ சிறிய பெட்டியும் இருக்கும். அதில், 'டிக்' செய்யப்பட்டு இருக்கும்; அந்த, 'டிக்'ஐ நீக்கியதும், வேறோர் திரை தோன்றும். அதில், 'உங்கள் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் இடம்பெற வேண்டுமா' என கேட்கப்பட்டு இருக்கும்; அதற்கு, 'கேன்சல், டோன்ட் ஷேர்' என, இரு, 'சாய்ஸ்' தரப்பட்டுள்ளது. 'டோன்ட் ஷேர்' எனப்படும், 'பகிர வேண்டாம்' என்ற வார்த்தையை, 'செலக்ட்' செய்தால் போதும்; உங்கள் விபரங்கள், பேஸ்புக்குடன் பரிமாறப்படாது.
No comments:
Post a Comment