Wednesday, 28 September 2016

கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாணவர்கள்

கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாணவர்கள்  

 தமிழகத்தில் 2011ம் ஆண்டு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வந்தபோது அதில் கணினி பாடத்திட்டமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதற்காக 6 முதல் 10ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் அந்த பாடத்திட்டத்தை முழுவதும் ரத்து செய்துவிட்டு புத்தகத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கணினி பயிற்சி அளிக்கிறோம் என்பதை தங்களது சிறப்பம்சமாக எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1992 முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப்படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப்படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் கணினி படிப்பு முடிக்காதோர் கடந்த 2008ல் நீக்கப்பட்டனர்.பல்கலை.களில் 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில் பிஎஸ்சிக்கு பிறகு பிஎட் படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆன்லைன் படிப்புக்கும் ஐசிடி எனப்படும்கணினி வழி தொழில்நுட்ப கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் மெத்தனத்தால் ஐசிடி கல்வி படிப்பில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே இல்லாமல், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் ஏன் தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி பாடத்தை மற்ற பாட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர்.சில பள்ளிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். ஆனால் அவர்கள் நடத்தும் பாடம் புரியாமல் மாணவர்கள் பரிதவித்துவருகின்றனர். உலகமே கணினிமயமாக மாறி வரும் காலக்கட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் பல பள்ளிகளில் கணினி ஆசிரியர் இல்லாமலும், அல்லது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததாலும் மாணவர்கள் கணினி பாடத்தை படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். அதேபோல் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவரவில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இது கணினி அறிவியலின் ஆர்வம்தான். ஆனால் மாணவர்கள் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்ந்தவுடன், இந்த பாடத்தில் ஏன் சேர்ந்தோம் என்று வேதனைபடுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் கணினி ஆசிரியர்கள் இல்லாதது தான். சில பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாததால் பிளஸ் 1 வகுப்பில் கணினி பாடப்பிரிவையே ரத்து செய்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் கல்விதான் பாதிக்கிறது. தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது தொழில்நுட்பம். ஆனால் அரசு பள்ளி மாணவர்களிடையே பள்ளிக் கல்வித்துறை கணினி அறிவியல் பாடத்தை கற்பிக்காமல் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. பொதுவாக கணினி அறிவியல் பாடத்திற்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற அச்சம் கணினி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கணினி அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்த பொதுத்தேர்வு மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுஒருபுறமிருக்க அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கிளாஸ், ஆன்லைன் வகுப்புகள், என அரசு பள்ளிகளில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.ஆனால் ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கணினி ஆசிரியர்கள் இல்லாததது பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புக்கான கட்டிடப்பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடப்பணிகள் முடிவடைவதற்குள்அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம்தருவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களை கணக்கெடுத்து கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.39,019 பேர் காத்திருப்புதமிழகத்தில் 1992ம் ஆண்டிலிருந்து கணினி பட்டதாரிகளில் ஆண்கள் 9,579 பேர், பெண்கள் 29,440 பேர் உட்பட 39,019 பேர் பிஎட் கணினி அறிவியல் பாடத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் படித்து வீட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வையும் எழுத அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன?

ELECTION-2016:வாக்குச்சாவடி அலுவலர்(PO) - மண்டல அலுவலரிடம்(zonal officer) ஒப்படைக்க வேண்டிய பொருள்கள் என்னென்ன? 

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கீழ் கண்ட பொருள்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்:

                    பகுதி - I

1. வாக்குப் பதிவு இயந்திரம் 1/2/3 2. வாக்குப் பதிவு இயந்திர
கட்டுப்பாட்டு கருவி - 1 (இவற்றை முறையாக மூடி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மெட்டல் சீல் வைக்க வேண்டும். முகவர்களும் முத்திரை வைக்கலாம்)    

                                      

                    பகுதி - II

                             (4 வகை படிவங்கள்: வெள்ளை நிற கவர்கள்) (கீழ் கண்ட படிவங்களை பூர்த்தி செய்து வெள்ளை நிற கவரில் வைக்கவும். ஒட்டக் கூடாது. மண்டல அலுவலர் சரி பார்த்த பின்பு தான் ஒட்ட வேண்டும்.) 1. படிவம் 17 C  (3 பிரதிகள் தயார் செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் இருக்கும் அனைத்து முகவர்களுக்கும் ஒரு நகல் தர வேண்டும். மிக முக்கியமான படிவம்.) 2. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் உறுதி மொழி படிவம் - 3 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் 3 முறை  உறுதி மொழி அறிக்கையை படிக்க வேண்டும்.  (மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் முறையான வாக்குப்பதிவு தொடங்கும் முன் காலை 7 மணிக்கு / வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு / வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை உரிய பெட்டியில் வைத்து அரக்கு வைத்து மெட்டல் சீல் வைத்தவுடன்)இப்படிவத்தில் அனைத்து முகவர்களிடமும் கையொப்பம் பெற வேண்டும்.   3.  வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு 4. தேர்தல் பார்வையாளரின் 16 விவரங்கள் அடங்கிய குறிப்புரை

                                         

                         பகுதி - III 

              (5 வகை பொருள்கள்/படிவங்கள்:  பச்சை நிற கவர்கள்)

(இவை சட்டப்பூர்வமான கவர்கள்: பச்சை நிறத்தில் இருக்கும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இவற்றை கவரில் வைத்து முகவர்கள் முன்னிலையில் ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும். இந்த கவர்கள் மீது முகவர்கள் கையொப்பமிட விரும்பினால் அனுமதிக்க வேண்டும். கவரின் பின்புறம் கையொப்பம் இட சொல்ல வேண்டும். கீழ்க் கண்ட 5 கவர்களையும் பூர்த்தி செய்து பச்சை நிற பெரிய கவரில் போட வேண்டும்.)


1. முதல் வாக்குப்பதிவு அலுவலர் பதிவு செய்த வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியல்  (The sealed cover containing the marked copy of the Electoral roll) 2. இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர்  பதிவு செய்த 17 A பதிவேடு   (The sealed cover containing Register of Voters - FORM 17A) 3. மூன்றாம்  வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டு (வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையும், மூன்றாம்  வாக்குப்பதிவு அலுவலர் கைவசம் இருக்கும் வாக்காளர் சீட்டுகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்)   


 (The sealed cover containing Voters slip) 4. பயன்படுத்தப் படாத Tendered Ballot Papers.   (The sealed cover containing Unused Tendered Ballot Papers.) 5 பயன்படுத்தப் பட்ட  Tendered Ballot Papers மற்றும் விவரப் பட்டியல்  (படிவம் 17B)

 (The sealed cover containing Used Tendered Ballot Papers and list in 17B.)

                                  *

                    பகுதி - IV

                
  (11 வகை பொருள்கள்/படிவங்கள் மஞ்சள்  நிற கவர்கள்)  (இவை சட்டபூர்வ முறைமையற்ற  கவர்கள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த கவர்களை ஒட்டி, அரக்கு வைக்க வேண்டும்.) 1. சரிபார்த்தலுக்காக வழங்கப்பட்ட பிற வாக்காளர் பட்டியல்கள்ம்  ( The sealed cover containing the copy or copies of electoral roll - other than the marked copy)2. முகவர்களின் நியமனக் கடிதம் படிவம் 10 ( The sealed cover containing the appointment letters of polling Agents in Form 10)

3. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பணிசான்றை (EDC Certificate) பயன்படுத்தி, பணிபுரியும் வாக்கு சாவடியிலேயே வாக்கை பதிவு செய்திருந்தால், அவரிடம் உள்ள பணிசான்றினை பெற்று இந்த கவரில் வைத்து அரக்கு வைக்க வேண்டும். 


( The sealed cover containing the Elction Duty Certificates in Form 12 B) 4. Challenged ஓட்டு அளித்தவர்களின் விவரப் பட்டியல் படிவம் 14  ( The sealed cover containing the list of Challenged Votes in Form 14)

5. கண்பார்வை இல்லாதவர்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் வாக்களிக்க துணையாக வருவோர் வாக்குப் பதிவு ரகசியத்தை காப்பேன் என  உறுதிமொழி அளிக்கும் கடிதம். படிவம் 14 A.


 ( The sealed cover containing the list of Blind and inform Electors in Form 14A and the declaration of the companion)6. தோற்றத்தில் 18 வயதை விட குறைவானவர் போல தோற்றம் அளித்தால், வாக்கு சாவடி தலைமை அலுவலர் அவரிடம் விசாரணை செய்து, அவரிடம் பெற்ற  உறுதி மொழிக் கடிதம் மற்றும் இதுபோல வந்த வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப் பட்டதா? மறுக்கப் பட்டதா? என்ற விவரப் பட்டியல்   


 ( The sealed cover containing the declarations obtained from the Electors as to their age and the list of such Electors)


7. Challenged ஓட்டுக்காக முகவரிடம் பெறப்பட்ட பணம் மற்றும் அதற்கான ரசீது, முகவரிடமிருந்து பெறப்பட்ட தொகை திரும்ப அவருக்கு அளிக்கப் பட்டிருந்தால், முகவரிடம் பெறப்பட்ட ஒப்புதல் ரசீது   


( The cover containing the receipt book and cash, if any, in respect of Challenged votes)8. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பச்சை நிற தாள்கள் ( The cover containing Unused and Damaged Green paper seals) 9. பயன்படுத்தப்படாத வாக்காளர் சீட்டுகள்  ( The cover containing Unused voter slips) 10. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Special Tags. ( The cover containing with Unused and Damaged Special Tags) 11. பயன்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த Strip Seals.( The cover containing Unused and Damaged Strip Seals.)                               

                                                                                            பகுதி - V

            (7 வகை பொருள்கள்/படிவங்கள் பிரவுன்/காக்கி நிற கவர்கள்)   1. வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான பயிற்சி கையேடு  (The Hand book for presiding officer) 2. வாக்கு பதிவு இயந்திரம் கையாளும் பயிற்சி புத்தகம்  (The manual of instructions for use of Electronic Voting Machines)3. அழியாத மை குப்பி (Indelible Ink set) 4. Stamp Pad 5. மெட்டல் சீல்   (Brass seal for Presiding officer) 6. Tendered வாக்கு அளிக்க வழங்கப்பட்ட ரப்பர் முத்திரை  (Arrow cross mark rubber stamps for marking tendered ballot papers) 7. அழியாத மை குப்பி வைக்க பயன்படுத்தும் Cup (Cup for setting the indelible ink)

                                          ***                                                 

                                                         பகுதி - VI



(பிற வகை பொருள்கள்/பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்) 1. பயன்படுத்தப்படாத படிவங்கள் அனைத்தும்  (Cover containing unused forms) 2. பயன்படுத்தப்படாத துணிகள்/கவர்கள்/பைகள் அனைத்தும்  (Unused canvas bags/cloth) 3. தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட பயன்படுத்தப் படாத பொருள்கள் அனைத்தும்  (Cover containing any other papers directed to be kept by the Returning officer in a sealed packet) 4. வாக்களிக்கும் அறைக்காக வழங்கப்பட்ட அட்டைகள், குண்டூசி, மற்ற எழுது பொருள்கள் அனைத்தும்   (All other items, if any should be packed in to the fourth packet)மேற்கண்ட பட்டியல் படி தயார் செய்து வைத்திருந்தால் மண்டல அலுவலர் வரும் போது தேர்தல் பொருள்களை விரைவாக ஒப்படைத்து விடலாம்.  உங்கள் தேர்தல் பணி சிறக்க வாழ்த்துக்கள்!  

ALL TRS TN.. Siva

Tuesday, 27 September 2016

ELECTION DATES - AREA WISE

ELECTION DATES - AREA WISE 

CLICK HERE..TO VIEW YOUR AREA ELECTION DATE

Monday, 26 September 2016

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை செய்ய வேண்டியவை

தபால் ஓட்டில் கடைபிடிக்க வேண்டியவை செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை செய்ய வேண்டியவை  

முதலில்கட்சிகளின் சின்னம் அடங்கிய துண்டுசீட்டில் தங்களுக்கு பிடித்த சின்னத்துக்கு அருகில்டிக் அடிக்க வேண்டும் .

நாம் அடிக்கின்ற டிக் பக்கத்தில் இருக்கும்சின்னத்தில் படாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்.

டிக் அடித்த துண்டு சீட்டைA என்ற இளஞ்சிவப்பு நிற அலுவலக கவரில்வைத்து ஒட்ட வேண்டும்.

ஸ்டேபில்பண்ணக்கூடாது.*
13A என்றுஒரு படிவம் இருக்கும். அதைசரியாக பூர்த்தி செய்து தங்களுக்கு தெரிந்தசான்றொப்பமிட தகுதி உடைய நண்பர்களிடம்அந்த படிவம் 13A ல் சான்றொப்பம் வாங்கவேண்டும்.

பின்னர்A என்ற ஒட்டிய இளஞ்சிவப்பு நிறஅலுவலக கவரையும், 13A படிவத்தையும் சேர்த்து B என்ற கவரில் போட்டுஒட்டி விட வேண்டும் .

செய்ய கூடாதவை
படிவம்13A ல் சான்றொப்பம் வாங்காமல் இருக்கக் கூடாது.

இரண்டுஅலுவலக கவரையும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

படிவம்13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரிகூட வைத்து விடக்கூடாது

மேலும்சந்தேகம் இருந்தால் உங்கள் நண்பர்களிடம் ஆலோசித்துதெளிவு படுத்தி கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால்வாக்கு கூட செல்லாத வாக்காகஇருக்கக்கூடாது

ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.

இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல். 

மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது. 

இதற்கு, மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒன்று அல்லது இரண்டு மாணவர்களுக்கு, அறிவியல் திட்டங்கள் மேற்கொள்ள, 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான பதிவு, ஆக., 25ல் துவங்கியது.

வரும், 30ம் தேதிக்குள், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே திட்டங்கள் ஏற்கப்படும். தமிழகத்தின்பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இதுகுறித்த அறிவிப்பை, மாவட்டகல்வித் துறை வழங்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்தல், திட்டங்களை தேர்வு செய்தல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கோ, பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கோ, உரிய வழிகாட்டுதலும் இல்லை; பயிற்சியும் இல்லை. தொடர்ச்சியாக, இரு ஆண்டுகள், அறிவியல் கண்காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், மீண்டும் பதிய முடியவில்லை. இதுகுறித்து, கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்திற்கும், பலர் புகார் செய்தும், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால், விருதுக்கான பதிவில், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முன்னணியிலும், அரசு பள்ளிகள் பின்தங்கியும் உள்ளன.

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்

தேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : காலாண்டு விடுமுறையை ரத்து செய்து பணிக்கு திரும்பினர்
உள்ளாட்சித் தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களை தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் முதல் வேட்பு மனுதாக்கலின் கடைசி நாள் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள். தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது. 


இந்த தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு கடந்த வாரமே அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியருக்கு ஒரு ஊராட்சியை ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று 26ம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெற வேண்டும். அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். 

அன்று வரை ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையும் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் ஆசிரியர்கள் காலாண்டு விடுமுறையில் தேர்தல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பொறுத்தவரை அவர்கள் பணி செய்யும் ஊரின் தேர்தல் பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியானதால், ஏற்கெனவே தேர்தல் பணிக்கான உத்தரவு பெற்று வெளியூர் சென்றிருந்த ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் நேற்று அவசர அவசரமாக தங்களுக்கான ஊராட்சிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 
குறிப்பாக பெண் ஆசிரியர்கள், மாற்று திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் உடனடியாக சம்பந்தப் பட்ட மைய த்துக்கு செல்ல முடியமால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு தேவை யான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தரவில்லை. 

Sunday, 25 September 2016

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொடர்பு தொலைபேசி எண்கள் 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தொடர்பு தொலைபேசி எண்கள்
பொது் 044  23635010 044- 2363 5011
மின்னஞ்சல் முகவரி    tnsec.tn@nic.in
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நேரடி 044- 2363 5030
செயலாளர்
நேரடி 044 2363 5050
044 23635010 விரிவு  2005
முதன்மைத் தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)
நேரடி 044-2363 5014
044-2363 5010 விரிவு  3000
முதன்மைத் தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)
நேரடி 044-2363 5015
044-2363 5010 விரிவு  3004
மாநில தேர்தல் அலுவலர்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் 044 24323794 24343205
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையர் 044 28513259 28518079
பேரு்ராட்சிகளின் இயக்குநர் 044 25340352 25358742
சட்ட ஆலோசகர் (மேல் முறையீட்டு அலுவலர்)
நேரடி 044-2363 5013
044-2363 5010 டூ விhpவு 2008
நிதி ஆலோசகர் (ம) தலைமை கணக்கு அலுவலர்
நேரடி 044-2363 5012
044-2363 5010 விரிவு  3001
தலைமை நிர்வாக அலுவலர் (பொது தகவல் அலுவலர்)
நேரடி 044-2363 5016
044-2363 5010 விரிவு  3006
மக்கள் தொடர்பு அலுவலர்
நேரடி 044-2363 5017
044-2363 5010    விரிவு  3002
கணினி நிரலர் 044-263 5010 விரிவு  2009
கண்காணிப்பாளர் (நிர்வாகம்) 044-2363 5010 விரிவு  4001
கண்காணிப்பாளர் (ஊராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு  4003
கண்காணிப்பாளர் (நகராட்சித் தேர்தல்கள்) 044-2363 5010 விரிவு  3008
கண்காணிப்பாளர் (சட்டம்) 044-2363 5010 விரிவு  3003
கணினி அறை 044- 2363 5010 - விரிவு  2009
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி - தொலையச்சு எண்கள்
மாவட்ட ஆட்சியர்  மாவட்டம் மாவட்டத் தேர்தல்  அலுவலாpன் பதவியிடம் அலுவலக தொலைபேசி எண் தொலையச்சு  எண்
சென்னை மாநகராட்சி ஆணையர் 044 25381330 2538396
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் 0422 2301114 2216630
கடலு}ர் மாவட்ட ஆட்சியர் 04142 230999 230555
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் 04342 230500 230886
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 0451 246119 2432132
ஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424 2266700 2262444
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் 044 27237433 27238477
கன்னியாகுமாp மாவட்ட ஆட்சியர் 04652 279555 260999
கரு்ர் மாவட்ட ஆட்சியர் 04324 257555 257800
கிருக்ஷ;ணகிரி மாவட்ட ஆட்சியர் 04343 239500 239300
மதுரை மாவட்ட ஆட்சியர் 0452 2531110 2533272
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் 04365 252700 254058
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் 04286 281101 281106
பெரம்பலு}ர் மாவட்ட ஆட்சியர் 04328 276300 277875
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் 04322 221663 221690
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 04567 231220 231220
சேலம் மாவட்ட ஆட்சியர் 0427 2452233 2400700
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 04575 241466 241581
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 04362 230102 230857
நீலகிரி மாவட்ட ஆட்சியர் 0423 2442344 2443971
தேனி மாவட்ட ஆட்சியர் 04546 253676 251466
திருவள்ளு்ர் மாவட்ட ஆட்சியர் 044 27661600 27661200
திருவாரு்ர் மாவட்ட ஆட்சியர் 04366 223344 221033
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 0461 2340600 2340606
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் 0431 2415358 2411929
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் 0462 2501222 2500224
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் 04175 233333 222148
வேலு}ர் மாவட்ட ஆட்சியர் 0416 2252345 2253034
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் 04146 222450 222470
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 04562 252525 252500
தொடர்புடைய இணைய இணைப்புகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இனையதளம்  http://www.tnsec.tn.nic.in/
மாநில தேர்தல் அலுவலர்கள்
மாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை  www.tnrd.gov.in
மாநில தேர்தல் அலுவலர் , ஆணையர்இ நகராட்சி நிர்வாகத்துறை
www.tn.gov.in/cma
மாநில தேர்தல் அலுவலர் , இயக்குநர்இ பேரூராட்சிகள் துறை
www.tn.gov.in/dtp

ஆதார்:' ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

'ஆதார்:' ரேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
'ஆதார் விபரம் பதிவு செய்ய வருவோரை அலைக்கழித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, உணவு மற்றும் கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கடைகள் மூலம், மக்களிடம் இருந்து, ஆதார் விபரம் பெறப்படுகிறது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் பதிய, கடைக்கு வருவோரிடம், 'கருவி வேலை செய்யவில்லை' எனக்கூறி, ஊழியர்கள் திருப்பி அனுப்புகின்றனர். சென்னையில், சேப்பாக்கம் உட்பட, 12 இடங்களில், கூட்டுறவு ரேஷன் ஊழியர்களுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை பயன்படுத்துவது குறித்து, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதில், சிலர் தீவிரமாக உள்ளனர்; அதற்கு, ரேஷன் ஊழியர்கள் துணை போகக்கூடாது. 'பாயின்ட் ஆப் சேல் கருவி' இயங்கவில்லை என்றால், உடனே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்; மாற்று கருவி வழங்கப்படும். ஆதார் பதிவுக்கு வருவோரை, திருப்பி அனுப்புவதாக புகார் வந்தால், ஊழியர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி தேர்வு எழுத தற்செயல் விடுப்பு எடுக்கலாம் RTI தகவல்👆

உயர்கல்வி தேர்வு எழுத தற்செயல் விடுப்பு எடுக்கலாம் RTI தகவல்👆



'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம் 

சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.


மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.
இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38
ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான். ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

Saturday, 24 September 2016

CRC Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​

CRC NEWS:​Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​


Thursday, 22 September 2016

YOUR AADHAAR CARD FAMILY DETAILS DOWNLOAD THIS TNEPSD APP.

This is new app to know your ration stock add YOUR AADHAAR CARD FAMILY
 DETAILS DOWNLOAD THIS TNEPSD APP.



அடிப்படை விதி 4 (3) ஐ பயன்படுத்தி ஊதிய முரண்பாட்டை தீர்க்கலாம்.*

அரசாணை.எண்..234 நிதித்துறை...நாள் 01-06-2009 ஆல் ஊதிய முரண்பாடு ஏற்பட்டால் அடிப்படை விதி 4 (3) ஐ பயன்படுத்தி ஊதிய முரண்பாட்டை தீர்க்கலாம்.* *சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு W.P.No.31084/2015*.  

CLICK HERE-IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 01.10.2015 CORAM THE HONOURABLE MR.JUSTICE M.SATHYANARAYANAN W.P.No.31084 of 2015

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும். காலை, 9:15 மணி முதல், 9:25 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களில், தேர்வு எழுதுவோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 9:30 மணி முதல், நண்பகல், 12:00 வரை தேர்வு நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்’கில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கொள்கை: ‘வாட்ஸ்அப்’ உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது டெல்லி ஐகோர்ட்டில் ‘வாட்ஸ்அப்’ விளக்கம்!!!

பேஸ்புக்’கில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கொள்கை: ‘வாட்ஸ்அப்’ உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாது டெல்லி ஐகோர்ட்டில் ‘வாட்ஸ்அப்’ விளக்கம்!!!
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ நிறுவனம், ‘வாட்ஸ்அப்’பை விலைக்கு வாங்கி உள்ளது. அதையடுத்து, கடந்த மாதம் 25–ந் தேதி, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. ‘வாட்ஸ்அப்’பில் அதன் 
உறுப்பினர்கள் வெளியிடும் தகவல்கள், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் என்பதே அந்த கொள்கை. இதை ஏற்காதவர்கள், செப்டம்பர் 25–ந் தேதிக்குள் அக்கொள்கையில் இருந்து விலகலாம் என்றும் வாட்ஸ்அப் அறிவித்தது.இதை எதிர்த்து, கர்மன்யா சிங் சரீன், ஸ்ரேயா சேத்தி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த கொள்கையால் தங்களது அந்தரங்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், எனவே, தகவல்களை பகிர்ந்து கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி இருந்தனர்.இந்த மனு, தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு ‘வாட்ஸ்அப்’ தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நாங்கள் பயன்படுத்தும் குறியீடுகளால், செய்தியை பெறுபவர் மட்டுமே அதை படிக்க முடியும். மூன்றாம் நபர் யாரும் படிக்க முடியாது. ஒருவர் தனது வாட்ஸ்அப் கணக்கை ரத்து செய்து விட்டால், அவரது ‘டெலிவரி’ செய்யப்படாத தகவல்களும் எங்கள் சர்வரில் இருந்து நீக்கப்பட்டு விடும்’ என்று கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா கூறியதாவது:–வாட்ஸ்அப்பின் புதிய கொள்கையால், உறுப்பினர்களின் அந்தரங்கத்துக்கு எவ்வித ஊறும் ஏற்படாது. அவர்கள் அனுப்பும் தகவல்களை மூன்றாம் நபர் யாரும் படிக்க முடியாது. இந்த கொள்கையை ஏற்க விரும்பாமல் விலகியவர்களின் எந்த தகவலும் பகிர்ந்து கொள்ளப்படாது. அவர்கள் வாட்ஸ்அப் கணக்கை ரத்து செய்துவிட்டால், அவர்களின் ‘டெலிவரி’ செய்யப்படாத தகவல்களை சர்வரில் இருந்து நீக்கி விடுவோம். எதையும் வைத்துக்கொள்ள மாட்டோம்.ஒருவர் அனுப்பும் தகவல், அதைப் பெறுபவருக்கு ‘டெலிவரி’ ஆனவுடன், அது நீக்கப்பட்டு விடும். ‘டெலிவரி’ ஆகாமல் இருந்தால், 30 நாட்கள்வரை சர்வரில் இருக்கும். அதன்பிறகும் ‘டெலிவரி’ ஆகாவிட்டால், நீக்கப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.அதையடுத்து, இவ்வழக்கில், நாளை (வெள்ளிக்கிழமை) உரிய உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி 
அலுவலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர். நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார். மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

* வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்
* கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
* மாணவர்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்
* காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

Thursday, September 22, 2016
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?
ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.

இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, 20 September 2016

10th quarterly key answers - 2016

10th quarterly key answers - 2016
10th quarterly key answers download

Maths key answers...

CLICK HERE..Maths key answers Download ......

MathsCLICK HERE... Key Answers Download.....

 English Answer key  Download... 

 CL8CK HERE.. English Paper - I Key Answer Download ....version - 1 (1 page)

 CLICK HERE..English Paper - I Key Answer Download ....version - 2 (4 pages)

 CLICK HERE..English paper - I key Answer Download (Chinnapparaj) Image result for new gif

 CLICK HERE..English paper - II  key Answer Download (Chinnapparaj)Image result for new gif

தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!

தனியார் பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கைகளுடன் பள்ளிகல்வித்துறை செயலர் நேரில் ஆஜர் ஆக – உயர்நீதிமன்ற உத்தரவு!
வசதிகள் இல்லாத தனியார் பள்ளிகள் – உயர்நீதிமன்ற உத்தரவு!

தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் போதிய நிலம் இல்லாத 746 பள்ளிகள் மீதான நடவடிக்கையைத் தீர்மானிக்க தமிழக அரசு அமைத்த குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர் பொதுநல மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தின் பல இடங்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் முறையான அனுமதியின்றி இயங்கி வருகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு தற்காலிக கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் 746 தனியார் பள்ளிகளுக்கும் மீண்டும் அனுமதி வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, 746 பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை முடிவு செய்ய தமிழக அரசு குழுவுக்கு, வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குவதாகக் கூறினார். மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதில் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளின் நிலை குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

*புதிய கல்விக்கொள்கை* ஓர் பார்வை.

*புதிய கல்விக்கொள்கை* ஓர் பார்வை.
1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.


4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.

5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.

6. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் பிற பள்ளிகளோடு இணைத்து கூட்டுப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

7. கோத்தாரி கமிசன் உருவாக்கிய அருகாமைப் பள்ளிக் கொள்கை கைவிடப்படுகிறது.

8. தேசிய அளவில் அறிவியல், கணிதம், மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம்.

9. சமூக அறிவியல் பாடத்தின் ஒருபகுதி மத்தியஅரசு வழிகாட்டுதலின் படியும் ஒருபகுதி மாநிலஅரசு வழிகாட்டுதலின் படியும் உருவாக்கப்படும்.

10. உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளில் அறிவியல், கணிதம்,ஆங்கிலம் ஆகியன பொதுப் பாடத்திட்டமாக கற்பிக்கப்படும்.

11. இப்பாடங்களில் பகுதி A, பகுதி B  என இரட்டைத் தேர்வுகள் நடத்தப் படும்.

12. கடினமான பகுதி A யில் வெற்றிபெற்றவர்கள் உயர்கல்வி படிப்புக்கும், இலகுவான பகுதி B  எழுதுவோர் தொழிற்கல்விக்கும் மடைமாற்றம் செய்யப்படுவர்.

13. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தகுதியைத் தரப்படுத்த தேசிய அளவில் தரத்தேர்வு நடத்தப்படும்.

14. கல்வி உதவித்தொகை சமூக நீதி முறையில் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

15. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் மெரிட் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

16. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி வழங்கப்படும்.

17. ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஹிந்தியும், உயர்நிலையில் சமஸ்கிருதமும் பயிற்றுவிக்க ஊக்குவிக்கப்படும்.

18. பள்ளியில் இருந்து விடுபட்ட குழந்தைகளுக்கும் உழைக்கும் குழந்தைகளுக்கும் திறந்தவெளி கல்விமுறை வழங்கப்படும்.

19. ஆசிரியர்களின் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு மூலம் சோதிக்கப்படும்.

20. ஆசிரியர்களைக்  கண்காணிக்க ஊராட்சி அளவில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

21. பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்படும்.

22. இந்தியப் பாரம்பரியம் கலாசாரம் அடிப்படையில் நன்னெறிக் கல்வி கொடுக்கப்படும்.

23. திறமையாகச் செயல்படும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நேரடியாக நியமிக்கப் படுவார்கள்.

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!

7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு.. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு..!
7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாகும்.
இது நாம் இந்த கிராஜுவிட்டி மூலம் பெற இருக்கும் தொகையை எங்கு முதலீடு செய்து என்பதைப் பார்க்கும் முன்பு கிராஜுவிட்டி என்றால் என்ன? என்று பார்ப்போம்.

கிராஜுவிட்டி என்றால் ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் அந்நிறுவனத்தால் பணி ஓய்வின் போது அளிப்பதாகும்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஏதேனும் காரணங்களுக்காக பணி ஓய்வு பெறலாம். அப்போது அந்த ஊழியர் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாகப் பணி புரிந்திருந்தால் வருமான வரி சட்டத்தின் படி நிறுவனம் கிராஜுவிட்டி அளிக்க வேண்டும்.
அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது ஊழியர்களுக்கு அவரின் பணியை பாராட்டும் விதமாக ஒரு ஒட்டுமொத்த தொகையை கிராஜூவிட்டியாக வழங்கப்படும்.
இதுவரை பணி செய்த மொத்த ஆண்டிற்கும் அரை மாத ஊதியம் விதம் எனக் குறைந்தபட்சம் இரண்டரை மாத ஊதியம் முதல் அதிகபட்சமாக பதினாறரை மாத ஊதியம் கிராஜுவிட்டியாக வழங்கப்படும்.
இந்த கிராஜுவிட்டி தொகையின் அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் என்று இருந்தது. இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி 20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியில் சேர்ந்த ஓர் ஆண்டில் காலமான ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச பணிக்காலம் கணக்கிடப்படாமல் இரண்டு மாத சம்பளமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டிற்குள் இறந்தால் 6 மாத சம்பளமும், 5 முதல் 20 ஆண்டு பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளமும், 20 வருடத்திற்கும் மேலாகப் பணியில் இருந்த ஊழியர்களுக்கு ஆண்டுக்கு அரை மாத சம்பளமும் கணக்கிடப்பட்டு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.
இப்போது 7வது சம்பள கமிஷனின் பரிந்துறைப்படி தொழிலாளர் கிராஜுவிட்டி ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ள நிலையில் இந்தத் தொகையை எப்படி முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் பெறலாம் என்பதை நாம் இங்குப் பார்ப்போம்

Sunday, 18 September 2016

: ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி? 'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி? 'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. 

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை.

இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'
என்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி   

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.


எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.கடந்த, 2011 மற்றும், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; எனவே, அதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி 
சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர்,இரு தினங்களுக்கு முன், ஒன்பது அரசு ஊழியர் சங்கங்கள்,ஆசிரியர் சங்கங்களை சந்தித்து பேசினர். நேற்று முன்தினம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் உட்பட, ஒன்பது சங்கங்களின் நிர்வாகிகள், குழுவினரை சந்தித்து பேசினர்.

அனைத்து தரப்பினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அரசு குழுவினர், 'புதிய திட்டத்தில், மாற்றங்கள் செய்தால் போதாதா?' என கேட்டுள்ளனர்; அரசின் நிதி நெருக்கடியை எடுத்துரைத்துள்ளனர்.இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டு உள்ளது. அரசு குழுவினர், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசாமல், புதிய திட்டத்தின் 
அம்சங்களையே பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.  

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். தலைவர்  கு.தியகராஜன் பேசும்போது.

புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து  பழைய ஓய்வூதியம் வழங்வேண்டும் 
சி.பி.எஸ்...ல குறை,நிறை செய்வதை தவிர்த்து  பழைய ஓய்வூதியத்திட்டத்தையே தொடரவேண்டும் என்றும்  இதனால் அரசுக்கும் சாதகம் அரசு ஊழியர்களுக்கும் நன்மை என 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். தலைவர்  கு.தியகராஜன் வலியுறுத்தி பேசினார். 

கணேசன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்: 

அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர், 'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.

பி.இளங்கோவன், ஒருங்கிணைப்பாளர், 'ஜேக்டோ' கூட்டுக் குழு: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில், 
எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது. 
'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.

எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்: 

தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசித்தல் திறன் மேம்பாடு பயிற்சி கட்டகம்...

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வாசித்தல் திறன் மேம்பாடு பயிற்சி கட்டகம்...


CLICK HERE ... DOWNLOADAD TAMIL READING TOOL .......

Saturday, 17 September 2016

ஜாக்டோ பொருப்பாளர்களே மற்றும் அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே!* *விழித்திடுங்கள்..*

*ஜாக்டோ பொருப்பாளர்களே
 மற்றும் அன்பார்ந்த ஆசிரிய நண்பர்களே!* *விழித்திடுங்கள்..*

 *கடந்த 5 ஆண்டு போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத அ.தி.மு.க ஆட்சி* மீண்டும் ஆட்சி அமைந்துவிட்டது.
 *ஜாக்டோ அமைப்பு ஆரம்பத்தில் பீனிக்ஸ் பறவைபோல் வீரு கொண்டு*
 கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் செய்த்து. சி.பி.எஸ் யை உள்ளடக்கிய ஆசிரியர்களின் கோரிக்கையை தாங்கி போராடியது. 

 மாணவர்கள் நலன் கருதியும், மக்கள் நலன் மற்றும் தேர்தல் கருத்தில் கொண்டும் *போராட்டம் 3 மாதங்களுக்கு தள்ளி வைத்தது.* மீண்டும் புதிய ஆட்சி அமைந்த்தும் ஆக்ஸ்ட் மாதத்தில் மீண்டும் போராட்டம் நடத்தலாம் என நம் அமைப்பு கூறியது.
 *ஆனால் ஜாக்டோ பொறுப்பாளர்கள் இது வரை எந்த ஒரு அறிவிப்பும் கூறவில்லை*. இதுவரை கூடியம் பேசவில்லை.

*வல்லுநர் குழு என்பது ஒரு கண்துடைப்பை அரசு நமது போராட்டத்தின் வீரியம் குறிப்பதாகும்* ஆசிரியர்கள் உணர்வை புரிந்து சிபிஎஸ்..ஐ ஒழிக்க மீண்டும் போராடத்தான் வேண்டும். *வல்லுநர் குழு சிபிஎஸ்..ஐ ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை இல்லை* அதில் உள்ள குறைகளை மட்டும் கூறுங்கள் என்றால் அரசு கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னாச்சு..அப்ப..சிபிஎஸ்..ஐ ஒழிப்பதற்கான சாத்தியக்கூறு அரசிடம் இல்லை என்பதாகும். *எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஜாக்டோவை கூட்டி சிபிஎஸ்..ஐ ஒழிப்பதற்கான* வழிகளை ஆராய்ந்து சரியான திட்டமிட்டு விரைவாக *போராட்டத்தை மீண்டும் நடத்த ஜாக்டோ பொறுப்பாளர்கள்* விழிப்புடன் செயல்பட அன்போடு ஆசிரிர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*

 அனைத்து சங்கத்தின் கொள்கை வேறு வேறாக இருந்தாலும் அனைத்தும் ஆசிரியர்கள் நலம் ஒன்றேதான். *சி.பி.எஸ்-யை ஒழிக்க வேண்டும்* என்று மாநில முதல் மத்திய அரசு வரையில் உள்ள பல சங்கங்கள் போராடியது. அனால் தொடர்ந்து போராரவில்லை. 

 *சி.பி.எஸ்ஐ ஒழிக்க அனைவரும் பலமான போராட்டம் செய்ய தயாராக வேண்டும்.*  போராட்டம் என்பது வாழ்கை, போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை இதுவரை பெற்ற அனைத்தும் போராட்டத்தினால் கிடைத்தவையே. நமக்கு நாமே போராடவேண்டும். 
*எனவே ஜாக்டோ பொருப்பாளர்களே மற்றும் ஆசிரிய நண்பர்களே போராட்டதை திட்டமிட்டு விரைவாக அறிவிக்க வேண்டும்.*
ஒன்றினைந்து போராட  ஆசிரியர்கள்  தயாராக இருக்க வேண்டும்.
 ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்.

*அன்புடன்: மு.சிவக்குமார். ப.ஆ*
ஆல் டீச்சர்ஸ் டிஎன்.

IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016* FIRST & SECOND YEAR

*IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016*

FIRST & SECOND YEAR

.
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364

ALL TRS TN... Siva

பள்ளிகளில் ஊராட்சி தலைவர்கள் ( உள்ளாட்சி பிரதிநிதிகள் )அதிகாரம் பறிப்பு !

பள்ளிகளில் ஊராட்சி தலைவர்கள் ( உள்ளாட்சி பிரதிநிதிகள் )அதிகாரம் பறிப்பு !


Friday, 16 September 2016

CLASS - 3 & 4 FIRST TERM ENGLISH & TAMIL MEDIUM QUESTION PAPER.

CLASS - 3 & 4 FIRST TERM ENGLISH MEDIUM QUESTION PAPER.  

CLICK HERE..3 & 4 FIRST TERM ENGLISH MEDIUM QUESTION PAPER..  

CLICK HERE...3 & 4 TAMIL MEDIUM QUESTION PAPERS..

CLASS 1 & 2 FIRST TERM ENGLISH & TAMIL MEDIUM QUESTION PAPERS..

CLASS 1 & 2 FIRST TERM ENGLISH MEDIUM QUESTION PAPERS.. 

CLICK HERE..,   CLASS 1 & 2 FIRST TERM ENGLISH MEDIUM QUESTION PAPERS..

 CLICK HERE...CLASS 1 & 2 FIRST TERM TAMIL MEDIUM QUESTION PAPERS..

மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு !

மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு !
இன்று சனி (17-09-2016) பள்ளி வேலை நாள்.*

*முதல்பருவத் தேர்வுகள்*

*19 (திங்கள்) தமிழ்,*
*20 (செவ்வாய்)* *ஆங்கிலம்,*
*21 (புதன்) கணிதம்,*
*22 (வியாழன்) அறிவியல்,*
*23 (வெள்ளி) சமூக அறிவியல்.*

*24-09-2016 முதல் 02-10-2016 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை.*


*08-10-2016 (சனி) விடுமுறை,*
*09-10-2016 (ஞாயிறு) விடுமுறை,*
*10-10-2016 (திங்கள்) ஆயுத பூஜை விடுமுறை,*
*11-10-2016 (செவ்வாய்) விஜயதசமி விடுமுறை,*
*12-10-2016 (புதன்) மொகரம் விடுமுறை.*

*15-10-2016 (சனி) விடுமுறை,*
*22-10-2016 (சனி) விடுமுறை,*
*29-10-2016 (சனி) தீபாவளி விடுமுறை,*
*28-10-2016 வெள்ளி அன்று பட்டியலின் படி வேலை நாள். ஆனால் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைத்து விடுமுறையை எதிர்பார்க்கலாம்.*

*இந்த விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலில் உள்ளவை.*

தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !

தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு !
தமிழகத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களை பிரித்து ஜமீன் கயத்தார் உட்பட 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

           இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் 
உருவாக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் பிரித்து ஜமீன் கயத்தார், காட்டுமன்னார்கோயில் பிரித்து ஸ்ரீமுஷ்ணம், திருப்பத்தூர் பிரித்து சிங்கம்புணரி, உடையார்பாளையம் பிரித்து ஆண்டிமடம், நீடாமங்கலம் பிரித்து கூத்தாநல்லூர் ஆகிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதல் பருவ மாதிரி வினாத்தாள் 4 & 5-ஆம் வகுப்பு அணைத்து பாடங்கள்...

முதல் பருவ மாதிரி வினாத்தாள்  வினாத்தாள் 4-ஆம் வகுப்பு & 5-ஆம் வகுப்பு அணைத்து பாடங்கள்...  

CLICK HERE...TO DOWNLOAD TERM - I QUESTION PAPER FOR STD V - TAMIL MEDIUM  

CLICK HERE... TO DOWNLOAD TERM - I QUESTION PAPER FOR STD IV - TAMIL MEDIUM

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல் 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்பட கிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

Thursday, 15 September 2016

புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்வேண்டும் CPS வல்லுநர் குழுவிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக எடுத்து வைத்த கோரிக்கைகள்

நேற்று சென்னையில்  நடைபெற்ற CPS வல்லுநர் குழுவிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக எடுத்து வைத்த கோரிக்கைகள்


புதிய ஓய்வூதியம் முற்றிலும் ஒழித்து  பழைய ஓய்வூதியம் 
வழங்வேண்டும் 

1. GPF சந்தாதாரார் போல் CPS சந்தாதாராரும் எத்தனை முறை வேண்டுமானாலும் லோன் எடுக்கும் வசதி வேண்டும்.
2. 10 சதவீத்திற்கு மேல் CPS சந்தாதாரார் விரும்பும் தொகையை செலுத்தும் வசதி வேண்டும்.
3. ஊதியக்குழு மற்றியமைக்கும் போதும் அகவிலைப்படி உயார்த்தும் போதும் ஓயவூதியம் மாற்றியமைக்க வேண்டும்.
4. அரசு ஊழியார் இறந்தாலோ அல்லது ஓய்வு ஊதியதாரர் இறந்தாலோ குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
5. CPS சந்தா தொகையை பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யக்கூடாது.
6.உயர் மட்ட குழுவில் சி.பி.எஸ்..ல் உள்ள உறுப்பினர் திரு.கு.தியாகராஜன் அவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

     இவற்றையெல்லாம் செய்வதை விட பழைய ஓய்வூதியத்திட்டத்தையே தொடரவேண்டும் என்றும்  இதனால் அரசுக்கும் சாதகம் அரசு ஊழியர்களுக்கும் நன்மை என ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களிலேயே CPS உள்ள தலைவர்  கு.தியகராஜன் வலியுறுத்தி பேசினார். தலைவர்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்.**மாநிலத் தலைமையின் அறிவிப்பு*


 *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்.**மாநிலத் தலைமையின் அறிவிப்பு*
◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼
*கர்நாடக அரசின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து* 
*16/9/2016 அன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் கூட்டுநடவடிக்கையின் சார்பில் நடத்தப்படவுள்ளன*
 *மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு* *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கம்*தன் முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.*

*தேர்வு காலம் என்பதால்**மாணவ-மாணவிகளின்**கல்வி நலன் கருதி*
 *தமிழ்நாடு ஆசிரியர்**முன்னேற்ற சங்கத்தின் செயல்வீரர்கள்*
 *வேலைநிறுத்தத்திற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும்*
*கர்நாடக மாநிலத்தில் நிகழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை சம்பங்களுக்கு கடுங்கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும்* 
*TAMS மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய பொறுப்பாளர்கள்**சங்கத்தின் வேர்களான* *உறுப்பினர் பெருமக்கள்*
*அனைவரும்* *கருப்புநிற உடை அணிந்தோ* *அல்லது**கருப்பு அடையாளக்குறி (BLACK BADGE) குத்திக்கொண்டோ* 
*வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவையும்*கர்நாடக அரசுக்கு*    *கண்டனத்தையும்* *தெரிவிக்க வேண்டும் என அனைவரையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்*.

இவண்

   *கு.தியாகராஜன், *மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

செய்தி. 
 ALL TRS TN.. Siva.

: 1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.
சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:-
சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்றுஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள்கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

         தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார். 
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 
வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!

தமிழகத்தில் இன்று பள்ளிகள் செயல்படும் : பள்ளி கல்வித்துறை 


சென்னை: காவரி நீர் பிரச்னைக்காக தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படஉள்ளது. இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போரட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும், திட்டமிட்ட படி காலாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு:அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாருடன் இணைந்து மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் நாளை கல்லூரிகள் இயங்கும்:தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லூரிகளுக்கு உரிய பாதுகாப்புவழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

Tuesday, 13 September 2016

அண்ணா பல்கலையில் 'மெகா கேம்பஸ்' ! வேலை வாய்ப்பு முகாம்

மெகா கேம்பஸ்' !
அண்ணா பல்கலையின், சென்னை வளாகத்தில் உள்ள, மூன்று இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இம்மாத இறுதி வாரத்தில், 'மெகா கேம்பஸ்' வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை சார்பில், இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு, மூன்று வகை கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம் 
நடத்தப்படும். இதில், முதல் கட்ட முகாமில், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், தினசரி நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது; பல்வேறு தனியார் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து, இம்மூன்று கல்லுாரி மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் கட்டமாக, மெகா கேம்பஸ் வேலை வாய்ப்பு முகாம், இம்மாதம் இறுதி வாரத்தில் நடக்கிறது; இதுகுறித்து, இரு தினங்களுக்கு முன், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும், மூன்று கல்லுாரிகளை சேர்ந்த, இறுதியாண்டு மாணவர்கள் மட்டும், நாளைக்குள் அந்தந்த கல்லுாரி வழியாக, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆன்லைன் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பின் வேலை அளிக்கப்படும். இந்த முகாமில், இன்போசிஸ், காக்னிசென்ட், டி.சி.எஸ்., ஆகிய, மூன்று நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கின்றன. இதற்கிடையில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, பல்வேறு தனியார் கல்லுாரி மாணவர்களுக்கான, வேலை வாய்ப்பு முகாம், ஏழாவது பருவ தேர்வு முடிந்ததும், நவம்பர் இறுதி வாரத்தில் நடத்தப்படும்; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அந்தந்த தனியார் இன்ஜி., கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தனியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி கொள்ளலாம் என்றும், அண்ணா பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை !

ரூ.1,000 கோடி இழப்பீடு: மத்திய அரசுக்கு கோரிக்கை ! 

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாயை, கர்நாடகா வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க வேண்டும்' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சேலத்தில் நேற்று, சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி, தனராஜ் கூறியதாவது:



தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, செப்., 5 முதல், கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம், ஒரே நாளில் மட்டும், 60க்கும் மேற்பட்ட லாரிகளும், 50க்கும் மேற்பட்ட பஸ்களும், 100க்கும் மேற்பட்ட பிற தமிழக வாகனங்களும், வன்முறை கும்பலால் எரிக்கப்பட்டுள்ளன.



பொருட்கள் நாசம் : லாரிகளில் இருந்த பொருட்கள் சாம்பலாகி விட்டன. இன்சூரன்ஸ் மூலம், மிக குறைவான தொகையே கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக உழைத்து சேர்த்த சொத்தை, வன்முறை கும்பல் அழித்து விட்டது. கர்நாடகாவில், வன்முறையை அரசும், போலீசும் வேடிக்கை பார்த்து உள்ளது. கர்நாடகாவில், பஸ்கள், லாரிகள் மட்டுமின்றி, தமிழர்களின் பொருட்கள், உடமைகள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுஉள்ளன.



நிவாரண தொகை : இந்த பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும். வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் ஏற்படும் போது, நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

அதேபோல், கர்நாடகா கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள, லாரி, பஸ், வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு முழு நிவாரண தொகை வழங்க, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். கர்நாடகாவில் இதே நிலை தொடரும் பட்சத்தில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், பிற மாநில லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பிற மாநில லாரிகளின் இயக்கத்தையும் நிறுத்துவோம்.கர்நாடகா அரசு, கலவரத்தை தடுத்து நிறுத்தாத பட்சத்தில், அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



இன்று போராட்டம் : தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் முருகன் கூறியதாவது:கர்நாடகாவில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். கர்நாடகாவில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள அத்திப்பள்ளியில், இன்று, காலை, 10:00 மணிக்கு, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், மறியல் போராட்டம் நடக்கிறது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, 12 September 2016

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள்

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் 

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 

அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி
அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு
மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக்  கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும்  துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்  போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார். 

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம் 


புதுடில்லி : பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.


நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 8.8 சதவீத வட்டி வழங்க, பி.எப்., அமைப்பு முன் வந்தது; ஆனால், 8.7 சதவீதமாக அதை, நிதி அமைச்சகம் குறைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 8.8 சதவீத வட்டி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான, வட்டி விகிதம் குறித்து தற்போது ஆலோசனை நடக்கிறது. மற்ற சிறு சேமிப்புகளுக்கு இணையாக, பி.எப்., வட்டி விகிதமும் இருக்க வேண்டும் என, நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.அதன்படி, 'நடப்பு நிதியாண்டிற்கு, 8.6 சதவீத வட்டி வழங்கலாம்' என, பி.எப்., அமைப்பும், நிதி அமைச்சகமும் இறுதி செய்துள்ளதாக, நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு

தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு 


ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவர். அந்தந்த பள்ளிகளுக்கான ஆய்வு தேதிகளை, அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்து விடுவதால், பள்ளிகளில் தயார் நிலையில் இருப்பர். 'இந்த ஆண்டு, முன் அறிவிப்பின்றி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்' என, தொடக்கப் பள்ளி இயக்குனர் இளங்கோவன்

உத்தரவிட்டுள்ளார்.உதவி தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளான, ஏ.இ.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., குழுவினர், புகார் வரும் பள்ளிகளிலும், மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளிலும் திடீர் ஆய்வு நடத்தவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.பல மாவட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளின் மோசமான செயல்பாடுகளே, கல்வித்தரம் உயராததற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ளது

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு.


ஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Army Public School (AWES APS)

பணியிடம்: இந்தியா முழுவதும்.

மொத்த காலியிடங்கள்: 8,000

பணி: PGT TGT PRT

ஆசிரியர்தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2016 தேதயின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2016

தேர்வு நடைறும் தேதி 2016 நவம்பர் 26 மற்றும் 26 தேதிகளில்தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 15.12.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines_for_candidates.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு ! 

 புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

       இதுதொடர்பாக, புதுச்சேரி அரசு ஊழியர்கள், மத்திய உள்துறைக்கு புகார்கள் அனுப்பியுள்ளார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி மத்திய உள்துறை  அமைச்சகத்திலிருந்து, துணைநிலை ஆளுநருக்கும், தலைமைச்
செயலருக்கும் கடுமையான கண்டிப்புடன் போன்கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர், முதல்வர் நாராயணசாமியை அவசரமாக அழைத்து கலந்து பேசினார். இதையடுத்து, இரவோடு இரவாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தினார் முதல்வர்.

அதைத் தொடர்ந்து, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துவது சம்பந்தமாக, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தில், ‘ஏழாவது ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அந்த தகவல்களைத் தலைமைச் செயலரும், துணைநிலை ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். ‘மத்திய அரசு நேரடியாக தலையீட்டு கண்டிப்பு செய்தது இதுதான் முதன்முறை’ என்கிறார்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள்.

இந்தியாவின் தங்க மகனை வாழ்த்துவோம்.... தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தமிழனை பாராட்டுவோம் .

இந்தியாவின் தங்க மகனை வாழ்த்துவோம்....  தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்த தமிழனை பாராட்டுவோம் ...தங்க மகன் கடந்து வந்த பாதை ...


#நம்ம_சேலத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்தான் மாரியப்பன். அப்போது அவன் வயது ஐந்து. அந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. ‘டிரைவர் குடிபோதையில்
இருந்ததாக சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன். மகனின் கால் போய் விட்டதே’ என்று சொல்லும் மாரியப்பனின் தாய் காய்கறி விற்றுப் பிழைப்பவர். மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.
கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். ‘ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர்’ என்று சொல்லும் அந்த இளைஞனின் வயது 20.
2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனை சார்ஜ் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்தார். இன்று தங்கப்பதக்கத்துடன் நாட்டையே பெருமைப்பட வைத்து விட்டார். இவர் AVS கல்லூரியில் BBA படித்து வருகிறார்.
தமிழ் நாட்டுக்கு பெருமை 🇮🇳

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை கோரும் படிவம்

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை கோரும் படிவம்


புதிய ஓய்வூதியம் (சி.பி.எஸ்) ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்.

புதிய ஓய்வூதியம் (சி.பி.எஸ்) ஒழித்து பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்.


Sunday, 11 September 2016

அறிந்து #கொள்வோம்...ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !

#அறிந்து #கொள்வோம்...ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in

2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* 
SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*

3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். 
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். 
ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.

5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* 
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*
விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். 
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை 


இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

சிறப்பு சேம நலநிதி பற்றிய சிறு விவரம்(SPF) ,!

சிறப்பு சேம நலநிதி பற்றிய சிறு விவரம்(SPF) ,! 

01.10.2000 மற்றும்  அதற்கு பின் அரசுப் பணியில் பணிபுரியும் பணியாளர்கள்  (SPF-2000) ரூ: 70/-வீதம் கட்டாயம் பிடித்தம் செய்யப்படவேண்டும். (20+50 என பிரித்து பிடிக்கக்கூடாது)



30.09.2000 மற்றும் அதற்கு முன் பணிபுரிபவர்கள் (SPF-1984) ரூ: 20/- வீதம் 148 தவணை கட்டாயம் பிடிக்கப்படவேண்டும். விரும்புவோர் (SPF-2000) ரூ: 50/- வீதம் 01.10.2000 முதல் பிடிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பு !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்பட திருத்தங்களைச் செய்வதற்கு வாய்ப்பு !
11–ந் தேதி (இன்று ) மற்றும் 25–ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

படிவங்களை பெறலாம்

இதுகுறித்து ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


1.1.17 அன்றைய தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11.9.16 மற்றும் 25.9.16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் (பொதுவாக பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடம் மாற்றலுக்கான படிவங்களை பெறுவதற்காக இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.

காலை 10 மணி முதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இம்முகாம்கள் 18.9.16 மற்றும் 25.9.16 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலும் அலுவலர்கள் 11.9.16 மற்றும் 25.9.16 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்வர்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, 10 September 2016

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை! 

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

அக்டோபர் 2ல், காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது

அக்டோபர் 2ல், காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது

நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று முதல் பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளது. பிளாஸ்டிக்கால் நாள்தோறும் அதிகரித்து வரும் தீமைகளை சொல்லி மாளாது. சுற்றுச்சூழல் கெட்டு மனிதர்கள் மட்டுமின்றி, வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பாலிதீன் குப்பைகளால் பூமிக்குள் நீர் இறங்காமல் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனவே பாலிதீன் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. 

இருந்த போதிலும் பாலிதீன் பைகள் பயன்பாடு காரணமாக சுற்றுலா தலங்கள் பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகளும் அவற்றை உணவு பொருட்களுடன் சாப்பிடுவதன் மூலம் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பாலிதீன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘‘தேசிய நினைவு சின்னங்கள், அனைத்து சுற்றுலாத்தலங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவற்றில் முழுமையாக பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. 

சுற்றுலாத்தலங்களில் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் கொண்டு செல்ல மட்டும் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும். இதை தவிர  சுற்றுலாத்தலங்களில் எந்தவித பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்கள், பைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி முற்றிலுமாக மறுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு எழுந்துள்ளது.