Powered By Blogger

Monday, 18 November 2019

EMIS ல் Time Table copy செய்வது எவ்வாறு என்பதை விளக்கம்

EMIS ல் வார வாரம் TIME TABLE. UPDATE செய்துவிடீர்களா!!!
*இன்று 18-11-2019 EMIS ல் SCHOOL தலைப்பிற்கு சென்று ,TIME TABLE TOUCH செய்து உட்பிரிவில் முதலில் உள்ள COPY TIME TABLE TOUCH செய்து, OPTION 1 ல் வகுப்புகளுக்கு நேராக உள்ள ASSIGN MASTER TIME TABLE TOUCH செய்த பிறகு, VIEW CLASS TIME TABLE ல் சென்று CLASS   WISE  CHECK செய்து, இந்த வாரம் TIME TABLE உருவாக்கி விட்டீர்களா என பாருங்களேன்ஆசிரியர் நண்பர்களே!!!*

*REFERENCE காணொளி* 👇

https://youtu.be/48gV96tUwrs

Siva tams Ldr tpt, vellore

Saturday, 19 October 2019

தேர்வு நிலை, சிறப்பு நிலை, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் குறித்து புதிய அறிவுரைகள்

தேர்வு நிலை, சிறப்பு நிலை, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் குறித்து புதிய அறிவுரைகள் - DEO Proceedings 18-10-2019.



மு. சிவக்குமார் தலைவர் திருப்த்தூர் ஒன்றியம்

Thursday, 17 October 2019

பயோமெட்ரிக் வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்

பயோமெட்ரிக் வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்



மொபைலில்  பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை
நாளைய மாற்றத்துடன்
Step 1
1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்
2.Play Store -ல் mantra management Client
App டவுண்லோடு செய்து நிறுவவும்

பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்
அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App ஐ டவுண்லோடு செய்து install செய்யவும்

பின் Device ஐ இணைத்து Activation Code கொடுத்து கை ரேகையைப் பதிவிடவும்

guide Video
நாளைய மாற்றத்துடன்
https://youtu.be/f4tj2G8fiDY

இது போன்ற செய்திகளுக்கு இணைந்திடுகள்

மு.சிவக்குமார், ப.ஆ
Tams Ldr tpt blk

NMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம்

NMMS இணையதளத்தில் 21 .10 .2010 முதல் 31.10. 2019 பதிவேற்றம் செய்யலாம் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்





By Siva tams Ldr tpt
NMMS GRP Tirupattur




Wednesday, 16 October 2019

2019-20 NMMS செய்தி* தேசிய திறனாய்வு பதிவேற்றம் செய்வது குறித்து ஒரு சிறு விளக்கம்

NMMS செய்தி* தேசிய திறனாய்வு பதிவேற்றம் செய்வது குறித்து ஒரு சிறு விளக்கம்

*NMMS செய்தி*
www.alltrstnsiva.blogspot.in

தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஆன்லைன் பதிவேற்றம் ஓபன் செய்யப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2019 20 ஆண்டுகால மாணவர்களுடைய Emis விவரங்கள் அப்டேட் செய்யப்படவில்லை. தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை No Available என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஒவ்வொரு விவரமும் நாம் டைப் செய்து நமினல் ரோல் பதிவேற்றம் செய்யலாம். Emis அப்டேட் செய்யப்பட்ட பிறகு அவருடைய Emis நம்பர் ஐ கிளிக் செய்தால் அவருடைய மொத்த விவரங்கள் online அப்ளிகேஷனில் தெரியும் வேலை சுலபமாக முடியும் என்பதால் Emis அப்டேட் செய்யும்போது நாம் செய்தால் வேலை குறைவு ஓரிரு நாட்களில் Update செய்து விடுவார்கள். மேலும் print எடுக்கும் போது Emis காலத்தில் Blank காக காட்டும் என்பதால் Emis Update செய்தால் பிறகு Online ல் பதிவேற்றம் செய்யலாம்.

குறிப்பு.
Emis update செய்யவில்லை என்றாலும் தேர்வர்களுக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் இதனால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது. கண்டிப்பாக ஆல் டிக்கெட் பிரின்ட் ஆகும். Emis காலத்தில் வெறுமனே இருக்கும் அவ்வளவுதான் இதற்காக யாரும் கவலைப்படத் தேவையில்லை.

 என்றும் நட்புடன்

மு. சிவக்குமார் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
 திருப்பத்தூர் வட்டம்
வேலூர் மாவட்டம்

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இம்மாத இறுதியில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) செயல்பட்டு வருகிறது. இக்கவுன்சில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்ட புத்தகங்களை விநியோகித்து வருகிறது. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட உள்ள நிலையில், அதன் அடிப்படையில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக என்சிஇஆர்டி இயக்குநர் ஹிருஷிகேஷ் சேனாபதி கூறுகையில், ''தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 1975, 1988, 2000, 2005ல் மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 5வது முறையாக பாடத்திட்டத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்படுவதற்காக காத்திருக்கிறோம். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். இதற்கான குழு இம்மாத இறுதியில் அமைக்க  உள்ளது

ஆசிரியர்களுக்கு 2019 விருதுகளும், பாராட்டுப் பத்திரங்கள் என்பது *விழுப்புண்களும்... துரோக விருதுகளும்...!* ஆசிரியரின் குரல்

* வே. அண்ணாதுரை,*
மாநில துணைச் செயலாளர் மற்றும்
மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

# *விழுப்புண்களும்... துரோக விருதுகளும்...!*

# அரசு, தனியார் உட்பட பல்வேறு சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கு விருதுகளும்,  பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன...!
இது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் சிறப்பான பணியினை ஊக்கப்படுத்துவதாகவும், மேலும் பணி சிறக்க உதவும் வகையிலும் அமைகிறது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.
# ஆனால்...
ஜனவரி 2019 ல் ஜாக்டோ-ஜியோ தமது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது...
வெற்றிகரமாக தொடங்கிய போராட்டம் பல்வேறு காரணங்களால் பின்னடைவை சந்தித்தது. பின்னடைவிற்கு முக்கிய காரணமும் நாம் தான்...
மேலும் ஒரு ஊதிய உயர்விற்காக அளவுக்கதிகமாக விசுவாசம் காட்டிய சில வட்டாரக்கல்வி அலுவலர்களும்...
# போகட்டும்... போராட்ட முடிவுவெறும் பின்னடைவோடு போயிருந்தால் நாம் யாரும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது போல் நடந்தவை எதுவுமே நினைவில் இல்லாமல் அவரவர் வேலையை கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே அது போல் கடந்து போய் விடலாம்...
ஆனால்... ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிறைச்சாலைகளில் அடைபட்டும்... வேதனைபட்டும்... அவர்களது குடும்பங்கள் சொல்லொணா துயரப்பட்டும்... மேலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 17A,17B பெற்றும் இன்றளவும் அதனாலான பாதிப்புகளில் இருந்து மீளாமல் பெரும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.
# ஆனால்... இதனைப் பற்றி துளி கூட கவலையோ, அக்கறையோ, நன்றி உணர்வோ இல்லாமல் ஆசிரியர்கள் சுயநலமாய் செயல்படுவது மிகுந்த வெட்கத்துக்குரிய மற்றும் கவலைக்குரிய செயலாகும்.
# இதன் உச்சக்கட்டமாக, பாதிக்கப்பட்ட ஆசிரியரின் பணியிடத்தையே குறிபார்த்த குள்ள நரிகள் கூட்டத்தையும் நாம் சந்திக்க வேண்டிய அவலம் கூட நேர்ந்தது.
# அது மட்டுமல்லாமல், அரசு மற்றும் தனியார்கள் வழங்கும் விருதுகளுக்காகவும், பாராட்டுப் பத்திரங்களுக்காகவும், தற்பெருமைக்காவும், வீண் புகழுக்காகவும் ஆசிரியர்கள் அலறித் துடித்து பறப்பது சொல்லொணா துயரத்தை உண்டாக்குகிறது.
# சிறைச்சாலை சென்று மீண்டவர்கள்,17A, 17B வாங்கி இன்றளவும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யாரும் அவர்களது சொந்த ப்ரச்னைக்காகவோ, தங்களது சுயதலத்திற்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ இந்த தண்டனைகளை பெறவில்லை. நமது ஆசிரியர் சமுதாயத்திற்காக இந்த தண்டனை முள் கிரீடத்தை ஏற்றுள்ளனர்.
# ஆனால், இது குறித்த உணர்வோ, அக்கறையோ, துளியும் பொறுப்புணர்வோ இல்லாமல் கலந்தாய்வுக்காக கவலைப்படுவதும், பாதிக்கப்பட்ட சகோதரனின் பணியிடங்களை பறிக்கப் பார்ப்பதுமாக துரோக வேலை அவர்கள் நெஞ்சில் பாய்ச்சுகின்றனர்.
# மேலும், அரசு மற்றும் தனியார் வழங்கும் விருதுகளுக்காகவும், பாராட்டுப் பத்திரங்களுக்காவும் வரிசை கட்டி நிற்பதும், கை கட்டி நின்று கெஞ்சுவதும் அதனை பெருமையாய் விளம்பரபடுத்துவதுமாய் எத்தனை தம்பட்டம், எத்தனை எத்தனை சுயநலம்?
இதயம் கனக்கிறது...! வலிக்கிறது...!
# உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த போராட்டத்தில் சிறைச்சாலை சென்றவர்கள், 17A, 17B பெற்றவர்கள் இனி எப்போதும் விருது பெற முடியாது என்பது...! நமக்காக, முகமறியா சகோதர, சகோதரிகளுக்காக, ஆசரிய சமுதாயத்திற்காக போராடி, பாதிக்கப்பட்டு நிற்பவரும், அவரது குடும்பத்தினரும் நமது கண்முன் தெரியவில்லை என்றால் கண்ணிருந்தும் நாம் குருடர்கள் தான்... காதிருந்தும் செவிடர்கள் தான்...!
# அவர்களுக்காக, அவர்களது தியாகத்திற்காக ஒரு தடவை மட்டும், கொஞ்ச காலம் அதாவது அவர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும் வரையிலாவது இந்த விருதுகளை உங்களால் புறக்கணித்திருக்க முடியாதா?
எனது சகோதரர்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அரசோ, தனியாரோ வழங்கும் எந்த விருதையும் ஏற்க மாட்டோம் என ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் ஒரு குரலில் புறக்கணித்திருந்தால் நமது ஒற்றுமையும், உணர்வும் ஒரு துளியாவது அரசாங்கத்திற்கு உரைத்திருக்கும்...
# ஆனால்.. எங்கெங்கும் ஜால்ராக்களின் சத்தம் காதைப் பிளக்கிறது... அந்த ஜால்ரா சத்தம் காதில் துரோக ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது...!
# இன்னும் ஒரு படி மேலே போய்... யார் நம்மை பழி வாங்கனார்களோ, இன்னும் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையே அழைத்து விழா நடத்துவதும், அவர்களுக்கு சத்தமாக ஜால்ரா போடுவதும், அவர்களை வானளாவ புகழ்வதுமாக பெரும் அசிங்கங்கள் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
# கொஞ்சமேனும் உணர்வுள்ளவர்கள், ஒரு துளியேனும் நன்றி உள்ளவர்கள், நமது சகோதரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்காக ஒரு நொடியாவது மனதார வருத்தப்படுபவர்கள், நமது வாழ்வாதார கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு தினந்தோறும் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதற்காக ஒரு நொடி கவலைப்படுபவர்கள்  இது போன்ற விருதுகளை புறந்தள்ளியிருப்பார்கள்...
# இவையெல்லாம் விருதுகள் அல்ல... எனது சகோதரர்களின் விழுப்புண்களில் பாய்ச்சப்படும் துரோக விஷம் தடவிய குத்தீட்டிகள்...!
அவைகளின் பெயர் விருதுகள் அல்ல... நமது துரோகத்தின் அவமான நினைவுச் சின்னங்கள்..!!
# விருது என்ற பெயரில் நம்மை திசை திருப்பும், நமது உணர்வுகளை மழுங்கடிக்கும், நம் கண்களை நமது கைகளாலேயே குத்திக் கொள்ளும் ஈனச் செயல்களை அரசும், தனியாரும் திட்டமிட்டு முன்னெடுக்கின்றன..!
# ஒரு எழுத்தாளர் பாதிக்கப்பட்டால் தாம் வாங்கிய அத்தனை விருதுகளையும் அவர்கள் முகத்தில் தூக்கி எறிகிறது மானமுள்ள எழுத்தாளர் கூட்டம்...!
ஆனால்... நன்னெறிகளை, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் கூட்டமோ... மானத்தை விற்று அவமானத்தைப் பரிசாகப் பெற அலைவது கண்டு நெஞ்சம் விம்மி வெடிக்கிறது...!
# இத்தனை துன்பங்களை ஆசிரிய சமுதாயத்திற்காக சுமந்து நிற்கும் எனது சகோதரன் சிந்திய இரத்தம், அதனை மறந்து, பெறும் நன்றி கெட்ட துரோக விருதுகளிலும், பாராட்டுப் பத்திரங்களிலும் படிந்திருக்கும் என்பதையும், அதனை நீ பார்க்கும் போதெல்லாம்... அது உன்னை புழுவை விட கேவலமாகப் பார்க்கும் என்பதையும் மறந்து விடாதே...!
# கலந்தாய்வுகளுக்காக துடிக்கிறோம்...! பதவி உயர்வுக்காக பரபரக்கிறோம்...!!
அது நியாயமாய் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையாய் இருந்தால் அதில் தவறேதுமில்லை... ஆனால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் குற்றச்சாட்டு பெறப்பட்ட நமது சகோதரனுக்குரிய பதவி உயர்வு பணியிடத்தை பறித்துக் கொள்ளப் பார்க்கிறாயே... நீயெல்லாம் மனிதன் தானா? மாறுதல் பணியிடத்திற்கு போரட்ட வீரனின் இடத்திற்கு போகத்துடிக்கிறாயே... கழிவிரக்கம் என்பதே கிடையாதா? நீயெல்லாம் ஆசிரியனாய் இருந்து இந்த குழந்தைகளுக்கு என்ப கற்றுத் தரப் போகிறாய்? இந்த உன்னுடைய நயவஞ்சக புத்தியையும், துரோகத்தையும்... நன்றி கெட்ட குணத்தையுமா?
# ஒரு வேளை... ஏதாவது அதிசயம் நிகழ்ந்து பங்களிப்பு ஓய்வூதியம் இரத்தானால், ஊதிய மாற்றங்கள் நிகழ்ந்தால் தற்போதைய கல்வித் துறை சீரழிவு நிறுத்தப்பட்டால் அது போராட்ட களத்தில் எமது சகோதரர்கள் சிந்திய இரத்தத்தினால் பெறப்பட்டதே ஒழிய... புகழுக்கும், பெருமைக்கும் ஆளாய் பறந்து  நம்பிக்கை துரோகங்களாலும், வஞ்சனகளாலும் பெறப்பட்ட விருதுகளாலோ... பாராட்டுப் பத்திரங்களாலோ அல்ல என்பதை மறந்து விடாதே...!
# பார்ப்போம்...! இனியாவது விருதுகள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற பெயரில் அரசோ, தனியாரோ வழங்கும் துரோக, வஞ்சக நினைவுச் சின்னங்களை எத்தனை பேர் புறக்கணிக்கின்றனர் என்பதை...!
எத்தனை பேர் தாங்கள் ஏற்கனவே பெற்று சுமந்து கொண்டு திரியும் அவமானச் சின்னங்களை விட்டெறியப் போகிறார்களென்று...!!
# இன்னும் சிறிதாய்... என் சகோதரர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வரை எனக்கு பதவி உயர்வு வேண்டாமென்றோ... மாறுதலில் பங்கேற்க மாட்டேனென்றோ சொல்லமாட்டாயா என்ற பெரும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம்... ஆசிரியப் பேரினம் செய்திட்ட துரோகங்களை மறந்து... ஆசிரியப் பேரினம் போராட்ட வீரர்களின் முதுகில் குத்திய இரத்தம் படிந்த  நயவஞ்சக கத்தி தரும் மரண வலியோடு!!!!





Tuesday, 15 October 2019

அனைவரையும் CPS லிருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் அரசுக்கு உத்திரவு

1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் உத்திரவு
1.4.2003 க்கு முன்பு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் காலமுறை ஊதியம் பெற்றவர்கள் அனைவரும்CPS யில் இருந்து GPF க்கு மாற்ற மதுரை நீதிமன்றம் உத்திரவு

மு.சிவக்குமார், தலைவர்
Tams Tirupattur block.

Online entry Method of NMMS 2019-20

NMMS Online entry

Click Here

http://218.248.44.57/DGE18NMMS/

*_👆🏻மேற்காணும் இணையம் வழியே தற்போது NMMS விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்_*

Step 1:Link Copy செய்து BROWSERஇல் search செய்யவும்.

Step2:
User Name: *_YOUR SCHOOL DISE CODE_*

PASSWORD: *_999999_*

Step 3: click *NOMINAL ROLL REGISTRATION*

(Now Not Open NMMS Regist.19-20. Pls wait. Maybe after 16-10-19)

Siva tams Ldr tpt

Monday, 14 October 2019

*தேசிய திறனாய்வு தேர்வு NMMS *திருப்பத்தூர் ஒன்றியத்தில் இரு பயிற்சி வகுப்புகள் இனிதே ஆரம்பம்*



*தேசிய திறனாய்வு தேர்வு NMMS *திருப்பத்தூர் ஒன்றியம்.

திருப்பத்தூர் ஒன்றியம், நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இரு மையங்களில் இனிதே தொடங்கப்பட்டது 🙏

*12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் தொடக்க பள்ளி மற்றும் திருப்பத்தூர் CKS மணி தொடக்க பள்ளி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம் ₹1000 வீதம் 4 ஆண்டுகள் மொத்தம் ₹ 48,000 ரூபாய் ஏழை மாணவர்கள் பயன் பெறுவர். இந்த பயிற்சி வகுப்பு  விடுமுறை நாட்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டு மையத்தில் சிறப்பாக NMMS வகுப்புகள் இனிதே துவங்கி வகுப்புகள் நடைபெறுகின்றன.

மிட்டூர் மையத்தில் நடைபெற்ற  விழாவிற்கு புதூர் மரிமானிகுப்பம் அ.ஜெகதீசன்,ப.ஆ தலைமை தாங்கினார், மைய ஒருங்கிணைப்பாளர் ஜொள்ளகவுண்டனூர் பள்ளி மு.சிவக்குமார்,ப.ஆ, வரவேற்புரை வழங்கினார் மற்றும் இவ்விழா நிகழ்சியை லாலாபேட்டை பள்ளி கே.இரகு,ப.ஆ தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவை திருப்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் திரு.தாமோதரன், வட்டார கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன் மற்றும் திரு.உதயசங்கர்,ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.சத்தியசுந்திரம், மிட்டூர், ஆண்டியப்பனூர் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக சீரங்கப்பட்டி பள்ளி எம்.கிருஷ்ணன்,ப.ஆ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் மற்றும் வாழ்வின் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் விளக்கி எதிர்கால தேர்வுகள், முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர். இனிதே NMMS பயிற்சி துவக்க விழா நிறைவு பெற்று பயிற்சி வகுப்புகள் இனிதே துவங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்க தொடங்கினர்.

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ
NMMS குழு திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம்.



Saturday, 12 October 2019

திருப்பத்தூர் ஒன்றியம், நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இரு மையங்களில் இனிதே தொடங்கப்பட்டது 🙏




*தேசிய திறனாய்வு தேர்வு NMMS செய்தி*திருப்பத்தூர் ஒன்றியம்.

 நடுநிலை பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS பயிற்சி வகுப்புகள் இனிதே தொடங்கப்பட்டது 🙏

இன்று *12-10-2019 சனிக்கிழமை காலை 10 மணி* அளவில் *மிட்டூர் மற்றும் திருப்பத்தூர் CKS மணி ஆகிய இரு மையத்தில்* *தேசிய திறனாய்வு தேர்வு(NMMS) பயிற்சிப்* பட்டறை இனிதே துவங்கியது. இந்த விழாவில் *தலைமை ஆசிரியர்கள்* தங்களின் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வு கலந்து கொள்ள இருக்கும் *மாணவர்கள்* மற்றும் *பெற்றோர்கள்,* அந்தந்த மையத்திற்கு  வருகைதந்து துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இரண்டு மையத்தில் சிறப்பாக NMMS வகுப்புகள் இனிதே துவங்கி வகுப்புகள் நடைபெறுகின்றன.

மேலும் மிட்டூர் மையத்தில் சிறப்புமிக்க இவ்விழாவிற்கு புதூர் மரிமானிகுப்பம் அ.ஜெகதீசன்,ப.ஆ தலைமை தாங்கினார், மைய ஒருங்கிணைப்பாளர்களில் ஜொள்ளகவுண்டனூர் பள்ளி மு.சிவக்குமார்,ப.ஆ, வரவேற்புரை வழங்கினார் மற்றும் இவ்விழா நிகழ்சியை லாலாபேட்டை பள்ளி கே.இரகு,ப.ஆ தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவை திருப்பத்தூர் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் திரு.தாமோதரன், வட்டார கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன் மற்றும் திரு.உதயசங்கர்,ஆசிரியர் பயிற்றுனர்கள் திரு.சத்தியசுந்திரம், மிட்டூர், ஆண்டியப்பனூர் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக சீரங்கப்பட்டி பள்ளி எம்.கிருஷ்ணன்,ப.ஆ நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் மற்றும் வாழ்வின் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதையும் விளக்கி எதிர்கால தேர்வுகள், முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர். இனிதே NMMS பயிற்சி துவக்க விழா நிறைவு பெற்று பயிற்சி வகுப்புகள் இனிதே துவங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்க தொடங்கினர்.

இங்கனம்
மிட்டூர் மற்றும் திருப்பத்தூர்
ஒருங்கிணைப்பாளர்கள்

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ
NMMS குழு திருப்பத்தூர் வட்டம், வேலூர் மாவட்டம்.

Saturday, 5 October 2019

BIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?....


BIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?....

👉முதலில் கீழ்க்கண்ட link ஐ பயன்படுத்தி *My attendance (AEBAS)* என்ற செயலியை

Click Here
https://play.google.com/store/apps/details?id=com.attendance.aebas

 உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

👉பின்பு செயலியை open செய்து *STATE என்ற இடத்தில் Tamilnadu என்பதை உள்ளீடு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும் Department என்ற இடத்தில் Department of school education என்பதை உள்ளிடு செய்து  அதற்கு கீழ் My job /Designation என்னும் களத்தில் Employee  என்பதை டிக் செய்து proceed* என்பதை அழுத்தி உள் நுழைய வேண்டும்.

👉பின்பு *Login to BAS என்ற பக்கம் open ஆகும் . அதில் ஏதும் உள்ளீடு செய்யாமல் இடது மூளையில் 3 கோடுகள் symbol இருக்கும். அதை கிளிக் செய்தால் Menu ஒன்று open ஆகும் .அதில் கீழ் கடைசியில் login என்று இருப்பதை click* செய்ய வேண்டும்.

👉பின்பு *login biometric attendance system* என்ற பக்கம் open ஆகும் அதில் *username ,password,
confirmation code* என்ற மூன்று களங்கள் இருக்கும் அதில் *எதையும் உள்ளீடு செய்யாமல் அதற்கு கீழ் உள்ள forget password* என்பதை click செய்ய வேண்டும்.

👉பின்பு *Forget password என்ற தலைப்பில்* பக்கம் ஒன்று open ஆகும் .அதில் *user neme என்ற களத்தில் உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8 இலக்க ID ஐ(ஆதாரின் கடைசி 8 இலக்கம்)* உள்ளீடு செய்து அதற்கு கீழ் உள்ள *select Mode* என்பதன் கீழ் உள்ள by SMS என்பதை select செய்து அதற்கு கீழ் உள்ள confirmation code ஐ சரியாக உள்ளீடு செய்து submit கொடுக்க வேண்டும்.

👉பின்பு Create new password என்ற பக்கம் open ஆகும் .அதில் புதிய password ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் *registered மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP* ஒன்று *குறுஞ்செய்தியாக* வந்திருக்கும் .அதை சரியாக உள்ளீடு செய்தவுடன் உங்களுக்கு *password updated successfully* என்று திரையில் தோன்றும்.

👉மீண்டும்* Menu வை click செய்து login என்பதை open செய்து *user name என்ற களத்தில் உங்களது 8 இலக்க biometric ID* ,ஐ உள்ளீடு செய்து *password என்ற களத்தில் நீங்கள் உருவாக்கிய password* ஐ உள்ளீடு செய்து, Confirm code  (captch code) ஐ சரியாக உள்ளீடு செய்து *sing in me* என்பதை கொடுத்தால் போதும் *உங்களுக்கான பக்கம் open ஆகிவிடும்.*.

👉இதில் *Leave என்ற option* ஐ கிளிக் செய்து தங்கள்து *விடுப்பு விபரங்களை* நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் உங்கள் *சுய விபரங்களில் தவறுகள் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளலாம்.*

குறிப்பு: *password உருவாக்கும் போதும் Atleast one uppercase one lower case one numeric one special symbol என்ற கலவையில் உருவாக்க வேண்டும்..*
Thanks to rajkumar sathish 

Siva tams Ldr tpt


தொடக்க நிலை மற்றும் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான NISHTHA App பணியிடைப் பயிற்சி

தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் பணியிடைப் பயிற்சி

NISHTHA APP INSTALLATION
CLICK HERE
https://play.google.com/store/apps/details?id=ncert.ciet.nishtha.


CLICK HERE TO DOWNLOAD NISHTHA PDF FILE. PROCESSING..
https://drive.google.com/file/d/1eCn_1XTGl6pfcfMwLlaJT8HSX_Pk7ZsR/view?usp=drivesdk.

Thanks to kaninikalvi..

Siva tams Ldr tpt

வளரறி மதிப்பீடு தேர்வு பருவம் 2 கணிதம் 6, 7 , 8 வகுப்புகள்

வளரறி மதிப்பீடு தேர்வு பருவம் 2 கணிதம் 6, 7 , 8 வகுப்புகள்


Click here 6th Maths
https://drive.google.com/file/d/1dUlI3TJAf5oM15Y8WZGYsv6oA-1MBau8/view?usp=drivesdk

Click here 7th Maths
https://drive.google.com/file/d/1dgPBAxNKBSiiY5elwiz7w2OFQ-uRlHWV/view?usp=drivesdk.


Click here 8th Maths
https://drive.google.com/file/d/1do07HATBzaEiaz-Bumffa9_EujL2fq3g/view?usp=drivesdk

Thanks Pradeep, BT,

Siva tams Ldr tpt

Friday, 4 October 2019

Emis scale register, CSR need, teacher details

Emis Scale Register CSR Need Teacher subjet input details

Click Here
https://youtu.be/JmuPIziT8oA 

Click Here
https://youtu.be/RMWu6VAmN4s

Thanks to Gopinath. And Thenarasu.

Siva tams Ldr tpt

Teachers profile part 1ல் subjects taught  பகுதியில் ஆறு பாடங்களை தேர்வு செய்து TIME TABLE உருவாக்குவதில் இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

Teachers profile part 1ல் subjects taught  பகுதியில் ஆறு பாடங்களை தேர்வு செய்து TIME TABLE உருவாக்குவதில் இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.


TEACHERS PROFILE ல் பல்வேறு ஆசிரியர்களின் புகைப்படங்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்தகைய தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் சிலரின் மாறிய புகைப்படம் சரிசெய்யப்பட்டும், சிலரின் புகைப்படங்கள் நீக்கம் செய்யப்பட்டதாகவும்  தகவல் பெறப்பட்டுள்ளது. புகைப்படம் இல்லாத ஆசிரியர்கள்&ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்கள்,ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகைப்படம் பதிவேற்றம் செய்யவும்  . ஆகையால் அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்

Siva tams Ldr tpt

Thursday, 3 October 2019

EMIS- NEWS- Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது.


அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children's details  update செய்ய வேண்டும்.

*பதிவேற்றம் செய்யும் முறை*


🤳  Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில்  கடைசியாக வரும் Teachers children's details ஐ கிளிக் செய்து  staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3  குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து Save செய்து கொள்ளவும்.


💁‍♂ தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்றால் No வை select செய்து கொள்ளவும். திருமணம் ஆகாதவர்கள் not applicable ஐ select செய்து கொள்ளவும்.

💁‍♂ இதே மாதிரி ஒவ்வொரு ஆசிரியருக்கும் update செய்யவும்.

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல்


*💥Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

*பாகம் 1*Click Here
https://youtu.be/FpZ4LX7yTdE.

*பாகம் 2* Click Here
https://youtu.be/7Ffn9KsBUUI

*பாகம் 3* Click Here
https://youtu.be/mGo4Kmtkkuw.

*பாகம் 4* Click Here
https://youtu.be/c0G6DzRlIvY.

Thanks to Ganesh Anbu.

Siva tams Ldr tpt

Sunday, 29 September 2019

பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள்!!* மற்றும் காணொலி

பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள்!!*

Click Here
https://drive.google.com/file/d/1B5kzh15t3h925dfGigrjnK0n-6Ha995h/view?usp=drivesdk


*பள்ளிகளில் புறமதிப்பீட்டிற்கான (சாலா சித்தி) பதிவேடுகள் எனும் இக்காணொலி அக்டோபர் 2019 இல் நடைபெற இருக்கும் பள்ளிப் பார்வைக்குத் தேவையான பதிவேடுகள் மற்றும் செயற்களங்கள் தொடர்பாகப் பேசுகிறது. ஆசிரியர்களுக்குப் பயனுள்ள காணொலி!!*

Click Here
https://www.youtube.com/watch?v=_naWbl4CL2E

Siva tams Ldr tpt

Saturday, 28 September 2019

ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டியில் ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சங்க பங்கு தொகை 10% லிருந்து 5% விதமாக குறைப்பு ஜனவரி 2019 முதல் பிடித்தம் கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கை.


ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டியில் ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சங்க பங்கு தொகை 10% பிடித்தம் செய்து கொண்டிருந்ததை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஜனவரி 2019 முதல்(4-1-19) ஆசிரியர்கள் பெறும் கடன் தொகையில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களுக்கு செலுத்தும் பங்கு தொகையில் 5% பிடித்தம் செய்ய வேண்டும் என்பதற்கான ஆணை Jan2019 ல் வெளியிடப்பட்ட நிலையில், சில ஒன்றியங்களை என்னும் செயல்படாத நிலையில் உள்ளது.எனவே அனைத்து ஆசிரியர் கூட்டுறவு சொசைட்டி தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆசிரியர்களுக்கு  ஜனவரி 2019 முதல் ஐந்து சதவீதம் பிடித்தம் செய்ய நடவடிக்கையை ஆசிரியர்களின் கூட்டுறவு சொசைட்டி நடைமுறைப்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

கூட்டுறவு சங்க பதிவாளர்சுற்றறிக்கை.
https://drive.google.com/file/d/1uf7tE_MYcsB2EVEpsx3VXdcjc45KzBKw/view?usp=drivesdk

என்றும் ஆசிரியர் நலனில்

*மு.சிவகுமார் தலைவர்* தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருப்பத்தூர் வட்டாரம்

Wednesday, 25 September 2019

Tams ன் வருமானவரி தகவல்*சரியான சாப்ட்வேரில் TDS மற்றும் ஈ-பைலிங் செய்தால் சரியாக இருக்கும்.

*Tams ன் வருமானவரி தகவல்*



*INCOME Tax form 16 சார்பில் ஆசிரியருக்கு ஒரு தகவல் தற்போது சிலரால்  பயன்படுத்தி வரும் இன்கம்டாக்ஸ் சாப்ட்வேர் XL  SOFTWARE பல வடிவங்களில் பல விதங்களிலும் பலரால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.*
*வழங்கப்பட்டுள்ள எக்ஸெல் சாப்ட்வேரில் (xl software)  படிவம் 16 (Form 16) சில சாப்ட்வேர்களில் வழங்கப்பட்டுள்ளது இந்த சாப்ட்வேரை  பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது*

 *ஏனெனில் படிவம்16  (form 16)இதிலிருந்து பிரதி எடுக்கப்பட்டு*
*income tax returns ஆசிரியர்களால் வருகிற  ஜூன் மாதம் முதல் நிரப்பப்படும் அப்படி நிறப்படுவதால் ஆசிரியருக்கு (இன்கம் டாக்ஸ் துறையில்) Income tax department இருந்து நோட்டீஸ் (Notice)* *தண்டத்தொகை additional payment விதிக்க வாய்ப்புள்ளது எனவே இந்த (XL software) சாப்ட்வேர்கள் வருகின்ற படிவம் 16 (Form 16) பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

*படிவம் 16சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் டிடிஎஸ் (TDS)செய்து அதன் மூலம் வருகின்ற உண்மையான படிவம் 16 சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு May 31 வழங்க வேண்டும்அப்படி வழங்கப்படுகின்ற படிவம் 16 (form16) பயன்படுத்தி தாங்கள் income tax returns (ITR) பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்தால் மட்டுமே தங்களுக்கு இன்கம்டாக்ஸ் துறையால் வழங்கப்படுகின்ற நோட்டீஸ் ஆனது வராது என்று தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*உண்மையான படிவம் 16 க்கும் தற்போது வரை சாப்ட்வேரில் இருந்து எடுக்கப்படுகின்றன.

போலி படிவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கீழ்கண்டவாறு பார்ப்போம்*

*1.உண்மையான படிவம் அரசு துறை அடையாளம் சிங்கமுகம்  பயன்படுத்தப்படுகிறது*
போலியானதில் இல்லை

*2. டி டி எஸ் TDS சர்டிஃபிகேட் CERTIFICATE நம்பர்   உள்ளது*
போலியானதில் இல்லை

*3. டிடிஎஸ் TDS இல் தங்களால் செலுத்தப்பட்ட இன்கம்டேக்ஸ் தொகை அனுமதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது*
போலியான இல்லை

*4. சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் ஆல் தங்களுக்கு வழங்கப்பட்ட வருட தொகை (total income )என்ன என்பது உண்மையான படிவம் 16ல் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும்*
போலியானவைகளில் இல்லை

படிவம் 16 சம்பந்தப்பட்ட சம்பளம் பட்டுவாடா அதிகாரி வழங்கப்பட வேண்டும் காலஆண்டு வாரியாக பதிவு செய்து மே மாத இறுதியில் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

*பள்ளிகளை பொறுத்தவரை யார் யார் சம்பள பட்டுவாடா அதிகாரி என்று பார்ப்போம்*

*அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள்-*
block level officer(BEO)

*அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்-* HEADMASTERS

*அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்-* DISTRICT EDUCATION OFFICERS

பிற அரசு துறைஅலுவலகங்கள்-
DDOS (BILL SIGNING OFFICERS)

*எனவே போலியாக இருக்கக்கூடிய ஆப்ஷனை பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. உண்மையான படிவம் 16-ஐ பயன்படுத்தி இன்கம்டாக்ஸ் ரிட்டன் செய்யும்போது சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது தெரியவருகிறது.*

என்றும் ஆசிரியர் நலனுடன்

*மு.சிவக்குமார், தலைவர்*
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
திருப்பத்தூர் வட்டம்.
வேலூர் மாவட்டம்.

Tuesday, 24 September 2019

ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?*

*ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன?*


ITR E-filing : ஃபார்ம் 16 இல்லாமல் இணையம் மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? Income Tax Return (ITR) e-filing Online : இவை அனைத்தும் முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், இன்கம் டேக்ஸ் ரிட்டனை உடனடியாக விண்ணப்பிக்கலாம். Income Tax Return (ITR) e-filing Online: எப்போதுமே ஃபார்ம் 16 மூலமாகத் தான் வருமான வரி தாக்கல் செய்வோம். ஆனால் நம் நிறுவனங்களில் அந்த படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து, அனுப்புவது என்பது பெரும் தலைவலி தான். இனி அந்த கவலை இல்லை. இணையத்தின் மூலம் உங்களின் தகவல்களை பூர்த்தி நீங்கள் நேரடியாக வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யலாம். உங்களின் ஃபார்ம் 16 என்பது உங்களின் வருமானம், வரி, மற்றும் டி.டி.எஸ் என்னென்ன என்பதை திட்டவட்டமாக விளக்கும் ஒரு சான்றாகும். payslips உங்களின் பே ஸ்லிப்பினை (payslips) வைத்து நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்று கணித்துக் கொள்ள இயலும். ஒரு நிதி ஆண்டில் நீங்கள் பெற்ற 12 மாதத்திற்கான பே ஸ்லிப்பினையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நெட் சேலரியையும் கணக்கில் கொள்ளுங்கள். 26-AS 26-AS ஃபார்மில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்களின் டி.டி.எஸ் மதிப்பினையும், உங்களின் பே ஸ்லிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும் டி.டி.எஸ் மதிப்பினையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதனை உங்கள் நிறுவனத்திடம் கேட்டு க்ளாரிஃபை செய்து கொள்ளவும். வீட்டு வாடகை ஃபில் House Rent Allowance எனப்படும் வீட்டு வாடகைக்கான தொகை உங்களின் சம்பள பணத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த பணத்தினை குறைக்க உங்களின் வீட்டு வாடகை ஃபில்களை முன்பே உங்களின் நிறுவனங்களிடம் சமர்பித்துவிடுங்கள். காப்பீடுகள் நீங்கள் மாதாமாதம் உங்கள் பெயரில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் போட்டு வைத்திருக்கும் காப்பீடுகளுக்கு பணம் செலுத்துவீர்கள். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவைகளை கட்டுவதற்கான ரசீதுகள் மற்றும் பி.எஃப்., பி.பி.எஃப் போன்ற சேமிப்புத்திட்ட விவரங்களை சமர்பித்தால் மேலும் நீங்கள் கட்ட வேண்டிய வரியின் விகிதம் குறைக்கப்படும். இதர வருமானம் வாடகைக்கு வீடு தருதல், ஃபிக்சட் டெபாசிட் மூலம் பெரும் பணம் ஆகியவற்றையும் மறக்காமல் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 26AS ஃபார்மில் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவில் நீங்கள் வருமான வரி செலுத்தி இருணந்தால் காலம் தாழ்த்தாமல் மீதத் தொகையும் கட்டிவிடுங்கள் இவை அனைத்தும் முறையாக கால்குலேட் செய்யப்பட்டிருந்தால், உங்களின் இன்கம் டேக்ஸ் ரிட்டனை ஆன்லைன் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம்.

Nmms , NTSE , TRUST தேர்வுகளுக்கான old question papers collection

Nmms , NTSE , TRUST தேர்வுகளுக்கான old question papers collection



*🙏 வணக்கம் நண்பர்களே*
*Nmms , NTSE , TRUST தேர்வுகளுக்கான old question papers collection புதிய பாடத்திட்ட மற்றும் பழைய பாடத்திட்ட study materials zeal study team தயார் செய்து upload செய்துள்ளோம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்*
*Nmms தேர்வு  அறிவிப்பு வெளி வந்து உள்ளது*
தேர்வுக்கு  தயார் செய்ய வேண்டியவை

*மனத்திறன் தேர்வு MAT*
*பாடத்திறன் தேர்வுக்குSAT*

NMMS 2019: Application, Date, Eligibility Pattern, Syllabus*

*NMMS 2019: Application, Date, Eligibility Pattern, Syllabus*

The NMMS is commonly known as National Means Cum Merit Scholarship. The National Means Cum Merit Scholarship is an exam which is also known as NMMS Exam 2019. The Central Government is the official organizing body to conduct the National Means Cum Merit Scholarship exam every year for the eligible applicants.

However, the exam is managed by the local educational authorities to award 1,00,000 scholarships to the eligible applicants from class IX to class XII. However, only those applicants will be eligible to get the scholarship from the authority whose parents income is not more than Rs 1,50,000 per annum from all sources.

The National Means Cum Merit Scholarship is conducted in each state and union territories. However, the National Means Cum Merit Scholarship will be organized in two stages only. The first stage of the exam will be conducted by the respective state authorities.

And applicants who have cleared the first stage will be eligible to appear for the second stage conducted by the NCERT. Applicants will get all the notification and information about the entrance exam on the official website of the university itself.

NMMS 2019 Exam Dates

The important information related to the important events and tentative dates is mentioned below for the reference of the applicants:

Important events Tentative dates
Date of entrance exam In the month of December 2019. Notification will be come month of September.

NMMS 2019 Application Form

The important information related to the application form is mentioned below for the reference of the applicants:

In online mode applicants have to fill the application form in order to appear for the exam.
Applicants need to register themselves in order to get the application form.
After that applicants need to start filing the application form.
At the time of filing the application form, applicants need to enter all necessary details in the application form as needed.
All the details should be filed properly in the application form.
After that applicants need to take a printout of the duly filled application form.
Once the printout of the application form is taken applicants need to pay the application fee as mention on the official website and submit the application form before the due
NOTE: The details of the application fee will be available on the official website of the university.

NMMS 2019 Eligibility Criteria

The important information related to the eligibility criteria is mentioned below for the reference of the applicants:

Educational qualification:
Applicants who are studying in class IX in any government, local body and government-aided schools are eligible to appear.
Income of parents:
Parents of the applicants whose income is not more than Rs 1,50,000 per annum from all sources are only eligible to apply for the exam.
Qualifying marks:
One must have scored more than 55% marks in the class VIII if they belong to the general
One must have scored not less than 50% marks in the class VIII if they belong to reserved category.

*NMMS 2019 Paper Pattern*

The important information related to the paper pattern is mentioned below for the reference of the applicants:

The entrance exam will be conducted in offline mode in two parts as mention below:

MAT – Mental Ability Test
SAT – Scholastic Aptitude Test

90 minutes duration will be allotted to the applicants to solve the paper.

The question paper of the exam will contain 90 questions of 90 marks only.

We have mentioned below all the information about the paper pattern in short:

Papers Test No of questions No of marks Duration of the exam

Paper I MAT – Mental Ability Test

*90 questions 90 marks 90 minutes*

Paper II SAT – Scholastic Aptitude Test

*90 questions 90 marks 90 minutes*

NMMS 2019 Syllabus

The important information related to the important topics and chapters for the preparation of the entrance exam is mentioned below for the reference of the applicants:

Mental Ability Test:
Analogy
Classification
Numerical series
Pattern perception
Hidden figures
Scholastic Aptitude Test:
Physics
Chemistry
Biology
Social studies
Mathematics

By Siva tams Ldr tpt blk.

தேசிய திறனாய்வு தேர்வு (NMMS)..Notification 2019-20

தேசிய திறனாய்வு தேர்வு NMMS Notification 2019-20.


NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) 👆🏼Dec 2019
Notification

Click Here
https://drive.google.com/file/d/1JSOMaaz72-c8E7bHtFuPsHHH_-eboHD2/view?usp=drivesdk.

OR
https://drive.google.com/file/d/1JSOMaaz72-c8E7bHtFuPsHHH_-eboHD2/view?usp=drivesdk

ONLINE ENTRY PORTAL

Click Here
http://218.248.44.57/online/

Siva tams Ldr tpt blk.

BIO METRIC MOBILE APP.. FOR GOT EMPLOYEES

Are you a government employee? Check your attendance on AEBAS andq manage your leaves and tours etc. Just download this application:

Biometric mobile app
Click Here
https://play.google.com/store/apps/details?id=com.attendance.aebas

Siva tams Ldr tpt

பொதுவான பார்வையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் *உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*

உண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*


 என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்?*

பொதுவான பார்வையில்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றால்
அதிக சம்பளம் வாங்குபவர்கள்,
வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குபவர்கள்,
இன்னும் சிலவும்...

உண்மை நிலை என்பதும் இது தானா?
வாருங்கள், ஒரு ஆய்வு செய்து பார்ப்போம்...

பள்ளிக்கு அருகிலேயே இல்லமிருப்பவர்கள் இருந்தாலும், 100 கி.மீ முதல் 200 கி.மீ முதல் தினமும் பயணம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஓரிருவர் நேரம் தவறி பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பான்மையானோர் சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று, இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களை ஒழுங்குபட வரிசைகளில் நிற்க வைப்பதில் தொடங்குகிறது இவர்களின் வேலை...

பள்ளி வளாகத்தினுள்ளும், பள்ளி வகுப்பறைகளிலும் குப்பைகள் இல்லாதவாறு அவற்றை அப்புறப்படுத்தி 'தன்' பள்ளியெனும் எண்ணத்துடன் அந்த நாளினைத் தொடங்குகின்றனர்.

வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அன்றைய நாளில் மாணவர்களுக்கு குடிநீர் இருப்பையும், கழிவறையில் நீர் இருப்பையும், அவர்களுக்கு சமையல் செய்யவும், சாப்பிட்ட பின் மாணவர்கள் கை கழுவவும் தண்ணீரின் இருப்பை கிடைக்குமாறு செய்து அந்த நாளை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமாறு உறுதி செய்துகொள்கின்றனர்.

இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் நிற்கும் போதே யார் குளித்தது, யார் தலை வாரியது, யார் பல் துலக்கியது, யார் நகம் வெட்டியது, யார் கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பது, யார் துவைக்காத அழுக்கான ஆடைகளை அணிந்திருப்பது எனவும் கண்காணித்து அவற்றை முறைப்படுத்தவும் செய்கின்றனர்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலைகளையும், உடல்நிலைகளையும் அவர்கள் முகத்தினை வைத்தே தீர்மானிக்கின்றனர். நாம் நினைப்பது போல நம் வீட்டிலுள்ளது போலவே அந்த குழந்தைகளின் வீட்டிலும் நிலை உள்ளதாக நினைத்துக்கொள்ளக்கூடாது !
குடித்து விட்டு சண்டை போடும் தந்தை, வேலைக்கே செல்லாத தந்தை, தந்தையை நிம்மதியாய் இருக்கவிடாத தாய், தாய்-பாட்டி சண்டைகள், சில இடங்களில் நாகரீகமற்ற தவறான பழக்கம் கொண்ட சில தாய், தந்தையரும் உண்டு ! இதுவுமல்லாமல் மாடு மேய்த்துவிட்டும், ஆடு மேய்த்துவிட்டும், சுள்ளி பொறுக்கிவிட்டும், விறகு வெட்டிவிட்டும், சுமை சுமந்து பல தூரம் அதைக் கொண்டு சென்ற பின் பள்ளிக்கு வரும் மாணவர்களும் இன்னும் உள்ளனர்.

இப்படி பல்வேறு சூழல்களிலிருந்து வரும் குழந்தைகளை அவர்களின் முகத்தினை வைத்தே புரிந்துகொள்வதென்பது அந்த ஆசிரியர்களுக்கே உண்டான திறமை.

சில நேரங்களில் சில குழந்தைகள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே கிடப்பதும், அவர்களின் பெற்றோரும் அவற்றை கண்டுகொள்ளாமலிருப்பதும் அரங்கேறும்.

தனியார் பள்ளியிலிருந்து கட்டணக்கொள்ளையால் தன் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோரின் மனசாட்சிக்குத் தெரியும், தனியார் பள்ளியில் தன் பிள்ளையை படிக்க வைத்தபோது பெற்றோருக்கு இருந்த அந்த கண்காணிப்பு என்பது அரசுப்பள்ளியில் சேர்த்தவுடன் மாயமாக ஆகிப்போகிறது. விலையில்லாமல் அளிக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை என்பது இங்கு மிகச்சரியாக பொருந்துகிறது.

அன்று பள்ளிக்கு வராத மாணவர்களை வர வைக்க, சில ஆசிரியர்கள் தொலைபேசி மூலமாகவும் அல்லது மாணவர்களிடம் விசாரித்தும் அந்த சரியான காரணத்தை உறுதி செய்துகொள்கின்றனர்.

பசியில் இருக்கும்போது காதுகள் கேட்காதென்பது யாவரும் அறிந்ததே, சில மாணவர்கள் தினமும் பசியோடே பள்ளிக்கு வருவர். அந்த பழக்கத்தினை மாற்றவும் தங்களால் ஆன முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பிற்கு முன்னரே கரும்பலகையில் தேதியையும், கிழமையையும் எழுதியவுடனேயே அங்ங்ங்கு தொடங்க்குகிறது பதிவேடுகளின் பங்களிப்பு.
சிலர் விக்கிரமாதித்தனின் முதுகில் ஏறிக்கொண்டதைப் போலவே இந்த பதிவேடுகளைக் கண்டு கவலையுறுகின்றனர்.
ஏன் அப்படி ஒரு கலக்கம் இந்த ஆசிரியர்களுக்கு?
ஆம். கலக்கமுறத்தான் செய்வார்கள். ஏனெனில் அவற்றின் எண்ணிக்கைகளும், அவற்றில் இடம்பெற வேண்டிய தகவல்களின் எண்ணிக்கையும் எக்கச்சக்கம்.
தோராயமாக பள்ளியிலும், வகுப்புகளிலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் அறுபதைத் தாண்டும் என்பது சிலரின் கருத்து ! ! !

இத்தனையையும் தாண்டி வகுப்பு எடுக்கலாமென்றால் இந்த முறையில் தான் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. மாணவர்களின் இருப்பிட அமைவிடத்தைப் பொருத்தும், அவர்களின் மனநிலையையும், பழக்க வழக்கங்களைப் பொருத்தும் வாழ்வியல் முறைகளைப் பொருத்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள் பற்றியும் அக்குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே மிகச்சரியாக தெரியும்.  இது இடத்திற்கு இடம் மாறுபடும்.
அதையும் கடந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைத்து எடுத்துக்கொண்டே இருக்கும் போதே, நூறு நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது வேறு ஏதேனும் வேலைக்குச் செல்லும் பெண்மணி ஒருவர் திடீரென நேராக வகுப்பினில் ''இந்தாடா, அம்மா வேலைக்கி போறன், பாப்பாவ புட்சிக்கோ '' என்று மொத்த மாணவர்களின் கவனத்தையும் ஒரேயொரு நொடியில் பஸ்பமாக்கி விட்டு சென்றுவிடுவார். அவர் நகர்ந்த அடுத்த நொடி அந்த குழந்தை எந்தளவு பீறிட்டு அழும் என்பதும், அதைச் சமாதானப்படுத்தி மீண்டும் வகுப்பில் மாணவர்களின் கவனத்தைக் கொண்டு வருவதென்பது அவ்வளவு சாதாரணமான செயல் அல்ல.

வீட்டில் வேலை இருந்ததாலும், பெற்றோரின் கவனமின்மையினாலும் சில/பல பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதாமலும், நடத்திய பாடத்தினை படிக்காமலும் திருதிருவென முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பர். இவர்களை எப்படி சமாளிப்பதென்றும் புரியாமலும், பெற்றோரை அழைத்து வர பல முறை சொல்லியனுப்பிய பின் நேரில் வரும் பெற்றோர்களிடத்தில் எதைச் சொன்னாலும், தன் பிள்ளை, அவன் கல்வி என்னும் எண்ணமேயில்லாமல் ஒரு பதில் வரும். இப்போது அந்த ஆசிரியர் திருதிருவென முழிப்பதை நம்மால் பார்க்க இயலும்.
சில மாணவர்களின் தவறான செயல்களுக்காக அவர்களைத் திட்டவோ, அடிக்கவோ அல்லது அவர்களின் மனம் நோகும்படியோ நடக்கக்கூடாதென்பது ஆணை. எந்தளவு உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? எனக்கெப்படி தெரியும்? நான் என்ன ஆசிரியரா? என்கிறீர்களா? குறைந்தபட்சம் ஐந்தே ஐந்து பிள்ளைகளை ஒரே அறையில் உங்களுடன் அமர வைத்து அவர்களின் கையில் புத்தகத்தைக் கொடுத்து டி.வியோ மொபைல் போனோ இல்லாமல், அவர்களுக்கு எந்தவித கண்டிப்பும் இன்றி அவர்களை படிக்கவும் வைத்து ஒரு நாளை கடத்திப் பார்த்தோமானால் நாம் யாரைப் பற்றி எவ்வளவு எளிதாக பேசிவிட்டோம் என்பதை நாம் உணர்ந்துவிடுவோம்.

இது இப்படியிருக்க, ஒரே அறையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் பல வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதே ஆசிரியர் ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் நடத்துவது என்பது, அதைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பாகவும், அதைப் புரிபவர்க்கு சவாலாகவும் இருக்கும்.

காலை நேர வகுப்புகள் முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்கு யார் கை கழுவாமலும், தட்டு கழுவாமலும் வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொருவராக கூர்ந்து கவனிக்கிறார்கள். இதைக்கூடவா கவனிக்க வேண்டும், நம்பும்படியாகவா உள்ளது எனக் கேட்பவர்கள் நிதர்சனம் புரியாதவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை. ஆம். அதைக்கூட கற்றுத்தராத பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.
உணவை மட்டுமே சுகாதாரமாக உண்ண சொல்லித் தருகிறார்களா? அல்ல. கழிவறைப் பயன்பாடும், கழிவறைச் சுத்தமும், கழிவறைகுச் சென்று வந்த பின் மாணவர்கள் கை, கால்களை சுத்தப்படுத்துவது முதல் இந்த ஆசிரியர்கள் சொல்லித்ததுகின்றனர் என்பதே நம்மை ஆச்சர்யப்படுத்தும் எதார்த்தம் !

நாமெல்லாம் லேப்டாப், ஸ்மார்ட் போன், LED TV என உயரப்பறந்துகொண்டிருக்கும்  போது இவற்றையெல்லாம் நம்ப நமக்கு சற்று கடினமாகவே இருக்கும். இரட்டைத் தந்தையுடனோ அல்லது இரட்டைத் தாயுடனோ கூட சில குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் மனநிலையை சற்றே யோசித்துப் பார்த்தால் நமக்கு மனம் கலங்கவே செய்யும்.

சரி. எல்லாம் முடிந்து மீண்டும் மதிய வகுப்புகள் தொடங்கி கவனம் ஈர்க்கப்பட்ட நேரம் திடீரென வகுப்பினுள் நுழையும் உருவத்தை அனைவரும் திரும்பிப் பார்த்தால் அங்கு குடித்து விட்டு யாரோ ஒருவரின் தந்தை நின்றுகொண்டிருக்கலாம். எதற்க்குப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், யார் முன் பேசுகிறோம் என தன் அரைகுறை ஆடையைப் பற்றிய கவலை கூட இல்லாதவொரு நபரை நாகரீகமான முறையில் மட்டுமே நடந்துகொண்டு பேச்சை வளர்க்காமல் வழியனுப்பி வைப்பதென்பது எந்தளவில் இயலும் என நாமும் ஒரேயொரு நிமிடம் அங்கு நின்று சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பதில்களற்ற மௌனம் மட்டுமே.

மறுபடியும் வகுப்பெடுக்கத் தொடங்கி அதில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து பாடத்தை மனதில் பதிய வைப்பதென்பது நொடி நேரப் பெருந்தவம் !!!
இவற்றையெல்லாமும் கடந்து கல்வி கடந்து அந்த மாணவர்களை ஏட்டுச்சுரைக் காய்களைத் தாண்டி கறிக்கு உதவும் வண்ணம் அவனைத் தயார்ப் படுத்துவதுடன், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் இன்னும் பல்வேறு மதிக்கத்தக்க தலைவர்களின் பிறந்த நாட்களின் கொண்டாட்டங்களுக்கு அவர்களை தயார்ப்படுத்துதலும், பல சமயங்களில் நடைபெறும் கணினி பயன்பாட்டுப்போட்டி,  ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சதுரங்கப்போட்டி, கபடி, கோ கோ என இன்னுமின்னும் எக்கச்சக்கமான போட்டிகளுக்கும் மாணவர்களை முழுமையாக இந்த ஆசிரியர்களே தயார்படுத்துகின்றனர்.

இவற்றினிடையில் கல்வித்துறையின் பல்வேறு பயிற்சிகளைப் பெறுவதும், அரசு தரும் விலையில்லாப் பொருட்களை பெற்று வழங்குவதும், ஊர்க்கணக்கெடுப்பு நடத்துவதும், அரசாங்கத்தின் தேசிய அளவிலான கணக்கெடுப்பு நடத்துவதும், கழிவறைகள் இல்லாத இடங்களிலும், யானை போன்ற காட்டு விலங்குகள் உலாவுமிடங்களில் தேர்தல் பணிகளைச் செவ்வணே செய்வதும் கூட இவர்கள் தான் என்பது நமக்கு இவர்களின் மேல் ஆச்சர்யமான மரியாதையையே ஏற்படுத்துகிறது.

''இந்தா இத எழுதி குடு வாத்யாரே" என அவர்கள் சாப்பிடும் நேரம் கூட அவர்களைச் சிலர் விட்டு வைப்பதில்லை. இதில் சாதிய, ஆண் பெண் பாகுபாடுகளில் சிக்கிக்கொள்ளாமலும், தன்னையும், தன் மாணவர்களுக்கும் பாதுகாத்துக்கொள்வதென்பதெல்லாம் கத்தியின் மேல் கால் ஊன்றி நடக்கும் வேலை !

வகுப்பறையில் ஆசிரியர்கள் தூங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய், ஆசிரியர்கள் இமைக்க நேரமில்லா காலம் வந்ததை அரசியல் தெடர்பற்ற ஆய்வாளர்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்ளுவர்.
மேற்சொன்ன சவால்கள் அனைத்தும் ஆசிரியர்கள் சந்திப்பது என்று மட்டுமில்லை, ஆசிரியர்களின் மூலமாக அரசு சந்திப்பது. தனியார் பள்ளிகளின் ஆடம்பரங்களையும், கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றளவும் தன்னால் இயன்ற அளவு அரசுப்பள்ளிகள் வென்று கொண்டேதான் இருக்கின்றன. அந்த வெற்றிகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை, வேண்டுமென்றே சில இடங்களில் மறைக்கவும் படுகிறது.

இதெல்லாம் காரணம் காட்டி மட்டும் அவர்கள் சம்பளம் வாங்கலாமா என்று இன்னும் சிலருக்கு ஐயம் இருக்கலாம். இதோ அதற்கான பதில்...

பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுகிறது, முழுமையாக. நசஷ்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளைக் கணக்கெடுத்துச் சொன்னால் ஒரு வேளை உங்களுக்கு அந்த உண்மை விளங்கலாம். பெற்றோர் கூட கண்டுகொள்ளாத வருங்காலச் சந்ததியின் பெரும்பகுதியை அரசு ஆசிரியர்களை வைத்து ஆழ்ந்த பொறுப்புடன் கவனித்துக்கொள்கிறது. இங்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு பணமாக்கப்படுவதில்லை, வருங்கால சமூகத்தை திடமாக உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆட்சிகள் மாறிக்கொண்டே தான் இருக்கும். அரசு என்பது அரசியல்வாதிகள் அல்ல. உள்ளார்ந்து பார்த்தோமானால் அரசு ஏழைகளுக்கானது, கவனிப்பற்றோருக்கானது, கல்வியற்றோருக்கானது. இவர்களையெல்லாம் மேல் கொண்டுவரும் அரசின் கருவிகள் மட்டுமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களின் சமூக சேவை மதிக்கப்படவில்லையெனும் சரி, நிச்சயம் நம்மால் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

மதிக்கப் பழகுவோம், அவர்களும் மனிதர்கள் தானே !

This article was,written by Mr. Arunmanohar, vellore.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva tams Ldr tpt blk.

பயோமெட்ரிக் ATTENDENCE ல் ஆசிரியர்கள் எவ்வாறு Login மற்றும் Password உருவாக்குவது, விடுமுறை எவ்வாறு Apply செய்வது எவ்வாறு?

BIO METRIC ATTENDANCE ல் ஆசிரியர்கள் INDIVIDUAL LOGIN & PASSWORD உருவாக்குவது எவ்வாறு LEAVE APLY VEDIO

https://youtu.be/ea1dQPwSAm4

Siva tams Ldr tpt

HOW TO REGISTER TEACHERS DETAILS IN BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN SCHOOL EDUCATION DEPATMENT

HOW TO REGISTER TEACHERS DETAILS IN BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN SCHOOL EDUCATION DEPATMENT STEP BY STEP VIDEO LINK

Click Here

https://youtu.be/EMlUjVZkOrw

By Siva tams Ldr tpt

TRB தேர்வு வாரியம் தேர்வர்களின் அருகில் மையம் இருந்தும் தேர்வுமையம் ஒதுக்காது ஏன் என்று தேர்வர்களின் குமுறல் கவனிக்குமா TRB தேர்வு வாரியம்??

*PG trb தமிழ் தேர்வு 29/09/2019 ஞாயிறு காலை 9 மணிக்கு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளேன். திருவள்ளூர்மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் சொரக்காயப்பேட்டை கிராமத்தில் என் வீடு அமைந்துள்ளது. என் அமைந்துள்ள இடத்திலிருந்து தேர்வுவமையமான கும்மிடிப்பூண்டிக்குச்செல்லவேண்டும்.*

*வீட்டிலிருந்து (10 நிமிட பயணத்தில்)5 கி.மீ. தூரத்தில் பொதட்டூர்பேட்டையில் 2 தேர்வு மையங்களும்*

*15 கி.மீ. தூரத்தில் R.K.பேட்டையில் ஒரு தேர்வு மையமும்*

*30 கி.மீ. தூரத்தில் திருத்தணியில் 2 தேர்வு மையங்களும்*

*65 கி.மீ.தூரத்தில் திருவள்ளூரில் 2 தேர்வு மையங்களும் மணவாளநகரில் 1 தேர்வு மையமும் உள்ளன*

*70 கி.மீ. தூரத்தில் ஆவடியில் 2 தேர்வு மையங்களும் 75 கி.மீ தூரத்தில் அம்பத்தூரில் 2 தேர்வு மையங்களும் உள்ளன* *ஆனால் 170 கி.மீ. தூரத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் தேர்வு மையம் அமைந்துள்ளதால் தேர்வு எழுதச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது*



*சொரக்காயப்பேட்டையிலிருந்து (பேருந்து)திருத்தணி செல்ல ஒன்னேகால் மணி நேரமும் திருத்தணியிலிருந்து சென்னை (ரயில்) செல்ல மூன்று மணி நேரமும் சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்ல ஒன்னரை மணி நேரமும் அங்கிருந்து தேர்வு மையம் தேடிச்செல்ல அரை மணி நேரமும் ஆகும்*

*ஆக வீட்டிலிருந்து தேர்வு மையம் செல்ல ஆறேகால் மணி நேரம் ஆகும் தேர்வு மையத்துக்கு 7:30 மணிக்குள் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் நள்ளிரவு ஒரு மணிக்கு புறப்பட்டால் மட்டுமே காலை 7:30 மணிக்கு தேர்வு மையம் செல்ல முடியும். ஆனால் அந்த நேரத்தில் எந்த வண்டியும் கிடையாது.முந்திய நாள் இரவு 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் மட்டுமே 9:30 மணிக்கு ரயிலில் ஏறி 12:30 க்கு சென்னையைஅடைந்து ஸ்டேஷனிலேயே அதிகாலை வரை அமர்ந்து 5 மணிக்கு புறப்பட்டு தேர்வு மையம் செல்ல முடியும் இவ்வளவு சிரமப்பட்டு தூக்கம் கெட்டு தேர்வு மையம் சென்று சிறப்பாக தேர்வெழுதமுடியுமா*

*வீட்டிற்கு அருகில் பொதட்டூர் R.K.பேட்டை திருத்தணி திருவள்ளூர் ஆவடி அம்பத்தூர் என அருகருகே 12 மையங்கள் இருக்கும்போது நீண்டதூரம் உள்ள கும்மிடிப்பூண்டியில் தேர்வு மையம் ஒதுக்கியது ஏன்*

*இரு சக்கரவாகனத்தில் 10 நிமிடத்தில் பொதட்டூர் தேர்வு மையத்துக்கும் 30 நிமிடத்தில் R.K.பேட்டைத் தேர்வு மையத்துக்கும் 45 நிமிடங்களில் திருத்தணிக்கும் ஒன்னரை மணி நேரத்தில் திருவள்ளூருக்கும் சென்று தேர்வெழுத வாய்ப்பிருக்கும்போது நான் ஏன் 12 மணிநேரம் கஷ்டப்பட்டு தேர்வெழுதவேண்டும்*



*இதை மனுவாக தயாரித்து இன்று திருவள்ளூர்  கலக்டரிடம் வழங்கி கோரிக்கை வைக்கப்போகிறேன்*



Siva tams Ldr tpt

Sunday, 22 September 2019

Biometric Attendance System BAS Installation Method

BIOMETRIC ATTENDANCE SYSTEM BAS  -INSTALLATION OF RD SERVICE ENABLE SETUP FOR WINDOWS DESKTOP DEVICE.





Download here – Full file…
https://drive.google.com/file/d/1KKl3M9U68ebP-RYSoKz4EcmUGIhCiADE/view?usp=drivesdk.

By Siva tams Ldr tpt


BIO-METRIC APP INSTALLED ®ISTRATION, DEVICE ACTIVATION, TRS INDIVIDUAL LOGIN, LEAVE APPLY ETC.

நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு -பயோமெட்ரிக் இன்ஸ்டாலேஷன் மற்றும் ஆக்டிவேஷன் பற்றி ஆசிரியர்களுக்காக எளிமையாக இங்கே பதிவிடப்பட்டுள்ளது

HOW TO USER REGISTRATION- BIO METRIC ONLINE PART 1

Click Here
https://youtu.be/lmyIYIaYXm8

BIO METRIC PART 2, AADHAR VERIFIED, DEVICE LOCATION, ADMIN, NODEL ADMIN Details

Click Here
https://youtu.be/a30GKm235GQ

BIO METRIC PART-3, SOFTWARE INSTALLATION

Click Here
https://youtu.be/hOXhXe9AJ9M

BIO METRIC- INDIVIDUAL EMPLOYEE LOGIN DETAILS.
Click Here
https://youtu.be/tmAwBwaXStY


 BIO METRIC ஆசிரியர்களின் விடுமுறையை எவ்வாறு பதிவிடுவது ?*

Click Here
https://youtu.be/jgrI05e0G-E 

Thanks to Mr.Thenarasu, Tiruvallur Dt.

By Siva tams ldr tpt
www.alltrstnsiva.blogspot.com

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதில் சிக்கல் : யாரும் கண்டு கொள்ளாததால் மாணவர்கள் ஏமாற்றம் ..தீர்வு ஏற்படுமா??..

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதில் சிக்கல் : யாரும் கண்டு கொள்ளாததால் மாணவர்கள் ஏமாற்றம் ....
2016,2017,2018 ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களனது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல்

THERE IS NO SCHEME AVAILABLE

என்றே வருகிறது விண்ணப்பத்தினை SUBMIT செய்ய முடியவில்லை.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே பிரச்சினை

கண்டுகொள்ளுமா??? பள்ளிக் கல்வித் துறை


*🛑NMMS -🛑 ஊக்கத்தொகை National Scholarship Portal மூலம் விண்ணப்பதில் உள்ள சில  பிரச்சனைகள், தீர்வுகள், தீர்க்க முடியாத தொழில்நுட்ப பிரச்சனைகள்.....*


*👉சில தெளிவுகள்:*
1. National Scholaship Portal (NSP) மூலம் ஒரு மாணவர் ஒரு திட்டத்தின் ஊக்கத்தொகை மட்டுமே பெற முடியும்.

2. இது மத்திய அரசால் மாணவர்களுக்கு நேரடியாக பண பலன் கிடைக்க நிர்வகிக்கப்படும் வலைதளம். தொடக்ககல்வி முதல் கல்லூரி வரை உள்ள அனைத்து ஊக்கத்தொகை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே வலைத்தளம்...

3. ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு பண பலன் பெற்று வழங்க வேண்டும்.

4.இந்த portal மூலம் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் கீழ் சிறுபான்மை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திட்ட உதவி தொகை விண்ணப்பித்து பெற்று நேரடியாக மாணவனின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.

5. ஏற்கனவே தொடக்ககல்வி முதல் தான் சிறுபான்மை வகுப்பினை சார்ந்ததின் காரணமாக NSP மூலம்
( Minority Scholarship)( வருடத்திற்கு 1000 ரூ) திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் ஒரு மாணவன் தன்னுடைய பழைய விண்ணப்பத்தை நீக்கி விட்டு அதனை விட பண பலன் அதிகம் உள்ள NMMS தேர்ச்சிக்கான (வருடத்திற்கு 12000) விண்ணப்பித்து பணம் பெற்று கொள்ளலாம்.. (ஆனால் முடியவில்லை)

6. இது மாணவனின் ஆதார் அட்டை  வங்கிகணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைந்த ஒரு விண்ணப்ப முறை..

7. NMMS தேர்வில் 2017- 18 க்கு முன்னால் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 தொகையும் அதற்கு பின்னால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12000 தொகையும் 4 வருடங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

8. Fresh registration செய்தவர்கள் ஓவ்வொரு வருடமும் renewal செய்ய வேணடும்.

*👉NMMS பணம் கிடைக்காமல் போக காரணம்..*

1. ஒவ்வொரு வருடமும் 8 ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அதே பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்றால் எளிதாக மாணவனை அடையாளம் கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.

2. ஆனால் 8 ம் வகுப்பு நடுநிலை பள்ளியில் பயின்று வேறு பள்ளியில் போய் சேரும் மாணவன் NMMS தேர்ச்சி பெற்று இருப்பதை அந்த புதிய பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்யாமல் இருப்பதன் மூலம் விண்ணப்பித்து பெறுவதில் சிக்கல் உள்ளது..

3. பல மாணவர்களுக்கு தான் NMMS தேர்ச்சி பெற்றுள்ளோம் என்பதே தெரியாமல் உள்ளது. இது புதிய பள்ளி மாறுவதில் உள்ள பிரச்சினை..

4. .மேலும் 11 மற்றும் 12 படிப்புக்கு வேறு பள்ளிக்கு செல்லும் போது ஏறத்தாழ முற்றிலுமாக மாணவனுடைய renewal விடுபட்டு போகிறது..

5. முனைப்புள்ள ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் இருந்து renewal மற்றும் fresh application செய்து வருகிறார்கள்..

6. வங்கி கணக்கு எண் தவறு மற்றும் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளதும் ஒரு காரணம்.

*தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்ச்னைகள்:*

1. சிறுபான்மை மாணவர்கள் NMMS தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு Minority Scholarship திட்டம் மட்டுமே NSP ல் விண்ணப்பிக்க முடிகிறது.. 2015-16 முதல் ஏராளமான மாணாக்கர்கள் online ல் விண்ணப்பிக்க இயலாமல் உள்ளனர்...

2. 2015- 2016 முதல் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு offline வழியில் விண்ணப்பித்தாக கூறி சில மாணவர்களுக்கு மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது... சில மாணவர்களுக்கு அதுவும் இல்லை.. தொழில் நுட்ப காரணங்களால் விண்ணப்பித்து பணம் பெறாத மாணவர்களுக்கு பணம் கிடைக்குமா? இன்று வரை அவர்களால் விண்ணப்பிக்க இயலவில்லை...

3. மாணவனின் பெயர் ஆதார் படி NMMS தேர்ச்சி அறிக்கையில் இருந்தால் ஆதார் மூலம் NSP ல் NMMs  விண்ணப்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை...

4. பெயர் மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்க இயலவில்லை... There is no scheme to apply for the information provided  என்று வருகிறது..

5. இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், renewal விடுப்பட்ட மாணவர்கள் ,fresh post metric NMMS விண்ணப்பிக்க இயலவில்லை..

6. இந்த பிரச்சினை தீர்க்க இயக்குநர் அய்யா  சுற்றறிக்கை அனுப்பிய குறிப்புகளில் ஆதார் மூலம் விண்ணப்பிக்க இயலவில்லை எனில் விண்ணப்பத்தை நீக்கி விட்டு மீண்டும் விண்ணப்பிக்கவும் என்று கூறியுள்ளார்.. மீண்டும் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறவில்லை.. குறிப்புக்கள் பின்பற்றினால் விண்ணப்பதில் எந்த பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் விண்ணப்பிக்க இயலவில்லை...

7. ஆகவே அனைத்து மாணவர்களும் NMMS விண்ணப்பிக்க, விடுப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க, சிறுபான்மை மாணவர்கள் minority விடுத்து NMMS, விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலையில் அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க ஆவணம் செய்யுமாறு சங்க நிர்வாகிகளை  பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....

8. தயவு செய்து இந்த பிரச்சனை மேல் கவனம் கொள்ள நடவடிக்கை எடுக்கவும்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்கள்,  விண்ணப்பிக்க ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்... நன்றி.

நன்றி.
மோ.பிரபாகரன்,ப.ஆ. கொரடாச்சேரி. திருவாரூர்

அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ.
திருப்பத்தூர் வேலூர்.

Wednesday, 18 September 2019

Teacher Attendance biometric Installed vedios..

ஆசிரியர்களின் விவரங்களை BIO METRIC வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ

VEDIO 1
https://www.youtube.com/watch?v=lmyIYIaYXm8

VEDIO 2
https://www.youtube.com/watch?v=a30GKm235GQ

VEDIO 3
https://www.youtube.com/watch?v=hOXhXe9AJ9M

THANKSENARASU.
SIVA TAMS LDR TPT.

Tuesday, 17 September 2019

biometric Teachers attendance registration method

ஆசிரியர்கள் BIO METRIC பதிவு எவ்வாறு செய்வது கணினியில் என்பதை விளக்கும் வழிமுறை...சிவா,திருப்பத்தூர்

Bio metric trs registration method

step 1
tndeotirupatturvel.attendance. gov.in

Or Click Here
https://tndeotirupatturvel.attendance.gov.in/

Left side you see

 

Click....User Registration
User name.........ஆதார் கார்டில் உள்ளவாறு உங்கள் பெயர்
Date of Birth......01-09-1970
Gender.......ஆண்
Enter Adhar no........1232 1321 3434
Email.........siva@gmail.com
Mobile no.......9894429770
Click Next


Show next window



Step 2

Organization name....(default DEO tpt)
User type......government
Division/Unit with Organization...
Designation.....deo-tirupattur
District....vellore
Office location.....pums jg schl
Organization user code....cps123213
Photograph..chose file
(Photo rezie below 150kb)
Enter the code exactly...eDr5re(show there)
Disclaimer...tick
Click ..Submit

Open new window show..



Registration completed successfully



Each and every teachers same above method in ur schl.



Siva tams Ldr Tpt.

Sunday, 15 September 2019

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட அறிவுரைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை

*💥💥பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்*

*💥💥சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கும் 14 அறிவுறுத்தல்கள்*

*💥💥தற்போது பருவமழை தொடங்கியுள்ள காரணத்தினால் அரசு மற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் முறைகள் பற்றிய கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன*

*💥💥1.மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துதல், குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும்*

*💥💥2. வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும்*

*💥💥3.வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை தலைமை ஆசிரியருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப் படவேண்டும். இதன்மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும்*

*💥💥4. நல்ல நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசுக்கள் உருவாகிறது என்றும், அக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால்தான் டெங்கு காய்ச்சல் உருவாகின்றது என்ற விழிப்புணர்வினையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்திலும் வீடுகளிலும் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்*

*💥💥5. பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்*

*💥💥6. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக நியமித்து பள்ளியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மற்றும் அவருடைய பெற்றோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்*

*💥💥7. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பள்ளி மற்றும் வீடுகளில் வீணாகத் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்*

*💥💥8. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு எப்போதும் சுகாதாரமான குடிநீரை மாணவர்கள் உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும்*

*💥💥9. டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்*

*💥💥10. பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும் தொற்று நோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்*

*💥💥11. நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள மாணவர்களை அறிவுறுத்துமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல் வேண்டும்*

*💥💥12. பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டது என்றாலும் அதை ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, பாதுகாவலருக்கோ தெரிவித்து பின்பு மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்*

*💥💥13. சுகாதாரம் மற்றும் தூய்மை முக்கியத்துவத்தின் அறிவுரைகளால் மாணவர்களிடம் காணப்படும் மாற்றம் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்*

*💥💥14. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட அறிவுரைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்*

*💥💥இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

Saturday, 14 September 2019

அரசு ஊழியரின் பரிதாப நிலைமையை எதிர்காலத்தில் பாருங்க. படியுங்க. புரியும்



*அரசு ஊழியரின் பரிதாப நிலைமையை எதிர்காலத்தில் பாருங்க.    படியுங்க.  புரியும்*

புதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்?

1.4.2003 அன்றுக்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் (Defined pension scheme) இல்லை என்றும், அதற்குப் பதிலாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

 *
 *புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுவது என்ன?*
*
ஓர் அரசு ஊழியர் பெறும் ஊதியத்தில் 10 % தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அதற்கு இணையாக 10 % தொகை அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.

   இந்தத் தொகைக்கு வட்டியாக ஆண்டுக்கு 8.7 % சேர்க்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையை மத்திய அரசின் Pension Fund Regularity and Development Authority (PFRDA)  இல் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு இந்தத் தொகையை இன்றுவரை செலுத்தவில்லை என்று PFRDA அறிக்கையில் கூறியிருக்கிறது.

PFRDA இந்தத் தொகையை கையாள Pension fund managers என்னும் ஒரு குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு நமது பணத்தை LIC, UTI முதலான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும். நமது பணத்துக்கு கூடுதல் வட்டி வந்தால், அது அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். நம் பணத்தை பாதுகாத்து வைக்கும் சேவை செய்வதற்கான கட்டணமாக  (service charge) எடுத்துக்கொள்ளும். அதில் நாம் எந்த உரிமையும் கோர முடியாது. (கேட்டால் நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள். அதனால், அதைப் பற்றி நாம் கேட்காமல் இருப்பது நல்லது)

   அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கில் நம் பணம் எவ்வளவு இருக்கிறது என்று நாம் CPS account statement – இல் எப்பொழுது வேண்டுமென்றாலும் பாரத்துக்கொள்ளாம்.

     சரி, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு என்ன கிடைக்கும்?   அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது CPS account statement கணக்கில் உள்ள பணத்தில் 60 சதவிகித பணத்தை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 40 சதவிகித பணத்தை LIC, UTI முதலான நிறுவனங்களிடம் கொடுப்பார்கள்.

 அவர்கள் அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வருமானம் அரசு ஊழியருக்கு வழங்கப்படும். எப்படி இருந்தாலும் அந்தத் தொகை அரசு ஊழியரின் வைப்புத் தொகைக்கு  10 சதவிகிதத்திற்கு மேல் இருக்காது. பங்கு சந்தையில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டாலோ, நாட்டில் பொருளாரா நெருக்கடி வந்தாலோ, அரசு ஊழியருக்கு எதுவும் கொடுக்க முடியாது. இந்தத் தகவல் PFRDA இணையதளத்தில் உள்ளது. அரசு ஊழியர், “என்னுடைய பணத்திற்கு 10 சதவிகித வட்டியாவது கொடுங்கள்” என்று கோர முடியாது.


    சரி, ஓய்வு பெறும் முன்பே, விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு  என்ன கிடைக்கும்?


   அவரது, CPS account இல் இருக்கும் பணத்தில் 20 சதவிகிதத் தொகை ரொக்கமாகக் கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதத் தொகையை மேற்படி கூறியது போலப் பங்கு சந்தையில் முதலீடு செய்து, லாபம் வந்தால் தருவார்கள். வராவிட்டால் எதுவும் தர மாட்டார்கள்.


   சரி, பங்குச் சந்தையில் நட்டம் ஏற்பட்டால் யார் அந்த நட்டத்தை ஏற்றுக்கொள்வது?

   நம் பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். நட்டம் நம் தலையில்தான் விழும். “நட்டம் ஏற்பட்டுவிட்டது பணம் கொடுங்கள்” என்று நம்மிடம் கேட்க மாட்டார்கள். மாறாக, நம்மைக் கேட்காமலேயே, நம் பணத்தில் கழித்துக்கொள்வார்கள். இதுதான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்.

   சரி, பொது நூலகத்துறையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
பொதுவாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னையே உதாரணமாக வைத்துச் சொல்கிறேன்.
 இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள மொத்தத் தொகை: ரூ.6,13,824.

   நான் ஓய்வு பெற உள்ள ஜூன் 2023 இல் என்னுடைய கணக்கில் இருக்கும்

 உத்தேசமான தொகை: ரூ.10,40,000
நான் ஓய்வு பெறும் நாளில் எனக்கு வழங்கப்படும் 60 % தொகை: ரூ. 6,24,000.

   அதன்பிறகு என் கணக்கில் இருக்கும் 40 % தொகை: = ரூ.4,16,000.
இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் தொகையில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது. என்னுடைய  40 % தொகையில் (ரூ.4,16,000) எப்படியும் 10 % க்குமேல் வட்டி தரமாட்டார்கள்.
     என்னுடைய 40 % தொகை      = ரூ.4,16,000
இதில் 10 % வட்டி என்று வைத்துக்கொண்டால் ஆண்டுக்கு= ரூ. 41,600

மாத ஓய்வூதியம் (12 ஆல் வகுத்தால்) = ரூ. 3,466

ஆக, நான் ஓய்வு பெறும்போது எனக்கு இந்த அரசு வழங்கும் ஓய்வூதியம் மாதம் ரூ. 3,466, அல்லது அதிகபட்சம் ரூ. 4,000.

2023 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் ரூ.4000 இருக்கும் போது, முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக இருக்கும்.

 2030 ஆம் ஆண்டு என்னுடைய ஓய்வூதியம் அதே ரூபாய்.4000தான். ஆனால், அன்றைக்கு முதியோர் உதவித்தொகை ரூ. 5000 ஆக இருக்கும்.
அரசு ஊழியர்களைவிட OAB வாங்குபவர்களே மேல் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

1.    இந்த நான்காயிரம் ரூபாயில் 2030ஆண்டு ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?

2.  நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகையில் 60 %, அதாவது ரூ. 6,24,000 எனக்கு வழங்கப்படும். இந்த பணத்திற்கு 2023 ஆண்டு வீடு வாங்க முடியுமா? இந்தத் தொகைக்கு 500 சதுர அடி நிலம் கூட வாங்க முடியாதே?

      CPS பணத்தில் கடன் பெறும் வசதி இல்லையே?  என்னிடம் CPS பணம் பிடிக்காமல் இருந்திருந்தால் அந்த பணத்தை அரசு அனுமதி பெற்ற சீட்டுக் நிறுவனத்தில் மாதச் சீட்டுப்போட்டு வெவ்வேறு சொத்துகளை வாங்கியிருந்தால், இன்றைக்கு என்னுடைய சொத்து மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி இருக்குமே?

    இவ்வளவுதான் பாதிப்பா? இதையும் பாருங்கள்:

இன்றைக்கு என்னுடைய CPS கணக்கில் உள்ள தொகை ரூ.6,13,824.
இதற்கு அரசாங்கம் எனக்குக் கொடுக்கும் வட்டி 8.7 %.
     என்னுடைய மகளைக் கல்லூரியில் சேர்க்க நான் சொசைட்டியில் பெற்ற கடன் 4 லட்சம்.
இதற்கு நான் கட்டும் வட்டி 12 %. பள்ளியில் படிக்கும்என்னுடைய மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த நான் வெளியில் தனிநபரிடம் வாங்கிய கடன் ஒரு லட்சம். இதற்கு நான் கொடுக்கும் வட்டி நூற்றுக்கு 2 ரூபாய். அதாவது 24 % வட்டி.

 நான் வாங்கியுள்ள 5 லட்சம் ரூபாய் கடனுக்கு நான் செலுத்தும் ஓர் ஆண்டு வட்டி ரூ. 72,000.
தமிழக அரசு என்னுடைய பணம் 5 லட்சத்திற்குக் கொடுக்கும் வட்டித்தொகை ரூ.43,500. என்னுடைய பணம் எனக்குக் கொடுக்கப்படாததால், எனக்கு இழப்பு ஆண்டுக்கு ரூ.28,500, மாதத்திற்கு ரூ.2,375.

   வட்டி என்பது விலைவாசி உயர்வின் அடிப்படையில் கொடுக்க வேண்டியது. இன்றைக்கு எல்லாப் பொருளும் ஆண்டுக்கு 20 % என்ற அடிப்படையில் விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் தரும் சொற்ப வட்டிக்காக நம் பணத்தை அவர்களிடம் விட்டுவைப்பது நமக்குத்தான் கேடானது.

    நாம் ஓய்வு பெறும்போது கொடுக்கும் பணத்தின் மதிப்பு மிகமிக குறைவாக இருக்கும். அதேபோல, அவர்கள் கொடுக்கும் ஓய்வூதியத்தில் வாடகை வீடு கூட கிடைக்காது.
   
     இதனால்தான், புதிய பென்ஷன் திட்டம் ஓர் ஏமாற்றுவேலை, வங்கி முதலாளிகளைச் செழிக்க வைக்க நம்மையெல்லாம் பலிகடா ஆக்குகிறார்கள் என்கிறோம்.

   புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத அரசு ஊழியர்களும், அரசு ஊழியர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளும் இதைச் சிந்திக்க வேண்டும்.

NMMS கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் online ல் பதிவு செய்ய உத்தரவு-இயக்குநர்



பள்ளி கல்வி - திட்ட ஆண்டு 2019-20 - மத்திய அரசின் உதவித்தொகைதிட்டம் - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (National Means-cum-MeritScholarship Scheme) தேர்ச்சி பெற்றமாணவ/மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் 30.09.2019 க்குள் பதிவேற்றம் செய்தல்அறிவுரை வழங்குதல் சார்பு!!

Friday, 13 September 2019

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!


மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைப் பள்ளி (நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய கருத்தாளர்கள் குழு மாநில கருத்தாளர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிப்பர். இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம்மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும்.இதற்காக மாநில அளவில் 6 பேர் கொண்ட கருத்தாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.




இதில் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு செப்.16 முதல் 21-ம் தேதி வரையும், மதுரை உட்பட இதர 16 மாவட்டங்களுக்கு 23 முதல் 28-ம் தேதி வரையும் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் அக்டோபர் மாதம் மாநில கருத்தாளர்கள் மூலம் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும்.

Siva tams Ldr Tpt

SBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு



இதன்படி, வங்கிக் கணக்கில் இருப்பு வைத்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறுவகைகளில் சர்வீஸ் கட்டணம் மாறப்போகிறது.
1. நகர்புறங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் வங்கிக்கணக்கில் மாதம் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம வைத்திருக்க வேண்டும் என்று நிலை இருந்தது. அது ரூ.3 ஆயிரமாகக் குறைப்படுகிறது. ஒருவேளை அந்த ரூ.3ஆயிரம் ரூபாயையும் குறைந்தபட்ச இருப்பாக பராமரிக்க இயலாமல், ரூ.1500 மட்டும் வைத்திருந்தால் ரூ.10 அபராதமும், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். 75 சதவீத குறைந்தபட்ச இருப்பும் இல்லாவிட்டால் ரூ.15 அபராதமும், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.




2. சிறிய நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் கணக்கு வைத்து இருப்போர் மாதம் குறைந்த பட்ச இருப்பாக ரூ.2 ஆயிரமும், கிராமப்புறங்களில் ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.





சிறிய நகரங்களில் வசிப்போர் தங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 50 சதவீதம் மட்டுமே வைத்திருந்தால் ரூ.7.50 ஜிஎஸ்டி வரியும், 75 சதவீதம் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காமல் இருந்தால், ரூ.10 அபராதம், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். 75 சதவீதத்துக்கு அதிகமானால் ரூ.12 அபராதம், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.





3. கிராமப்புறங்களில் உள்ள வங்கியில் குறைந்தபட்ச இருப்பு 50 சதவீதத்துக்கும் குறைந்தால் ரூ.5 அபராதமும் ஜிஎஸ்டி வரியும், 75 சதவீதமாகக்குறைந்தால் ரூ.7.50 அபராதமும், 75 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் ரூ.10 அபராதமும் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்
4. என்இஎப்டி(நெப்ட்) மூலம் பணம் அனுப்பும் கட்டணம் மாற்றப்படுகிறது. ரூ.10 ஆயிரம் வரை பணம் NEFT முறையில் அனுப்பினால் 2 ரூபாயும் ஜிஎஸ்டி வரியும், ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பரிமாற்றம் செய்தால் ரூ.20, ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.




5. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ஆர்டிஜிஎஸ் செய்தால் ரூ.20கட்டணம் ஜிஎஸ்டியும், ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆர்டிஜிஎஸ் செய்தால் ரூ.40 கட்டணம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.
6. ஒருவர் தன்னுடைய சேமிப்பு கணக்கில் இருந்து மாதத்துக்கு 3 முறை டெபாசிட், பணம் எடுத்தலுக்கு கட்டணம் இல்லை. அதன்பின் செய்யப்படும் பரிமாற்றத்துக்கு ரூ.50 கட்டணம், ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.




7. ஒருவர் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கி தவிர்த்து வேறு கிளையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
Siva tams Ldr Tpt